Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan: இந்த வாரம் இந்த ராசிக்கு தான் மொத்த அதிர்ஷ்டம்.. அப்போ மத்த ராசிக்காரர் நிலைமை.. அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இதுதானா...! ஜூலை 10- 16 வார ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 09, 2022 & 18:25 [IST]
Next Week Rasi Palan: இந்த வாரம் இந்த ராசிக்கு தான் மொத்த அதிர்ஷ்டம்.. அப்போ மத்த ராசிக்காரர் நிலைமை.. அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இதுதானா...! ஜூலை 10- 16 வார ராசிபலன்!  Representative Image.

27 நட்சத்திர பலன் (10:07:2022)

சுபகிருது வருடம் ஆனி மாதம் 26 ஆம் நாள் முதல் 32 வரை (10:07:22- 16:07:22) வார ராசிபலனில் துலாம் முதல் மீனம் வரை  6 ராசிகள் இந்த வாரம் பெறப்போகும் வார ராசிபலனும் (Next Week Rasi Palan), அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை அறிய எங்கள் பக்கத்தை பின்தொடரவும்.


PART 1: மேஷம்- கன்னி முதல் 6 ராசியின் வார ராசிபலன் (10.07.2022- 16.07.2022)


துலாம்

பொது பலன்: உங்கள் ராசிக்கு இந்த வாரம் இறைவன் சார்ந்த சிந்தனைகள் அதிகமாக இருக்கும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மாற்றம் தொழிலில் நிகழும். சுய தொழில் செய்பவர்கள் செய்யும் மாற்றங்கள் நற்பலன் அளிக்கும். இந்த வாரம் நிச்சயமாக நெடுந்தூர பயணம் மேற்கொள்ளுவீர்கள். குழந்தை பாக்கியம் எதிர்பார்க்கும் அன்பர்களுக்கு குழந்தைபேறு கிடைக்கும். அலுவலகத்தில் செய்யும் வேலையில் கவனமாக இருந்தால் நேர விரையத்தை தடுக்கலாம்.

குடும்ப வாழ்க்கை அமோகமாக உள்ளது, திருமண தடை நீங்கும். நீண்ட காலமாக திருமண பந்தத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நல்ல நிதி நிலை உள்ளது.

சித்திரை: பயணம் செய்வீர்கள், சுப காரியத்தில் கலந்து கொள்ளுவீர்கள்.

சுவாதி: இந்த வாரம் மேற்கொள்ளும் நெடுந்தூர பயணம் உங்கள் மனதுக்கு நல்ல மாற்றமாக அமையும். தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்.

விசாகம்: கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீக ஸ்தலத்துக்கு செல்லுவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: நரசிம்மர்

பரிகாரம்: தினமும் காகத்துக்கு உணவளித்து பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும். 

விருச்சிகம்

பொது பலன்: மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி அவர்களுக்கு நன்மை அளித்தாலும், அதன் விளைவாக இந்த வாரம் உங்களுக்கு வீண் அலைச்சல் உருவாகும். தொழிலில் சில பிரச்சனைகள் வரும், மேலதிகாரியிடம் மோதல் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவு நன்றாக உள்ளது, செலவுகள் பெரியதாக இருக்காது.

குடும்ப வாழ்க்கையில் பெரியதாக சண்டைகள் இருக்காது, ஓரளவு நிம்மதி வீட்டில் இருக்கும். நண்பர்களின் மூலம் சிறிய தொல்லைகள் வரலாம். உடல்நலத்தில் அதிக கவனம் காட்ட வேண்டும். 

விசாகம்: குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடியும். 

கேட்டை: .ஆரோக்கிய பிரச்சனை வரும்.

அனுஷம்: எந்த செயல் செய்தாலும் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: குல தெய்வம்.

பரிகாரம்: பைரவருக்கு (நாய்களுக்கு) உணவளியுங்கள். 

தனுசு

பொது பலன்:  இந்த வாரம் கிடைக்கும் அறிமுகம், உங்கள் தொழிலில் முன்னேற்றம் கொள்ள உதவியாக இருக்கும். புதிய நட்பு கிடைக்கும், வாகனங்களில் சில மாற்றம் செய்யக்கூடிய தருணமாக அமையும். நிலையான பொருளாதார ஏற்றம் இருக்கும்.

இல்லற வாழ்வில் இன்பம் அதிகரிக்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மூல நட்சத்திரம்: பல நாட்களாக நடக்காமல் தடையாக இருந்த காரியம் வெற்றி கொள்ளும்.

பூராடம்: எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும், செல்வ ஸ்தானத்தில் சற்று செலவு இருக்கும்.

உத்திராடம்: கோயில் போன்ற புண்ணிய ஸ்தலத்தில் உங்களுக்கு ஒருசில நன்மைகள் நடக்கும். 

வழிபட வேண்டிய தெய்வம்:  குல தெய்வம்

பரிகாரம்: விஷ்ணு ஆலயம் செல்வது நன்மை அளிக்கும்.

மகரம்

பொது பலன்:  பல நாட்களாக மாற்றத்தை எதிர்பார்த்து  இது நிறைவேறாது என ஒதுக்கிய காரியம் இந்த வாரம் நடக்கும்.  வெற்றி பெறும் வரை அயராது போராடுவீர்கள். தேவையில்லாத வம்பு வழக்கில் மாட்டி கொள்ளுவீர்கள். நிதி நிலையில் அதிகபட்சமான ஆசைகள் இருக்கும். எதிர்பார்த்த பண வரவு உண்டு.

வீட்டில் சிறிய சண்டைகள் வரும். நண்பர்களின் பிரச்சனை வரும்.  ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும், கவனமாக இருங்கள். கல்வி நிலையில் அமோகமான முன்னேற்றம் இருக்கும்.

உத்திராடம்: தவிர்க்க முடியாத செலவு வரும், வீட்டில் சண்டைகள் வரும்.

திருவோணம்: உணவு விஷயத்தில் கவனம் காட்டுங்கள், அது தவறும்பட்சத்தில் ஆரோக்கிய கோளாறு ஏற்படும்.

அவிட்டம்: கல்வி ஸ்தானத்தில்  நல்ல வளர்ச்சி காண்பீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: வெங்கடாசலபதி

பரிகாரம்: சனிபகவானை நினைத்து எள்ளு தானம் செய்ய வேண்டும்.

கும்பம்

பொது பலன்: இந்த வாரம் உங்களுக்கு மனதிற்கு சந்தோஷமாக அமையும், தொழிலில் பிரமாண்ட வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் இந்த வாரம் வேலைகள் சுமுகமான நிலையில்  இருக்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உள்ளது.

 

வீட்டில் சகோதர வழியில் சிறிய அன்பு தொல்லைகள் வரும். காதல் வாழ்வில் சாதகமான முடிவுகள் ஏற்படும், காதல் வாழ்வு திருமண வாழ்க்கையாக மாற்றும் தருணமாக மாற்ற முடியும். குடும்பத்திலிருந்த விரிசல் சரியாகும். உடல்நலத்தில் சிறிய பிரச்சனைகள் வரும். 

சதயம்: வாழ்வியலில் நல்ல மாற்றம் ஏற்படும். 

அவிட்டம்: முக்கியமான ஆவணங்கள் சம்பந்த விவகாரத்தில் கவனம் காட்ட வேண்டும். 

பூரட்டாதி:  தொழிலில் பெரிய வளர்ச்சி இருக்கும். 

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

பரிகாரம்: தெய்வீக பணிகளுக்கு உங்களால் ஆன உதவிகள் செய்யுங்கள்.

மீனம்

பொது பலன்: இந்த வாரம் உங்களுக்கு லாபகரமான வாரமாக அமையும், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் மற்றும் வங்கி பணியாளருக்கு நன்மைகள் அதிகமாக நிலவும். திடமான பண வரவைக் காணலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். 

வீட்டில் சந்தோஷமாக இருந்தாலும், இந்த வாரம் அவ்வப்போது சிறிய ஊடல்கள் வரும். காதல் வாழ்க்கையில் அமைதியாக இருப்பது புதிய பிரச்சனையை உருவாக்காது. ஆரோக்கியத்தில் பிரச்சனை நல்ல உடல்நலத்தைப் பெற முடியும்.

பூரட்டாதி:  வீட்டில் இதுவரை இருந்த பிரச்சனை சற்று குறையும், நிம்மதி எட்டிப் பார்க்கும்.

உத்திரட்டாதி: சீரான உடல்நிலை இருக்கும்.

ரேவதி: வீட்டில் சுபகாரியம் செய்யப் போகிறீர்கள், சுப செலவுகள் இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: திருமால்

பரிகாரம்: கோமாதா பூஜை செய்தல் நன்மை அளிக்கும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்