Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்று மீன ராசிக்கு நல்ல நாள் தான் .... ஆனால்? 30.8.2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi August 29, 2022 & 14:50 [IST]
Nalaya Rasi Palan :  இன்று மீன ராசிக்கு நல்ல நாள் தான் .... ஆனால்? 30.8.2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 14 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (30.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 8:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (30.08.2022, செவ்வாய்க்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் முயற்சியில் சில தடங்கல் ஏற்படும், மனதில் குழப்பங்கள் நிலவும். பணியிடத்தில் திறமைக்கேற்ற அங்கிகாரம் கிடைப்பதில் தாமதம் ஆகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்காது. நிதி நிலையில் நெருக்கடி ஏற்படும். 

குடும்ப வாழ்க்கை வாக்குவாதத்துடன் இருந்தாலும் அன்பு குறையாது. மனம் நிம்மதி தேடும். நண்பர்களுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும், கவனத்துடன் செயல்பட வேண்டும். உறுதி! 

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்:  3

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இன்று துணிச்சல் அதிகமாக இருக்கும், வியாபாரத்தில் நினைத்த இலக்கை அடைய விடாமுயற்சியுடன் போராடுவீர். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு கூடும், மனம் நிம்மதி ஆகும். இன்று பெரிய லாபம் இருக்காது, ஆனால் செலவுகளை சமாளிக்க முடியும்.

இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் சந்தோஷம் அதிகமாகும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள்.  ஆசை! 

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு நிம்மதியான நாள், மனம் எந்த கவலை இல்லாமல்  வழக்கமான வேலைகளை செய்யும், அலுவலகத்தில் நட்பான அணுகுமுறை பல நன்மைகள் அளிக்கும். மாணவர்களுக்கு இன்று எதிர்பாராத உதவி கிடைக்கும். சிறப்பான பணப்புழக்கம் உண்டு. 

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். உறவினர் மூலம் சந்தோஷம் பிறக்கும். காதல் வாழ்கையில் நட்பான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஆதாயம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மிகவும் சிறப்பான நாள், செல்லுமிடம் எல்லாம் சிறப்பு என்பதுபோல் பல தடைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணியில் அத்திருப்தி ஏற்படும். ஆனால் பிறரின் உதவி நிலைமை சரி செய்யும் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும், ஓரளவு நல்ல பணப்புழக்கம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் அன்பான பேச்சு வார்த்தை வேண்டும். இனிமையான வார்த்தை குடும்பத்தில் நிம்மதி அளிக்கும். காதல் வாழ்வில் கோபம் உறவு விரிசலை உருவாக்கும். உடல்நலத்தில் வயிறு சார்ந்த பிரச்சனை வரலாம்.  லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  6

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு எதிர்பார்த்த வெற்றியைப் பெறக் கடினமான போராட்டம் இருக்கும், மனதில் பல எதிர்மறை எண்ணங்கள் உருவாகும்.  தன்னம்பிக்கை குறையும். சுற்றத்தாரின் ஆறுதல் உங்களுக்கு தெளிவு அளிக்கும், தொழிலில் உதவி அளிக்கும். நிதி சம்பந்தமான பிரச்சனை வந்து மறையு, செலவுகள் அதிகமாகும். 

வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும், கருத்து மோதல் உறவில் பெரிய விரிசல் அளிக்கும். நிதி பிரச்சனை வீட்டில் நிம்மதியைக் குறைக்கும். உடல்நலத்தில் பாதிப்பு இல்லை. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் தொழில் இன்று போதுமான அனுபவத்தை அளிக்கும், இன்று மனதில் ஏற்படும் தாக்கம் உங்களுக்கு நல்ல பாடமாக அமையும்.  அலுவலகத்தில் திருப்தி கிடைக்கும். பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருப்திகரமான பண வரவு உண்டு. 

வீட்டில் சந்தோஷமான சூழல் இருக்கும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். திருமணப் பந்தம் சிறப்பாக இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்