Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு சந்திராஷ்டமம் என்பதால் எந்த ஒரு செயலையும் நிதானத்தோடும், பொறுமையுடனும் கையாள வேண்டும்.. 13.9.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan September 12, 2022 & 13:30 [IST]
இந்த ராசியினருக்கு சந்திராஷ்டமம் என்பதால் எந்த ஒரு செயலையும் நிதானத்தோடும், பொறுமையுடனும் கையாள வேண்டும்.. 13.9.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

மங்களகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 28 ஆம் நாள் செவ்வாய்கிழமை (2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்!

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்க செய்யும் சில செயல்களில் இடையூறுகள் ஏற்படலாம். மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாக நேரிடும். எனவே, அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிக பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது.

நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் காணப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனால், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கு பதவி உயர்வு உண்டு. இருப்பினும் எதிலும் கவனம் தேவை. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

குடும்பத்தில் தேவையில்லாத மனசங்கடங்கள் ஏற்படலாம். எதிலும் நிம்மதியில்லாமல் இருப்பது போன்ற நிலை தோன்றும். எனவே, நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணி இடத்தில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. 

இன்றைய நாள் சந்திராஷ்டமம் என்பதால் எந்த ஒரு செயலையும் நிதானத்தோடும், பொறுமையுடனும் மேற்கொள்வது நல்லது. வெளியிலிருந்து வர வேண்டிய பணம் கைக்கு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான குழப்பங்கள் காணப்படும். எனவே, பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. வேலை செய்யும் இடத்தில் ஏமாற்றங்களோ அல்லது தடைகளோ ஏற்படலாம். 

வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. சிக்கல்! 

அதிர்ஷ்ட நிறம்:  பிரவுன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாள். தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள், கருத்துவேறுபாடு நீங்கி மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

இல்லற வாழ்வில் அன்பும், அக்கறையும் அதிகரித்து காணப்படும்.  சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். அதிர்ஷ்டம்! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்:  3

கும்பம் (Kumbam Nalaya Rasi Palan)

பணவரவு அமோகமாக இருக்கும். தொழில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் சின்ன சின்ன பிரச்சனைகளை தவிர்க்கலாம். புதிய நண்பர்களை சந்திப்பீர்கள்.

குடும்பத்தில் சுபக்காரியங்கள் நடைபெறும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். துணையுடன் நல்ல அணுகுமுறையை மேற்க்கொள்வது கருத்துவேறுபாட்டை தடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். வாக்குவாதங்களை தவிர்த்து நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.  சிலருக்கு ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறைந்து காணப்படும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. எனவே, பணத்தை கையாளும்போது கவனம் தேவை. அனுகூலம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்  

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்