Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

Thulam Love Horoscope In Tamil : துலாம் ராசிக்காரர் இந்த 4 ராசிக்காரரே லவ் பண்ணா லைவ் செட்டில்..!

Manoj Krishnamoorthi September 13, 2022 & 17:10 [IST]
Thulam Love Horoscope In Tamil : துலாம் ராசிக்காரர் இந்த 4 ராசிக்காரரே லவ் பண்ணா லைவ் செட்டில்..!Representative Image.

காதல் என்னும் உணர்வு எப்போது யார் மேல் வரும் என்பது யாருக்கும் தெரியாது. இருப்பினும் ஜோதிட சாஸ்திரம் எந்த ராசிகள் சிறந்த ஜோடியாக இருக்க முடியும் என்பதை வகுத்து வைத்துள்ளது. அனைத்து தரப்பு மக்களிடமும் யதார்த்தமாக பழகும் குணம் கொண்ட துலாம் ராசிக்காரருக்கு பெரும்பாலும் அனைத்து ராசியிடம் ஒத்துப்போகும் குணம் கொண்டவர். இவருக்கு எந்த ராசிக்காரர் சிறந்த காதல் ஜோடியாக இருக்கும், இவருக்கு எந்த ராசிக்காரர் சிறந்த திருமண ஜோடியாக இருக்கும் என்பதை அறிய இந்த பதிவை பின்தொடரவும்.

துலாம் ராசிக்கு ஏற்ற காதல் ராசிகள் (Thulam Best Match Rasi In Tamil )

எப்போதும் முகத்தில் புன்னகையுடன் அனைத்து தரப்பு மக்களிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட துலாம் ராசியினரை அனைவருக்கும் பிடிக்கும். 

1. மேஷம்

எப்போதும் நேர்மையாக வாக்கு தவறாமல் இருக்கும் துலாம் ராசிக்கு மேஷ ராசி சிறந்த ஜோடியாக இருக்கும். இவ்விரு ராசியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் துலாம் ராசிக்கு சம பலமான மேஷ ராசி நல்ல ஜோடியாக அமையும். 

2. ரிஷபம்

சுக்கிர பகவானை ராசியின் அதிபதியாகக் கொண்ட துலாம் மற்றும் ரிஷபம் நல்ல ஜோடியாக இருக்கும். இவர்களுக்குள் நல்ல மனப்பொருத்தம் இருக்கும். இந்த இரு ராசியினரும்  ஒருவரை ஒருவர் அக்கறையாகப் பார்த்து கொள்ளுவர்.

3. மிதுனம் 

புதன் பகவானின் ஆதிக்கம் கொண்ட மிதுன ராசிக்காரரின் அறிவுப்பூர்வமான செயல் துலாம் ராசிக்கு ஈர்ப்பு அளிக்கும். இவ்விரு ராசியின் பேச்சாற்றல் இவர்களுக்குள் நல்ல உறவை அமைத்துவிடும். சிறந்த மனிதர்களுடன் நட்பு பாராட்ட விரும்பும் துலாம் ராசிக்கு மிதுனம் நல்ல ஜோடியாக அமையும். 

4. மகரம் 

கலகலப்புக்கு பஞ்சமில்லாத மகர ராசிக்காரர் துலாம் ராசிக்கு நல்ல ஜோடியாக இருப்பார்.  துலாம் ராசியின் அதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகம் சனி பகவான், எனவே மகர ராசிக்காரர்கள் துலாம் ராசியிடம் நட்பாகப் பழகுவார். இவர்கள் ஜோடியில் மகிழ்ச்சிக்கு குறையே இருக்காது.  

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்