Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

கன்னி ராசிக்காரங்களுக்கு எல்லாத்துலயும் அதிர்ஷ்டம் தான் இன்னைக்கு.. ஆனா கடக ராசி நேயர்களே…. 13.9.2022 ராசிபலன்!

Gowthami Subramani September 12, 2022 & 14:00 [IST]
கன்னி ராசிக்காரங்களுக்கு எல்லாத்துலயும் அதிர்ஷ்டம் தான் இன்னைக்கு.. ஆனா கடக ராசி நேயர்களே…. 13.9.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

மங்களகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 28 ஆம் நாள் செவ்வாய்கிழமை (2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஏற்படும். மனதில் காணப்படும் பதடம் வெளிப்படாதவாறு பேச வேண்டும். பணி தொடர்பாக சில இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். கூடுதல் பணிகள் சுமையாக இருக்கும். புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது வெற்றியைத் தரும். பதட்டத்தைக் குறைக்க பிரார்த்தனை செய்தல், கடவுள் வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

https://lh4.googleusercontent.com/38VIz5LYmUH6-_ARnWgRi9owZws9_WBat_DFi2lqybRnu2IVelcT0j1b68uNumPpfw0DrvG2NDVyKRGwI-tfiHDu3BET7piMh7-lLFHXNQfGWG9B9_9n7MJ8QST6V4nPBRGUtRawWiLTt6HzJvsZS95gNPzfATl0mINOAzbKXbK0JB_Yfevazjchyg

உங்களிடம் உள்ள அகந்தையை வெளியேற்றுவது நல்லதாக அமையும். உறவில் மகிழ்ச்சி, அமைதி உள்ளிட்டவை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் திறந்து பேசுவது நன்மையைத் தரும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பதட்டம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று முன்னேற்றகரமான நாளாக அமைகிறது. அமைதியும், திருப்தியும் கிடைக்கும். இந்த நாள், நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க சரியான நாள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துவீர். குடும்ப உறுப்பினர்களுடனும், நண்பர்களுடனும் அதிகமான நேரத்தைச் செலவு செய்வீர்கள். ஒற்றுமை உண்டாகும்.

https://lh6.googleusercontent.com/sJWNBf6cgsiHgRWI82__5O1oO-QO2SNVlkVZzqZb-xPKM1wMfu-Fb-BZIzjgfoKP1ViiDXFAbu1opVlIHchsP6CKTjCNHD_GNdiIGDg-Iv4Gv96G06DMeETlXjLSbDxiofcF4z__7cmSaxBSMlYlpkqlVyw3EPdTLnz0Og4s3wcvRfQ-01ZCMlmuLg

மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். பண வரவு அதிகரிப்பதுடன், பணத்தை சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமை மேம்படும். முன்னேற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நற்பலன்களைத் தரக்கூடியதாக அமைகிறது. கடினமானவற்றையும் எளிதாக மேற்கொள்வீர்கள். தன்னம்பிக்கையால் வெற்றி அடைவீர்கள். பணியிடத்தில் சிறப்பாக பணிகளை மேற்கொண்டு, பாராட்டு பெறுவீர்கள். ஒழுங்கு முறையுடன் செயல்படுவீர்கள். எளிதில்  உயர்நிலை அடையக் கூடிய நாளாக இந்நாள் உள்ளது.

https://lh4.googleusercontent.com/crhYbFhyv1Aldz4hCo7l9kTKM2Qij8tlW_RFo5n_D_7XASos_inIqNX45963cAxahk8Osc0ku3w357cbwq11zRRH7lF8plh5cd7hm8HV6IeqzmRqOC5kvb1K1IEUTe9gvauue70yF54J1rtPxrc4X3P91Rcgw7dblAo85Hd-AiL1SsAtZw3XKydT5A

உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இனிமையான தருணங்களாக அமையும். முதலீடு செய்வதற்கான சரியா நாளாக இந்நாள் உள்ளது. லாபம் அடையும் நாளாகும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி காண இந்த நாள் சரியானதாக இல்லை. புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காணப்பட்டாலும், முயற்சிகள் வீணாகும். இருப்பினும், முயற்சியைக் கைவிடாது போராடுவீர்கள். பொறுமையுனும் இருப்பது மிக நல்லது. 

https://lh6.googleusercontent.com/Dq0G0fvRyrZFXqMSj7GVECZuYko3EzI6xKcjPVAg9zHjaTGdRscnQEgCPdTqGs3Pa9mU3H7-JiyAcIoboSXj1LIJ0jM6YKDYCO62yE9YbfJF5YCskorEVgC3WhmD1oxLH0X09B4gDCPVCm8wjeV3IM53ggndmqyt4fSBPH9e-ED-lk8OEBYjuzNkAQ

துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. பண வரவு குறைவாக இருக்கும். சிக்கனமாகச் செலவு செய்வது உத்தமம். அமைதியின்மை ஏற்படும் வாய்ப்புள்ளதால், ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கவனமுடன் இருப்பது நல்லது. பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்காது. செய்யும் செயலில் அதிக கவனம் தேவை. பேசுவதற்கு முன் யோசித்துப் பேசுவது நல்லது. மன அமைதிக்கு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நன்மை பயக்கும். சக பணியாளர்களைக் கையாள்வது கடினம். பொறுமையைக் கடைபிடிப்பது மிக நல்லது. 

https://lh3.googleusercontent.com/xknJqLHZEhoKV5d994EAbTjrMiSrIAvHq2hgVYVcPDO-Yr1upuG1H2cs9_SUZCydihFQF1qX1PJbcqVJ1f9q782vP7PnbcCkV6p_dQiFiq5Y2esVbCZbGBps-TFBgSTZS9eoXXpy92pjzj8dt2-X0rn9_eveWDJGNgKPc0OzwHWqbYC8214IwyezHw

திருமண வாழ்க்கையில் சுமூகமான உறவை மேற்கொள்வீர்கள். எதிர்மறை சிந்தனைகளிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். பணப் புழக்கம் குறைவாக உள்ளது. திடீர் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் அதிக அளவில் கவனம் தேவை.. கவனம்! 

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

வழக்கத்தை விட கூடுதல் நற்பலன்கள் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு பலன் அளிக்கக் கூடும். சிறிய முயற்சிகளும் வெற்றியைத் தரும். தொழில் சிறப்பான வளர்ச்சி அடைவீர்கள். பணியில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

https://lh5.googleusercontent.com/ENEvI4Fp4kCmXn8he6Udndf9TrUtXSb9RdPe46NtXk34iEDqt6zWhp_uIVMKml6paz4sVX36qi5H4KOSYUq0eYK9p7KS8qoIdJ9Efy5KrK-_p9acyE4IUjKRZQNLsSRAK1lhAlk3BCo7Q6BGyVOHM8Ij1VxF80xK7BnLGzrCT6m370s4NR95EGPP3w

புதிய பொருள்களை வாங்கக் கூடிய யோகம் உள்ளது. புதிய திட்டங்கள் போட்டு லாபத்தைப் பெறுவதற்கான யோகம் உண்டு. சாதகமான சூழ்நிலையாக இருப்பதால், மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிறப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

துலாம் முதம் மீனம் வரையிலான ராசிபலன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்