Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜென்ம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Jenma Sani Pariharam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஜென்ம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Jenma Sani Pariharam in TamilRepresentative Image.

ஜோதிட சாஸ்திரத்தில் சனி, குரு, ராகு - கேது ஆகிய 3 கிரகங்களின் பெயர்ச்சிகளே முக்கியமானவையாக கருதப்படுகிறது. அதிலும், சனி பெயர்ச்சி என்றாலே எல்லோருக்கும் ஒருவிதமான பயம் இருக்கும். ஏனென்றால், நாம் தெரியாத தவறுகளுக்கும் தண்டனையை கொடுப்பவர் சனி பகவான் தான். இருப்பினும், சனி பகவானை போல் அருளை கொடுப்பவரை யாரும் கிடையாது. 

சனி பகவான் ஒவ்வொரு ராசிக்கு சுமார் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவார். ஒருவரின் ஜாதகத்தில் சனி கிரகத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பதை பொறுத்து அதன் பலன்கள் மாறுபடும். அந்தவகையில், ஜென்ம சனியால் ஏற்படும் பாதங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

ஜென்ம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Jenma Sani Pariharam in TamilRepresentative Image

ஜென்ம சனி என்றால் என்ன?

ஒரு நபரின் ஜாதகத்தில் அவருடைய லக்னத்திற்கு 12 ஆம் இடத்தில் இருக்கும் சனி கிரகம் அவரது ஜென்ம லக்னமாகிய 9 அம வீட்டில் பெயர்ச்சி ஆவதை தான் "ஜென்ம சனி" என்பார்கள். இரண்டரை ஆண்டு ஜென்ம லக்னத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவானால் ஜாதகக்காருக்கு பல விதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
 

ஜென்ம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Jenma Sani Pariharam in TamilRepresentative Image

ஜென்ம சனி என்ன செய்யும்?

அந்தவகையில், ஒருவருக்கு ஜென்ம சனி ஏற்பட்டால் அவர் ஜென்ம சனி காலத்தில் சந்திக்க போகும் பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம். 

ஒருவர் எவ்வளவு பிரபலமானவராக இருந்தாலும்கூட அவ்வப்போது பல்வேறு விமர்சனத்திற்கு ஆளாவார்கள். தேவையில்லாத மனக்கஷ்டங்கள் வந்துக்கொண்டே இருக்கும். கூடபிறந்த சகோதர சகோதரிகள், உறவினர்களுடன் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடிய சூழல் உருவாகும். 

வியாபாரத்தில் எவ்வளவு முயற்சி செய்தாலும் தொழிலில் நஷ்டத்திலேயே போகும். பல விஷயங்களுக்கு பிறரின் உதவி கிடைக்காமல் திணறுவீர்கள். அனைத்து காரியங்களையும் நீங்களே செய்ய வேண்டிய நிலை வரும்.

விலைஉயர்ந்த பொருட்கள் திருட போகலாம். சிலருக்கு விபரீத எண்ணங்கள் கூட தோன்றும். பணியிடத்தில் வீண் விவாதங்கள் ஏற்படும். சகபணியாளர்களுடன் மனசிக்கல்கள் ஏற்படும். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் திடீர் சறுக்கல் ஏற்படும்.

கூட்டுத்தொழில் செய்பவர்களாக இருந்தால், உங்களின் கூட்டாளியால் அடிக்கடி பிரச்சனைகள் வரும். இதனால், இருவருக்கும் இடையே மனக்கஷ்டங்கள் ஏற்படும். திருமண வாழ்க்கையில் அடிக்கடி மோதல்கள் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு சரியான வேலை அமையாது. 

ஜென்ம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Jenma Sani Pariharam in TamilRepresentative Image

ஜென்ம சனி பரிகாரம்:

இருப்பினும், ஜென்ம சனி காலத்தில் முறையான பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் தீய பலன்கள் அதிகம் ஏற்படாமல், நற்பலன்களை பெற முடியும். அதற்கு நீங்க செய்ய வேண்டியது,

  • வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று நெய் தீபங்கள் ஏற்றி, அனுமன் சாலிசா மற்றும் சனி பகவானுக்கு உரிய மூல மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.
  • புதன்கிழமை தோறும் விநாயக பெருமானை வழிபாடு செய்து வர உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். அதேபோல், கோவில்களுக்கு தீப என்ணெய் தானமாக வழங்கி வரலாம். 
  • மாதத்தில் ஒரு சனிக்கிழமை ஒருவேளை மட்டும் உணவு உண்ணாமல் சனி பகவானுக்கு விரதம் இருந்து, கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு கருப்பு எள் கலந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபடும்போது சனி பகவானின் விக்கிரகத்தை சுற்றி வந்து வழிபடவோ, நெடுஞ்சாண்கிடையாக படுத்து வழிபடவோ கூடாது. இதை மட்டும் மறந்துவிடாதீர்கள். 
  • வியாழக்கிழமை தோறும் தட்சணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும். அல்லது ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்யலாம். மேலும், தினமும் "ஓம் சத்குருவே நம" என்ற மந்திரத்தை 12 முறை சொல்வதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை கொடுக்கும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்