Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Mithunam : குருவின் பார்வை மீது புதன்  இருப்பது மிதுனத்துக்கு யோகம் அளிக்குமா...!

Manoj Krishnamoorthi September 14, 2022 & 12:00 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Mithunam : குருவின் பார்வை மீது புதன்  இருப்பது மிதுனத்துக்கு யோகம் அளிக்குமா...!Representative Image.

அனைத்து தரப்பு ராசியினரையும் ஈர்க்கும் பேச்சாற்றல் கொண்ட மிதுன ராசிக்காரருக்கு 2022 புரட்டாசி மாதத்தில் 4 இல் புதன்,5 இல் கேது,  10 இல் குரு ஆட்சி, 11 இல் இராகு இருப்பதால் உங்களுக்கு என்ன பலன் அளிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ள இந்த வாசகத்தைப் பின்தொடரவும்.

மிதுனம்  புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Mithunam) 

பொது பலன்: 

உங்கள்  ராசிக்கு குரு பார்வை 2 மற்றும் 6 இல் இருப்பது மிகப்பெரிய பலமாக அமையும். புதனின் உச்சம் உங்களுக்கு கௌரவம் அளிக்கும், செல்வாக்கு கூடும்.  குடும்பத்தில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். 

குடும்ப  வாழ்க்கை:

பூர்வீக சொத்து சார்ந்த சண்டை ஏற்படும். திருமண கைகூடும், நண்பர்களின் மூலம் நன்மை உண்டு. இரத்த சொந்தத்தின் மூலம் செலவு ஏற்படும். குழந்தைகளின் வாழ்க்கைக்கு நல்ல முடிவுகள் எடுப்பீர்.  உறவினர் மூலம் ஆதரவு உண்டு. 

தொழில்: 

தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும். குருவின் பார்வை புதன் மீது இருப்பதால் கல்வியில் அருமையான முன்னேற்றம் அளிக்கும். சுய தொழிலில் உங்களுக்கு நாணயமான மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு  கிடைக்கும்.  11 இல் இராகு இருப்பது நல்ல பணப்புழக்கம் அளிக்கும், வருமானம் உயரும். அசையா சொத்து வாங்கும் நிலை ஏற்படும். 

உடல்நலம்: 

உங்களுக்கு சிறப்பான ஆரோக்கியம் உண்டு. தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். தெளிவான மனநிலை உண்டு. 

சந்திராஷ்டமம்:

செப்டம்பர் 17, 18, 19

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்