Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Rasi Palan in Tamil: இந்த வாரம் எதிர்பார்க்காத பல திருப்பங்களைச் சந்திக்கப் போகும் அந்த ராசிக்காரர் நீங்களா...! வாழ்வின் நிலை நிச்சயம் இந்த ராசிக்காரருக்கு மாறும்... வார ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 17, 2022 & 19:45 [IST]
Next Week Rasi Palan in Tamil: இந்த வாரம் எதிர்பார்க்காத பல திருப்பங்களைச் சந்திக்கப் போகும் அந்த ராசிக்காரர் நீங்களா...! வாழ்வின் நிலை நிச்சயம் இந்த ராசிக்காரருக்கு மாறும்... வார ராசிபலன்!Representative Image.

பொதுவாக நமக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய ஆவல் அதிகமாக இருக்கும், அதுவும் நம்ம வாழ்க்கையில் நமக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கையில் அடுத்த வாரம் என்ன நடக்கவுள்ளது என்ற ஆவல்.... எங்களுக்கு நன்றாக புரிகிறது, சுபகிருது வருடம் ஆனி மாதம் முதல் வாரத்தின் (19.06.2022- 25.06.2022) வார ராசிபலன் பற்றி அறிய வேண்டுமா...! அதற்கு இந்த வாசகத்தைப் பின்தொடர்ந்து படியுங்கள்.   

மேஷம்

பொது பலன்: இந்த வாரம் உங்க கையில் கணமான பணப் புழக்கம் இருக்கும், உங்கள் ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை அபாரமான பண வரவைத் தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களின் செல்வ நிலை நன்றாக உயரும். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உங்களின் பேச்சு திறமையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவீர்கள்.  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

அஸ்வினி: பண வரவு இருக்கும்.

பரணி: ஆடம்பர பொருட்கள் பல வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கிருத்திகை: பூர்வீக சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்:  பெருமாள் 

பரிகாரம்: சனிக்கிழமை காகத்துக்கு உணவளித்த பிறகு உணவு உட்கொள்ளவும்.

ரிஷபம்

பொது பலன்: இந்த வாரம் உங்களின் மதிப்பு அதிகமாக உயரும், மனதில் அமைதியான எண்ணங்கள் அதிகமாகத் தோன்றும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும், உங்களின் திறமையை வளர்த்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் உங்கள் முக்கியத்துவம் அதிகமாகத் தேவைப்படும். உடல்நலத்தில் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது. 

கிருத்திகை: உங்களின் பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

மிருக ஸீரிஷம்: தெளிவான மனநிலை இருக்கும்.

ரோகிணி: வீட்டிலுள்ள பெரியவர்களின் மூலம் பல ஆதாயங்கள் கிடைக்கும். 

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: லட்சுமி தேவி 

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று மாலைவேளையில் வீட்டில் கிழக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்.

மிதுனம்

பொது பலன்: உங்களின் வாழ்வில் இந்த வாரம் பல மாற்றங்கள் கிடைக்கும், தொழிலில் புதிய முயற்சிகள் பல செய்து முயற்சி செய்வீர்கள். புதிய தொழில்  செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கல்வி நிலையில் கொஞ்சம் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தோன்றும். 

குழந்தையில்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது, திருமண பாக்கியம் நடக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

மிருக ஸ்ரிஷம்: குடும்பத்தில் நிம்மதியாக இருப்பீர்கள்.

திருவாதிரை:  தெளிவான மனநிலை இருக்கும்.

புனர் பூசம்: நிலையான பண வரவு இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: தட்சணாமூர்த்தி

பரிகாரம்: வாரந்தோறும் தட்சணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை படைத்து வணங்க வேண்டும்.

கடகம்

பொது பலன்: உங்களுக்கு இந்த வாரத்தின் ஆரம்பம் சாதாரணமாக இருந்தாலும், சில மனக் கவலை இருக்கும். பின் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர்கள்,  பயணம் மேற்கொள்ளுவீர்கள். இரத்த சொந்தத்தின் மூலம் நல்லது அதிகமாகக் கிடைக்கும். நிலையான பண வரவு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.

புனர் பூசம்: உதவிகள் பலகிடைக்கும்.

பூசம்: ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்

ஆயில்யம்: திருமணம் கைகூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: பால் அல்லது பால் சம்பந்தப்பட்ட பொருட்களைத் தானமாகக் கொடுக்க வேண்டும்.

சிம்மம்

பொது பலன்: எதிர்பார்க்காத தன லாபம் இருக்கும், தொழிலில் இருக்கும் சிக்கல்கள் குறைந்து நல்ல வளர்ச்சி பெறும். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானம் மிகவும் சிறப்பாக உள்ளது. சுய தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும், வியாபாரம் அசுர வளர்ச்சி கொள்ளும்.  இரத்த காயம் ஏற்படும் வாய்ப்புள்ளது, எனவே கவனமாக நடக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் காட்ட வேண்டும். உடல்நலக் குறை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வீட்டில் நிம்மதியாக இருப்பீர்கள். 

மகம்:  செய்யும் காரியம் ஜெயம் கொள்ளும்.

பூரம்:  ஆரோக்கிய குறை உருவாகும்.

உத்திரம்: குடும்பத்தில் நிம்மதியான சூழல் இருக்கும், திருமண வயதினருக்கு திருமண பேச்சு சுபமாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: நரசிம்மர்

பரிகாரம்: பசு மாட்டிற்கு உணவளிக்க வேண்டும்.

கன்னி

பொது பலன்: இந்த வாரம் முழுவதும் சந்தோஷத்தில் திளைத்திருப்பீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பி விளையாடும். கணவன் மனைவி  உறவு இந்த வாரம் மிகவும் சந்தோஷமாக இருக்கும், நட்பு வட்டாரம் நன்மைகளை தரும். நல்ல பண வரவு இருக்கும். மன உறுதியுடன் நடக்க வேண்டும்.

உத்திரம்: தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்

அஸ்தம்: உதவிகள் கிடைக்கும்.

சித்திரை:  பிரச்சனைகள் குறைந்து இன்பமாக இருப்பீர்கள்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: வெங்கடாசலபதி

பரிகாரம்: ---


Representative Image. மேலும் படிக்க: துலாம் முதல் விருச்சிகம் வரை அடுத்த 6 ராசியின் வார ராசிபலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்