Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: இன்று இந்த ராசிக்காரருக்கு தொழிலில் கிடைக்கும் அசுர வளர்ச்சி...... ஆகஸ்ட் 8, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 07, 2022 & 14:00 [IST]
Nalaya Sirappu  Rasipalan: இன்று இந்த ராசிக்காரருக்கு தொழிலில் கிடைக்கும் அசுர வளர்ச்சி...... ஆகஸ்ட் 8, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Sirappu  Rasipalan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 23 ஆம் நாள் திங்கட்கிழமை (08.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம் - மீனம் வரை 6 ராசியின் பலன் கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:15 - 07:15 வரை

மாலை: 04:45- 05:45 வரை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (08.08.2022, திங்கள்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

லட்சியத்துடன் ஓடும் உங்களுக்கு  இன்று ஒருவரின் அறிவுரை  மன அழுத்தத்தைத் தீர்க்கும், வெளியில் சந்தோஷமாக இருந்தாலும் வேறு ஒருவரை மனம் நினைத்து வருத்தமடையும்.  ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும், தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  

காதல் விவகாரம் சுமாராக உள்ளது.  திருமண வாழ்வில் சிறப்பான நாளாகும். செலவு அதிகமாகும். நண்பர்களுடன் பொழுதை செலவிட முயற்சி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. யோகம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் 

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

கலை ஞானம் அதிகம் கொண்ட உங்களுக்கு இன்றைய தினம் நிதி நிலைமையில் லாப ஸ்தானமாக இருக்கிறது. நிலுவையில் நின்ற வேலைகளை இன்று செய்ய முடியும். மனதில் உருவாகும் எண்ணங்களால் நம்பிக்கை துளிர்விடும்.  தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வீட்டில் நட்பான அணுகுமுறை  இருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும், கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும் கவனமாக இருக்க வேண்டும். வளர்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 4

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

வெற்றி கிடைக்கும் வரை அயராது போராடும் உங்களுக்கு இன்றைய தினம் அதிக உணர்ச்சிவசப்படுவதால் சில வாய்ப்புகளை தவற விடுவீர்கள். பணியில் சில தவறுகள் ஏற்படக் கூடும். செலவு குறைவதால் இன்று பணம் கொஞ்சம் கையில் இருப்பதாக உணர்வீர்கள். 

குடும்பத்தில் அமைதி காப்பது நன்மை, கணவன் மனைவி உறவில் சில விரிசல் வரும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் வரும். உடல்நலத்தில் சிறிய தொல்லைகள் ஏற்படும். உணவு பழக்கத்தில் கவனம் கொள்ள வேண்டும். பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இயற்கையாகவே இரக்கக் குணம் அதிகமாகக் கொண்ட உங்களுக்கு திறமை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் அமையும்.  வியாபாரம் சுமுகமாக நடக்கும். செல்வ நிலையில் பாதிப்பு இல்லை, எதிர்கால சேமிப்பில் அக்கறை பிறக்கும். 

திருமண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும். நட்பு வட்டாரம் நன்மையைத் தரும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் காட்டுவதுடன் கல்வியிலும் முன்னேற்றம் காட்டுவார்கள். ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இலட்சியத்தின் மீது கவனம் கொண்ட  உங்களுக்கு  இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாகும், அலுவலக வேலைகளை வழக்கத்தை விட மிக வேகமாக செய்வீர்கள், உடன் வேலை செய்பவர் உதவியைப் பெறுவீர்.  

இல்லற வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சி உங்களைத் தொற்றிக் கொள்ளும். திருமணம் கைகூடும். மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதால் ஆரோக்கியம் மேம்படும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

எப்போதும் சந்தோஷமாக இருக்க நினைக்கும் மீன ராசிக்காரரே இன்று கைவைக்கும் காரியத்தில் ஜெயம் தான், செலவு ரொம்ப அதிகமாக இருக்கும்.  பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. நீங்கள் யதார்த்தமாகச் செய்யும் செயலின் விளைவு நன்மையாக இருக்கும்.

காதல் வாழ்க்கை செழிக்கும். குடும்பத்தினரின் அன்பு  மகிழ்ச்சியைத் தரும்.  நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 

 

 

 

 

 


 

   

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்