Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rasipalan Tomorrow: ஏராளமான பண வரவைக் காணும் அதிர்ஷ்டசாலி ராசிக்காரர் நீங்களா..! விருச்சிக ராசிக்கு இப்படி ஒருஅதிர்ஷ்டமா? ஜூன் 9, 2022 ராசிபலன்.!

Manoj Krishnamoorthi June 08, 2022 & 16:30 [IST]
Rasipalan Tomorrow: ஏராளமான பண வரவைக் காணும் அதிர்ஷ்டசாலி ராசிக்காரர் நீங்களா..! விருச்சிக ராசிக்கு இப்படி ஒருஅதிர்ஷ்டமா? ஜூன் 9, 2022 ராசிபலன்.!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                            Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 11:00- 12:00 வரை

மாலை:  -

Rasipalan Tomorrow

ALSO READ: மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசியின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

துலாம் (Libra 2022 Horoscope)

நிதானமாக இருந்தால் தவறுகள் நடக்காமல் வேகமான முன்னேறலாம் என்பதை உணர்ந்த நீங்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும், உங்கள் சக பணியாளரின் ஆதரவு அலுவலகத்தில் கிடைத்தாலும் இன்று மந்தமான நிலையே இருக்கும், இலக்கை முடிக்க முடியாது. வீட்டில் நல்ல புரிதல் இருக்கும். செல்வ நிலையில் அதீத கவனம் வேண்டும். பண இழப்பு நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியக் குறை இருக்கும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகலாம். உணவு பழக்கத்தில் குளிர்ச்சியான உணவைத் தவிர்க்கவும். கல்வி ஸ்தானம் நன்றாக உள்ளது. உதவி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீல நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

யதார்த்தமான நடத்தையால் பிறரைக் கவரும் உங்களுக்கு இன்று தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வெற்றிகரமான நாளாக இருக்கும், செல்வ வரவு அதிகமாகும். நிதி நிலை உயரும். உறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகமாகும். நண்பர்களின் மூலம் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பு ஆகும். வீட்டில் இன்பமாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், மனம் தைரியமாக இருப்பது போல் உணர்வீர்கள். தொலைதூர பயணம் செய்ய ஆர்வம் தோன்றும்.  மாணவர்கள் இன்று கல்வியில் கவனம் செலுத்த வேண்டும், கவனம் திசை மாறும். தன லாபம்!  

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்  

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Sagittarius 2022 Horoscope)

மாற்றங்களைக் கண்டு கலங்காத தைரியமான குணத்தைக் கொண்ட உங்களுக்கு இன்று விடாமுயற்சி அதிகமாகத் தேவைப்படும், உங்கள் அயராது உழைப்பு பணியிடத்தில் மதிப்பைத் தரும், நீங்கள் எடுக்கும் முயற்சி நல்ல பலன் அளிக்கும். குடும்பத்தில் நல்ல உறவு இருக்கும், பெற்றோரின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். திருமண வாழ்க்கையில் ஒற்றுமை அதிகமாகும். பூர்வீக சொத்துகளில் நிலவிய சிக்கல் தீரும்.  செலவுகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், ஆனால் அதை சமாளிக்கும் அளவு பணப் புழக்கம் கையில் இருக்கும். உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது. நன்மை!     

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 7

மகரம் (Capricorn 2022 Horoscope)

ஆடம்பரமான வாழ்க்கையில் நாட்டமில்லாத உங்களுக்கு இன்று மன ஆனந்தமாக இருக்கும், ஒரு சில மகர ராசிக்காரருக்கு எதிர்பார்க்காத செல்வ வரவு இன்பமான மன நிலையை அளிக்கும். குடும்பத்தில் அன்பாக நடக்க உதவும். வீட்டில் உள்ளவர்களின் விருப்பப்படி நடந்து அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள்.  காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும், நல்ல வரவேற்பு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும், ஆனால் அதிகமான உழைப்பு உடலை சோர்வாக்கும். அலுவலகத்தில் இன்று நிலை சரியில்லை, பணியைப் பற்றி முன்னதாகவே திட்டமிட வேண்டும். ஆனால் உங்கள்  நிதி நிலை நன்றாக உள்ளது. ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 6

கும்பம் (Aquarius 2022 Horoscope)

தெளிவான சிந்தனை கொண்ட உங்களுக்கு இன்று அதிகமான பொறுமை தேவையாகும், தொழில் வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது, திட்டமிட்டபடி பணியாற்ற முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுமையாக அனுசரித்து செல்வது குடும்பத்தில் நிம்மதியை உருவாக்கும். பணப்புழக்கம் கையில் குறைவாக இருக்கும். காதல் வாழ்க்கையில் வாக்குவாதம் மூலம் பிரச்சனைகள் தோன்றும், இன்று காதலிப்பவரின் மனதைக் காயப்படுத்துவீர்கள். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது, கை கால்களில் தசைப் பிடிப்பு போன்ற பிரச்சனைகள் வரும். சிக்கல்!  

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

மீனம்(Pisces 2022 Horoscope)

வாழ்வில் செழிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் கொண்ட உங்களுக்கு இன்று சாதகமான செயல்கள் அதிகமாக நடக்கும், உங்களின் சுய வளர்ச்சி நன்றாக இருக்கும், உத்தியோகஸ்தருக்கு பணியில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், முடிவு நல்லதாகவே அமையும். இன்று குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும், உடன்பிறப்புகளின் மூலம் ஆனந்தம் அடைவீர்கள். காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். நிதி வளர்ச்சி ஓரளவு நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை அமோகமாக உள்ளது, சிலர் ஊக்கத் தொகை பெற்று உற்சாகமாக இருப்பர். உடல்நலம் சிறப்பாக உள்ளது. பாசம்!  

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்