Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாத சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Patha Sani Pariharam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பாத சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Patha Sani Pariharam in TamilRepresentative Image.

பாத சனி என்றால் என்ன?

நவகிரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகவும், ஒரு ராசியில் அதிகம் காலம் சஞ்சாரம் செய்யும் கிரகமாகவும் இருப்பது சனி கிரகம் மட்டுமே. நீதிகாரகனாக விளங்கும் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசிக்கு வருகை தருவார். இவருடைய பெயர்ச்சியால் குறிப்பிட்ட ராசியினருக்கு பாத சனி, ஏழரை சனி, ஜென்ம சனி என பலவிதமான தோஷங்களை ஏற்படுத்துவார். அப்படி, ஒரு நபரின் ஜாதகத்தில் சனிக்கிரகம் அவரது ராசிக்கு 2 ஆம் வீட்டில் பெயர்ச்சியடைந்து, அந்த வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதை தான் "பாத சனி" என்பார்கள்.  

பாத சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Patha Sani Pariharam in TamilRepresentative Image

பாத சனி என்ன செய்யும்?

பாத சனியால் ஜென்ம சனி, அஷ்டம சனி போன்று கடுமையான பலன்கள் ஏற்படாது என்றாலும் கூட உடல் நல பாதிப்புகள், மனச்சோர்வு, பொருள் விரையம் போன்றவை அதிகம் ஏற்படும். அதேபோல், கல்வியிலும் பதவியிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பார்கள். 

வீடு கட்டுமான பணிகளை தொடங்கிய காலத்தில் ஒருவருக்கு பாத சனி ஏற்பட்டால், வீடு கட்டுமான பணிகளை முடிக்க சரியான வேலையாட்கள் இல்லாமல் வீட்டு வேலை பாதியிலேயே நிற்கும் ஏற்படும். பண நெருக்கடிகள் ஏற்படும்.

வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் தன் வாயாலேயே பல தேவையில்லாத பிரச்சனைகளை தேடிக்கொள்வார்கள். விரும்பி வாழ்ந்த வாழ்க்கையை வெறுத்து பேசுவார்கள். திருமண வாழ்க்கையில் அடிக்கடி இன்னல்களை ஏற்படுத்துவார். 

பாத சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Patha Sani Pariharam in TamilRepresentative Image

பாத சனி பரிகாரம்:

இருப்பினும், சில முறையான பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலமாக பாதிப்புகளை பாதியாக குறைக்க முடியும். பாத சனியால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்க்காணும் பரிகாரங்களை செய்து தப்பித்துக் கொள்ளுங்கள். 

  • சனிக்கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் சனிபகவானுக்கு நெய் தீபம் ஏற்றி, எள் சாதம் செய்து நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பின்னர், அந்த எள் சாதத்தை யாசகர்களுக்கு தானம் கொடுத்து, முடிந்த அளவுக்கு சிறிது பணத்தையும் சேர்த்து தானம் கொடுக்கலாம். 
  • தினமும் காலையில் காகங்கள் மற்றும் மற்ற பறவைகளுக்கு உணவளித்துவிட்டு அதன் பிறகு நீங்க சாப்பிடலாம். பணவசதி இருப்பவர்கள் வீட்டில் நவகிரக ஹோமம் நடத்தினால் பாத சனியின் தாக்கத்தை குறைக்கலாம். 
  • சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு, "ஹனுமன் சாலிசா" படித்து வந்தாலும் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். அதேபோல், சனிக்கிழமைகளில் அடர் நீல நிற ஆடைகளை உடுத்திக்கொள்ளுங்கள். இது சனி பகவானின் பரிபூரண ஆசியை பெற உதவும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்