Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Mesham : மேஷ ராசிக்கு புரட்டாசி எப்படி இருக்கும்..?

Manoj Krishnamoorthi September 14, 2022 & 10:30 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Mesham : மேஷ ராசிக்கு புரட்டாசி எப்படி இருக்கும்..?Representative Image.

திறமைகளின் அதிபதியாக திகழும் மேஷ ராசிக்காரரே சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 2022 ( Puratasi Matha 2022 Rasi Palan In Tamil), சூரியன் பகவான் தன் சொந்தவீடான சிம்மத்தில் இருந்து கன்னி நிலை கொள்வதால் ஏற்படும் பலன் பற்றி அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

மேஷம்  புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Mesham)

பொது பலன்: 

உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் இந்த மாதம் குதுகலமாக இருக்கும். ராசியின் அதிபதி செவ்வாய் சாதகமாக இருப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். முக்கியமான முடிவு எடுப்பதில் மனம் தடுமாறும். 

குடும்ப  வாழ்க்கை: 

குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் சிறிய ஊடல்கள் வந்து மறையும், அனுசரித்து செல்தல் உறவைக் காக்கும்.  குழந்தை பேறு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருந்த சிக்கல்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். 

தொழில்: 

தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். சுய தொழில் செய்யும் மேஷ ராசிக்காரருக்கு நல்ல பண வரவு உண்டு. 6 ஆம் வீட்டில் இருக்கும் சூரியன் தொழில் சார்ந்த பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அளிப்பார். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், உயர்கல்விக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு உள்ளது. செல்வ நிலை இந்த மாதத்தில் உயரும். 

உடல்நலம்: 

சூரியன் ஆறாம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் உணவு பழக்கத்தால் உடல் சூடு பிரச்சனை வரலாம். சிலருக்கு எலும்பு சார்ந்த தொல்லைகள் உருவாகலாம். 

சந்திராஷ்டமம்:

செப்டம்பர் 15, 16

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்