Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அபரிமிதமான அன்பு கொள்ளும் தாய் – குழந்தை ராசி சேர்க்கைகள்..! | Mother Child Zodiac Compatibility

Gowthami Subramani Updated:
அபரிமிதமான அன்பு கொள்ளும் தாய் – குழந்தை ராசி சேர்க்கைகள்..! | Mother Child Zodiac CompatibilityRepresentative Image.

உலகில் அனைத்துத் தாய்மார்களும், தங்களது குழந்தைகள் மீது அதீத அன்பு கொண்டு காணப்படுவார்கள். இதனை ராசி பலன்களை வைத்தும் தீர்மானிக்கலாம். அந்த வகையில், அபரிமிதமாக நேசிக்கும் தாய் – குழந்தை ராசி சேர்க்கைக்கான விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

தாய் – குழந்தை ராசி சேர்க்கை

குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான பந்தம் என்பது பிரிக்க முடியாத ஒன்று. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இது அழகானது. தாய்மார்கள் தங்களுடைய குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வதில் அதீத கவனம் கொண்டு விளங்குவர். அந்த வகையில், எந்தெந்த ராசிகள் கொண்ட தாய் – குழந்தை ராசி ஜோடிகள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள் என்பதை இதில் காணலாம்.

கடகம் மற்றும் மீனம்

கடக ராசி கொண்ட தாய்மார்கள், சிறந்த வளர்ப்பாளர்கள் ஆவார். இவர்களின் உள்ளுணர்வுகளுக்கு பெயர் பெற்றவர்கள் என்றே கூறலாம். ஏனெனில் தனது உள்ளுணர்வுகளை வைத்து குழந்தைகளின் தேவைகளை எப்போதும் அறிந்திருப்பர். அதே போல, மீனம் ராசி உள்ள குழந்தைகள் தங்கள் தாய்களைப் போலவே, உணர்திறனைக் கொண்டிருப்பர். இது இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்புப் பரிமாற்றத்தை எடுத்துக் கூறுகிறது.

சிம்மம் மற்றும் விருச்சிகம்

சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்கவர்களாகவே இருப்பவர். சிம்மம் ராசி தாய்கள் மற்றும் விருச்சிக ராசி குழந்தைகள் இருவருமே ஒருவருக்கொருவர் மிகுந்த உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பர். இருவரும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்லாதவாறு இருப்பர். மேலும், இவர்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், நாளின் இறுதியில் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் தேடுகிறார்கள்.

துலாம் மற்றும் ரிஷபம்

துலாம் ராசி தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளின் உறவில் சமநிலையைப் பேணுவர். அதே போலவே, ரிஷப ராசி குழந்தைகளும் தங்களுடைய தாய்மார்களுடனான உறவில் சமநிலையைப் பேணிக் காப்பர். இரு ராசிக்காரர்களும் ஒருவரையொருவர் அணுகி முற்றிலும் நட்பு பேணிக் காக்கின்றனர்.

கன்னி மற்றும் மகரம்

ஒரு விஷயத்தை எப்படி பார்ப்பது என்ற கண்ணோட்டத்தில், இந்த இரு ராசிக்காரர்களும் ஒன்றிணைவர். கன்னி ராசி தாய்மார்கள் மற்றும் மகர ராசி குழந்தைகள் இருவருக்கும் இடையேயான பிணைப்பு அதிகமாக இருக்கும். கன்னி ராசி தாய்மார்கள் தாங்கள் செய்யக்கூடிய எல்லாவற்றிலும் பாசத்தை நாடுவர். மகர ராசி குழந்தைமார்கள் அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் பகுத்தறிவு மூலம் அவர்கள் அடைய கன்னி ராசி தாய்மார்கள் உதவுவர்.

மேஷம் மற்றும் தனுசு

தன்னிச்சையான உணர்வு மற்றும் சாகச எண்ணம் போன்றவற்றால், மேஷ ராசி தாய்மார்களும், தனுசு ராசி குழந்தைகளும் பிணைக்கப்படுகின்றனர். இருவருக்கும் இடையே இருக்கும் வேடிக்கையான பிணைப்பு அவர்களுக்குள் ஆழமான தொடர்பை உண்டாக்குகிறது. இந்த இரு ராசிக்காரர்களுக்குமே வாழ்க்கையை மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்பதைத் தெரிந்து கொண்டிருப்பர். இதனால், இவர்களது உறவு மந்தமாவது என்பது இல்லாத ஒன்றாக அமைகிறது.

மிதுனம் மற்றும் கும்பம்

மிதுன ராசி தாய்மார்களும், கும்ப ராசி குழந்தைகளும் சொந்த வழியில் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்படுவர். இதில், மிதுன ராசி தாய்மார்கள் அழகான உரையாடல்காரர்களாக இருப்பர். மேலும், கும்ப ராசி குழந்தைகள் தங்கள் தாய்மார்கள் தங்களைப் பற்றி எப்படி சிறப்பாக உணர வைக்கிறார்கள் என்பதை அறிவர். இதனால், இந்த இரு ராசிக்காரர்களும் சரியான மற்றும் சிறந்த தாய் – சேய் ராசிக்காரர்கள் உருவாக்கப்படுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்