Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Rishabam : குருவின் பார்வை ரிஷப ராசிக்கு யோகம் அளிக்குமா...!

Manoj Krishnamoorthi September 14, 2022 & 11:15 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Rishabam : குருவின் பார்வை ரிஷப ராசிக்கு யோகம் அளிக்குமா...!Representative Image.

மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறும் வரை அயராது உழைக்கும் பிடிவாதம் கொண்ட ரிஷப ராசிக்காரரே 2022 புரட்டாசி மாதம் உங்கள் ராசியில் சூரியன் மற்றும் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கிறதா என்பதை பற்றி அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும்.

ரிஷபம்  புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Rishabam)

பொது பலன்: 

உங்களுக்கு மாதத்தின் முதல் பாதியில் குரு 4 ஆம் வீட்டிலும் பின் 5 ஆம் வீட்டிலும் இருக்கிறது நன்மை அளிக்கும், மேலும் குருவின் பார்வை ராசியின் அதிபதி சுக்கிரன் மீது இருப்பது சுப பலன் அளிக்கும்.  

குடும்ப  வாழ்க்கை:

செவ்வாய் பகவான் 7 ஆம் வீட்டில் இருப்பது கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். காதல் விவகாரத்தில் கவனம் தேவை. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண யோகம் உண்டு.  சூரியன் கன்னியில் இருப்பது குடும்பத்தில் சில மன வருத்தம் அளிக்கும், முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் நிதானமாக இருக்க வேண்டும். உறவினர் மத்தியில் கோபம் ஆகாமல் பொறுமையாக இருக்க வேண்டும். 

தொழில்: 

செவ்வாயின் சாதகமான பார்வை கூட்டு தொழில்காரர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும், தொழிலில் நல்ல மாற்றம் உண்டு. திருப்திகரமான பணப்புழக்கம் உண்டு. புதனின் உச்சம் உங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் அளிக்கும். வண்டி வாகனம் வாங்கும் யோக உண்டு. ஆறாம் வீட்டில் இருக்கும் கேது கடன் தொல்லையைக் குறையும்.

உடல்நலம்: 

ஆரோக்கியம் ஏற்றம் இறக்கமாக இருக்கும், உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குழப்பமான மனநிலை இருப்பதால் யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டும். 

சந்திராஷ்டமம்:

செப்டம்பர் 16, 17

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்