Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan: இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர் இவரா....! வார ராசிபலன்...!

Manoj Krishnamoorthi June 18, 2022 & 10:30 [IST]
Next Week Rasi Palan: இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர் இவரா....! வார ராசிபலன்...!Representative Image.

சுபகிருது வருடம் ஆனி மாத முதல் வாரத்தின் (ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை) வார ராசிபலனில் (Next Week Rasi Palan) உங்கள் ராசிக்கு தொழில், ஆரோக்கியம், செல்வ நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது என்பதையும் கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர் யார் என்பதையும் காண்போம்.


Representative Image. மேலும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசியின் வார ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம்

பொது பலன்: உங்கள் ராசியில் இந்த வாரம் எதிர்பார்க்காத செலவு குடும்பத்தில் அதிகமாக உருவாகும், செல்வ நிலை வரவு உள்ளது, சேமிக்க முடியாது. வெளியில் செல்லும்போது கொஞ்சம் உஷாராக செல்ல வேண்டும்.  உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். எனவே, ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது பொறுமையாக இருப்பது மனம் நிம்மதிக்கு பாதிப்பு இல்லை. கல்வி நிலை சீறிய தடுமாற்றம் இருக்கும், மனம் தளராமல் படிக்க வேண்டும்.

சித்திரை: ஆரோக்கிய குறை இருக்கும்.

சுவாதி: வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்.

விசாகம்: வழக்கத்தை விட சற்று அதிகமான் செலவு இருக்கும்.   

வழிபட வேண்டிய தெய்வம்: ரங்கநாதர்

பரிகாரம்: சனிக்கிழமை அன்று காலையில் பெருமாள் நினைத்து தியானம் செய்து வழக்கமான வேலையை செய்ய வேண்டும்.

விருச்சிகம்

பொது பலன்: உங்கள் ராசியில் இந்த வாரம் மதிப்பு கூடும், அதிகமான சந்தோஷத்தில் திக்குமுக்கு ஆடிப்போவீர்கள். வீட்டில் கணவன் மனைவி உறவு மிகவும் சிறப்பாக இருக்கும், குடும்ப வாழ்க்கை மிகவும் நிம்மதியாக நகரும். வியாபாரத்தில் நல்ல வாடிக்கையாளரை சம்பாதிப்பீர்கள். தன லாபம் சிறப்பாக இருக்கும். இந்த வாரம் பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும். புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்பு இருக்கும். இளம்வயது விருச்சிக ராசியினருக்கு திருமண பாக்கியம்  உண்டாகும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது. தொழில் ஸ்தானத்தில் பிரச்சனை இல்லை. உடல்நலத்தில் சிறிய தொல்லைகள் இருக்கும்.

விசாகம்: குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

கேட்டை: வீட்டிலிருந்த பிரச்சனைகள் குறையும்.

அனுஷம்: தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும், பண தேவைகள் பூர்த்தியாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: புதன்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை படைக்க வேண்டும். 

தனுசு

பொது பலன்:  இந்த வாரம் நிலுவையில் வைத்த செயலை முழுமூச்சுடன் செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் மனம் நிம்மதி அடையும் வகையில் இந்த வாரம் நடப்பீர்கள். வீடு அல்லது வண்டி வாகனம் அல்லது வீட்டில் எதாவது புது பொருள் மாற்றம் ஏற்படும் யோகம் உள்ளது. தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது. கணமான பண வரவு உண்டு. உடல்நலம் நன்றாக உள்ளது. 

மூலம்: நல்ல பண வரவு இருக்கும், வாழ்வில் புதுவிதமான மாற்றமாக இருக்கும்.

பூராடம்: முன்னோரின் ஆசியால் நல்ல பலன் கிடைக்கும், எதிர்பார்க்காத சலுகைகள் கிடைக்கும்.

உத்திராடம்: புதிய மனிதர்களின் உதவி உங்கள் வாழ்வியலை உயர்த்தும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  குல தெய்வம்

பரிகாரம்: முன்னோர் வழிபாடு நல்ல வாழ்க்கை அளிக்கும்.

மகரம்

பொது பலன்:  உங்கள்  கலகலப்பான சுபாவத்துக்கு எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க இந்த வாரம் வழி செய்யும், பயணம் செய்வதால் உடல் சோர்வாக இருந்தாலும் மனம் நிம்மதியாக இருக்கும். இரத்த உறவின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.  மிகவும் சிறந்த பண வரவு இருக்கும். தொழிலில் பல புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். கல்வியில் ஆர்வம் குறையும். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். 

உத்திராடம்: இரத்த சொந்தத்தின் மூலம் நற்பலன் கிடைக்கும்.

திருவோணம்: பயணத்தின் மூலம் மனம் மகிழ்ச்சி அடையும்.

அவிட்டம்: வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். 

வழிபட வேண்டிய தெய்வம்: லட்சுமி தேவி

பரிகாரம்: தினமும் லட்சுமி தேவியை வணங்கி வழக்கமான செயல்களை செய்ய வேண்டும்.

கும்பம்

பொது பலன்:  இந்த வாரம் உங்களுக்கு லாபகரமான வாரமாக இருக்கும், பூர்வீக சொத்துகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். குடும்பத்தில் இந்த வாரம் கொஞ்சம் அமைதியான சூழலே நிலவும். மாணவர்களின் கல்வி நிலை அமோகமாக உள்ளது. ஆரோக்கியத்தில் திடீர் பிரச்சனை வரும். 

சதயம்: முன்னோரின் சொத்து கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அவிட்டம்: நல்ல செல்வ நிலை உங்கள் பணத் தேவையைப் பூர்த்தி செய்து அமைதியான மனநிலையைத் தரும்.

பூரட்டாதி: பண வரவு இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  முருகன்

பரிகாரம்: சஷ்டி தினத்தன்று முருகனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்கும்.

மீனம்

பொது பலன்: உங்களின் ஆசைகள் இந்த வாரம் நிறைவேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  இந்த வாரம் பண வரவு இருந்தாலும் கொஞ்சம் செலவு வரும். மனம் குழப்பங்கள் குறைந்து தெளிவான மனநிலை இருக்கும். தொழிலில் உங்கள் முக்கியத்துவம் ஓங்கி இருக்கும். உங்கள் பேச்சால் சில பிரச்சனைகள் உருவாகும் அதனால்  பொறுமையாக இருக்க வேண்டும். இடமாற்றம் உண்டு. உங்கள் வெளிப்படையான பேச்சு குடும்பத்தில் நிம்மதியைத் தரும், திருமண வாழ்வில் மனக் கசப்புகள் குறையும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

பூரட்டாதி: நிம்மதியான மனநிலை இருக்கும்.

உத்திரட்டாதி: நல்ல பண வரவு உண்டு. 

ரேவதி: பிரமாதமான தொழில் வளர்ச்சி உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

பரிகாரம்: பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்தல் நலமான வாழ்வை பெறலாம்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்