Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: சந்தோஷத்தின் உச்சத்தில் திளைக்கப்போகும் ராசிக்காரர் நீங்களா...! இன்னிக்கு உங்க காட்டில் அதிர்ஷ்ட மழைதான்.. ஜூன் 9, 2022 ராசிபலன்..!  

Manoj Krishnamoorthi June 08, 2022 & 16:20 [IST]
Nalaya Rasi Palan: சந்தோஷத்தின் உச்சத்தில் திளைக்கப்போகும் ராசிக்காரர் நீங்களா...! இன்னிக்கு உங்க காட்டில் அதிர்ஷ்ட மழைதான்.. ஜூன் 9, 2022 ராசிபலன்..!   Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                            Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 11:00- 12:00 வரை

மாலை:  -

Nalaya Rasi Palan

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கைக்கு கடினமான உழைப்பு தான் அடித்தளம் என்பதை உணர்ந்த உங்களுக்கு இன்றைய தினம் கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்,உறுதியான மன நிலை அமைதியான சூழலை உருவாக்க அதிகம் உழைக்கும். முக்கியமாக இலக்கை கைப்பற்றக் கடினமான உழைப்பு தேவைப்படும். காதல் வாழ்க்கையில் சுமுகமான உறவு இருக்கும், சில இனிமையான தருணங்கள் நிகழும். திருமண வாழ்க்கை நன்றாக உள்ளது. உடல்நலம் நன்றாக உள்ளது. நிதி நிலையில் வரவு இருக்கும், வருங்கால தேவைக்கு சேமித்து வைப்பீர்கள் அல்லது சொத்துகள் வாங்கும் சந்தர்பம் அமையும்.  நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

அமைதியான மன நிலையால் பல புதிய மாற்றங்களை நிகழ்த்தும் உங்களுக்கு இன்று வாழ்வின் முன்னேற்றத்தில் சில தடைகள் வரும், ஆனால் உங்கள் திடமான மனநிலையால் அதை சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும், சில பணி சம்பந்தமாக பயணம் செய்வர். சுய தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்துக்காகத் துணிச்சலான பல முடிவுகள் வேண்டியிருக்கும். இன்று குடும்பத்தில் கடுமையாக நடந்து கொள்வீர்கள், பொறுமை இழக்கும் சூழ்நிலை உருவாகும். இன்று வரவு செலவு என இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது, குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும் கையில் பணப்புழக்கம் என்பது சுத்தமாக இல்லாத நிலை உருவாகும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் சிறப்பாக இருக்கும், பாராட்டு பெறுவர். உங்களின் மனநிலை பதட்டமாக இருக்கும் உடல்நிலையை அளிக்கும்.  அமைதி தேவை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Gemini 2022 Horoscope)

அன்பான பேச்சும் கடுமையான உழைப்பும் கொண்ட நீங்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும், சில முக்கிய பொறுப்புகளைக் கிடப்பில் போடுவீர்கள். பணியிடத்தில் இன்று சாதகமான நிலை இருக்காது. கணவன் மனைவி உறவில்  தேவையற்ற வாக்குவாதம் சிறிய பிரிதலை உருவாக்கினாலும், குடும்பத்தின் ஒற்றுமையைப் பாதிக்காது இருப்பினும் பேசும் வார்த்தையில் கவனம் கொள்ள வேண்டும். பண வரவு இருந்தாலும் செலவு இருக்கும், உங்கள் தேவையற்ற செலவைக் குறைக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்,  சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை 

அதிர்ஷ்ட எண்: 1 

கடகம் (Cancer 2022 Horoscope)

மற்றவருக்கு உதவி செய்வதைப் பற்றி பெருமை பேசாத தன்னடக்கம் கொண்ட கடக ராசிக்காரரே இன்றைய தினம் உங்களுக்கு தொலில் வளர்ச்சியில் ஆரோக்கியமான நாளாக இருக்கும், குடும்பத்தினரின் அக்கறையான பார்வை மனதில் நிம்மதியை விதைக்கும். திருமண வாழ்க்கை சில இன்பமான தருணங்கள் நிகழும். உடல்நலம் நன்றாக இருக்கும், ஓய்வு குறையால் உடல் அசதி கொள்ளும். கல்வி நிலை நன்றாக உள்ளது, புதிய ஞானம் பெறுவதற்கான சிந்தனை அதிகமாக இருக்கும். செல்வ நிலை நன்றாக இருக்கும். அசதி! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் (Leo 2022 Horoscope)

திடமான மன நிலை கொண்ட உங்களுக்கு இன்று வாழ்வின் மொத்த சந்தோஷத்தையும் அடைந்ததுபோல மனம் நிறைவாக இருக்கும், வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் திறமையான தலைமை பணியிடத்தில் கடினமான வேலையைத் திறம்பட முடித்து பாராட்டு பெற உதவும், இருப்பினும் தவறு நடக்கும் சூழல் அதிகமாக உள்ளது கவனமாக இருக்க வேண்டும். இன்று பணப்புழக்கம் அவ்வளவு நன்றாக இல்லை. மேலும் உங்கள் குடும்பத்தினர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பர், ஆனால் நீங்கள் கோபத்தைக் காட்டுவீர்கள். கல்வியில் கவனக் குறைவு உருவாகும். இன்று ஆரோக்கியம்  சிறப்பாக இல்லை, ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கவனம்!  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Virgo 2022 Horoscope)

பிறரின் உதவியை நாடாது தன்னம்பிக்கையுடன் போராடும் உங்களுக்கு இன்று  பணியிடத்தில் சில அசௌகரியமான சூழல் நடக்கும், ஆனால் சமாளிக்கும் உறுதியான மனநிலை அதிகமாக இருக்கும். இன்று பணக் கஷ்டம் உருவாகும், எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் நண்பர்களின் உதவி மிகவும்  உதவியாக இருக்கும், நிதி வளர்ச்சியை மேம்படுத்தும். ஆரோக்கியம் சிறிய பிரச்சனைகள் இருக்கும். பயணத்தின்போது அனுபவம் வாய்ந்த பெரியோரின்  அறிமுகம் கிடைக்கும், அது தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். வெற்றி!  

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


துலாம் முதல் மீனம் வரையிலான அடுத்த 6 ராசியின்  ஜூன் 9, 2022  ராசிபலன்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்