Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பாதி கஷ்டம்.. பாதி அதிர்ஷ்டம்.. பாத்து நடந்துகிட்டா பிரச்சனை இல்ல.. | Tamil New Year Rasi Palan 2023 Magaram

Nandhinipriya Ganeshan Updated:
பாதி கஷ்டம்.. பாதி அதிர்ஷ்டம்.. பாத்து நடந்துகிட்டா பிரச்சனை இல்ல.. | Tamil New Year Rasi Palan 2023 MagaramRepresentative Image.

அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் மகர ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம். 

பாதி கஷ்டம்.. பாதி அதிர்ஷ்டம்.. பாத்து நடந்துகிட்டா பிரச்சனை இல்ல.. | Tamil New Year Rasi Palan 2023 MagaramRepresentative Image

மகரம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2023:

மகர ராசியினரே! இந்த வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு நிறைய நற்பலன்களை கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்களாக சொந்த வீடு வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்று எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். புதியதாக வீடு, மனை வாங்க வேண்டும் நினைப்பவர்கள் தாராளமாக முயற்சிக்கலாம். உடலில் இருந்த ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் விலகும். தாயாருடன் சண்டையிட்டு பிரிந்திருந்த மகர ராசியினருக்கு மீண்டும் தாயுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு ஏற்படும். அக்டோபர் மாதத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

பாதி கஷ்டம்.. பாதி அதிர்ஷ்டம்.. பாத்து நடந்துகிட்டா பிரச்சனை இல்ல.. | Tamil New Year Rasi Palan 2023 MagaramRepresentative Image

தொழில் மந்தமாக இருந்தாலும் குடும்ப சூழ்நிலையை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு உண்டு. உத்தியோகத்தில் இருந்துவந்த பின்னடை, போட்டி, எதிர்ப்பு அனைத்தும் விலகி, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி இல்லாத சூழல் உருவாகும். அதேபோல், கடன் பிரச்சனையில் சிக்கிக்கொண்டிருந்தவர்களுக்கும் நிவாரணம் உண்டு. அக்டோபர் மாதத்திற்கு பிறகு திருமண யோகம் கை கூடி வரும். ஆனால், திருமணம் பல தடைகளை தாண்டி தான் நடக்கும். 

பாதி கஷ்டம்.. பாதி அதிர்ஷ்டம்.. பாத்து நடந்துகிட்டா பிரச்சனை இல்ல.. | Tamil New Year Rasi Palan 2023 MagaramRepresentative Image

சின்ன சின்ன தாமதத்திற்கு பிறகே புத்திர பாக்கியம் கிட்டும். எதிர்பாராத சிறு சிறு பணவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டு வாய்ப்புகளுக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. இளைய சகோதரர்களால் பல ஆதாயங்கள் ஏற்படும். 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்பதற்கு ஏற்ப சகோதரரின் உதவி தேடி வரும். இருந்தாலும், இந்த ஆண்டின் முதல் பகுதி வரை யாரிடமும் பகைத்து கொள்ள வேண்டும். தொழிலில் அதிக முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஆடம்பர செலவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்க வேண்டும். வாக்கு கொடுக்கும்போது, பணம் கொடுக்கல் வாங்கலிலும் மிக மிக கவனம் வேண்டும். மேலும் நல்லது நடக்க பைரவரை வழிபாடு செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்