Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan in Tamil: இந்த 3 ராசிக்காரர் கண்டிப்பா இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சியமாக உயர முடியும்...  வார ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 08, 2022 & 16:30 [IST]
Next Week Rasi Palan in Tamil: இந்த 3 ராசிக்காரர் கண்டிப்பா இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சியமாக உயர முடியும்...  வார ராசிபலன்!Representative Image.

சுபகிருது வருடம் ஆனி மாதம் 26 ஆம் நாள் முதல் 32 வரை (10:07:22- 16:07:22) வார ராசிபலனில் மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசிகள் அடையப் போகும் வார ராசிபலனும், அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைக் காணலாம். 

மேஷம்

பொது பலன்: இந்த வாரm உங்களுக்கு இருந்த நிதி பிரச்சனை ஓரளவு நிவர்த்தியாகும், கைமாற்றும் வியாபாரம் செய்யும் மேஷ ராசிக்காரருக்கு இந்த வாரம் மிகவும் சிறந்ததாக அமையும், உங்கள் மதிப்பு நன்றாக உயரும்.  தொழில் மாற்றம் சார்ந்த சிந்த்னைகள் அதிகரிக்கும்.  தந்தைவழியில் உங்களுக்கு ஆதாயம் பிறக்கும்.

வீட்டில் சந்தோஷத்துக்குக் குறை இருக்காது, இந்த வாரம் கிடைக்கும் பண வரவு உங்கள் நிடி நிலை அமோகமாக மாற்றும். 

அஸ்வினி:  புதிய சிந்தனைகள் பல தோன்றும், அதைச் செயலாக்கும் நேரம் அமையும். 

பரணி: தொழில் மாற்றம் உண்டு.

கிருத்திகை: மதிப்பு அதிகரிக்கும், புதுமையான அணுகுமுறையைக் கையாளுவீர்கள்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்:  சிவ வழிபாடு

பரிகாரம்: தினமும் சிவ நாமம் சொல்லி தினத்தைத் தொடங்க வேண்டும்.

ரிஷபம்

பொது பலன்: உங்களுக்கு இந்த வாரம் புதிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும், இதுவரை உங்கள் மனதில் உறுத்திய பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு பிறக்கும், உங்கள் ராசியில் சந்திரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பது பேச்சு திறமையை உயர்த்தி சாதகமான பலனை அளிக்கும். நிதி நிலை நன்றாக உள்ளது. 

வீட்டில் நிம்மதியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். பெற்றோரின் மனதைப் புரிந்து கொள்ளுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றம் கொள்ளும்.

கிருத்திகை: குடும்பத்தினர் மூலம் நன்மைகள் நடக்கும்.

மிருக ஸீரிஷம்: பண வரவு உண்டு, கையில் கொஞ்சம் பணப் புழக்கம் இருக்கும்.  

ரோகிணி: பேச்சு திறமையால் அபாரமான வெற்றி கொள்வீர்கள்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் லட்சுமி வழிபாடு செய்தல் வேண்டும்.

மிதுனம்

பொது பலன்: உங்களுக்கு இந்த வாரம் தொழில் ஸ்தானத்தில் மாற்றங்கள் நிகழும், நீண்ட காலமாக புதிய வேலையை எதிர்பார்க்கும் மிதுன ராசிக்காரருக்கு இந்த வாரம் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  கணமான நிதி நிலை இந்த வாரம் இருக்கும். 

குடும்பத்தில் சந்தோஷம் அதிகமாகும், கணவன் மனைவி உறவில் புரிதல் உண்டாகும், காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடல்நலத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.

மிருக ஸ்ரிஷம்:  தடைகள் நீங்கி அமைதியான மனநிலையைப் பெற முடியும்.

திருவாதிரை:  பண பிரச்சனைகள் குறையும்.

புனர் பூசம்: உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் பல நடக்கும். 

வழிபட வேண்டிய தெய்வம்: கிருஷ்ண பகவான் வழிபாடு

பரிகாரம்: கோமாத வழிபாடு செய்தல் நல்ல பலன் அளிக்கும்.

கடகம்

பொது பலன்: உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பண வரவு கணமாக இருக்கும், அதை சேமிக்க முடியாமல் வந்த இடம் தெரியாமல் மறையும். எந்த முடிவையும் அவசரபடாமல் பொறுமையாக எடுக்க வேண்டும்.

வீட்டில் அனைவரும் சகஜமாகக் கேலி கிண்டலுடன் ஆனந்தமாக பணியாற்றுவீர்கள். கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால் இந்த வாரம் கொஞ்சம் ஓய்வு நேரம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

புனர் பூசம்: இரண்டாம் தொழில் அமைத்து கொள்ளுவீர்கள், வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள்.

பூசம்: பழைய நண்பர்களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

ஆயில்யம்: முக்கியமான பொருட்களைக் கவனமாகப் பார்த்து கொள்ள வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ராகவேந்திரர்

பரிகாரம்: தினமும் காலை குல தெய்வ வழிபாடு செய்யவும், ஞாயிற்றுக்கிழமை பசுவுக்கு வெல்லம் கொடுக்க வேண்டும்.

சிம்மம்

பொது பலன்: உங்கள் கடினமான உழைப்புக்கு பயனாக இந்த வாரம் உங்களுக்கு தொழிலில் முக்கிய பதவி அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். இரத்த சொந்தத்தின் மூலம் உங்களுக்கு நன்மைகள் அதிகமாக நடக்கும். உங்களுக்கு தேவையான விஷயத்தை பெற சரியாக நேரத்தைப் பயன்படுத்தி கொள்வீர்கள்.  எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்.

வீட்டில் சந்தோஷத்துக்கு குறை இருக்காது, பெற்றோரின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு சில மருத்துவ செலவு வரும்.  கல்வி நிலையில் நினைத்தபடியான முன்னேற்றம் இருக்கும்.

மகம்:  தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

பூரம்: பதவி பட்டம் தேடி வரும்.

உத்திரம்: திருமணத் தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும். சுப நிகழ்ச்சி நடக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

பரிகாரம்: சூரியபகவான் வழிபாடு செய்தல் வேண்டும்.

கன்னி

பொது பலன்: உங்களுக்கு இந்த வாரம் உறுதியான மனநிலை இருக்கும்,  எந்த விஷயமானாலும் அதை தைரியமாக கையாளுவீர்கள். தொழிலில் பல தைரியமான செயல்கள் செய்து வருமானத்தை உயர்த்துவீர்கள். செல்வ நிலை அமோகமாக இருக்கும். பணியிடத்தில் பேச்சின் மூலம் அனைஅவரையும் கவர்ந்துவிடுவீர்கள்.

வீட்டிலிருந்த சிறிய பிரச்சனைகள் குறையும், குடும்பத்தில் நிம்மதி அதிகமாகும்.  வெற்றி பெற உழைப்பதால் இந்த ஓய்வு சற்று குறையும், உணவு பழக்கத்தில் கவனம் காட்ட வேண்டும். உடலில் மூட்டுகளில் வலிகள் ஏற்படும்.

உத்திரம்: வீட்டில் ஆனந்தம் குடி கொள்ளும்.

அஸ்தம்: தொழில் வளர்ச்சி அருமையாக இருக்கும்.

சித்திரை: ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பெருமாள் 

பரிகாரம்: வெள்ளை ஆடைகளைத் தானமாகக் கொடுக்க வேண்டும்.


PART 2: துலாம்- மீனம் அடுத்த 6 ராசியின் வார ராசிபலன் (10.07.2022- 16.07.2022)


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்