Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூட்டுத் தொழிலில் இருந்தால் கவனமாக இருங்கள்! | Purattasi Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
கூட்டுத் தொழிலில் இருந்தால் கவனமாக இருங்கள்! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

புரட்டாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

புரட்டாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் வக்கிர நிலையில் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புரட்டாசி 14 ஆம் தேதி கடக ராசியில் இருக்கும் சுக்கிரன் சிம்ம ராசிக்கும், சிம்ம ராசியில் இருக்கும் புதன் கன்னி ராசிக்கும் மற்றும் புரட்டாசி 16  கன்னி ராசியில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்கும் சஞ்சாரம் செய்கின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் புரட்டாசி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

கூட்டுத் தொழிலில் இருந்தால் கவனமாக இருங்கள்! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 கடகம்:

இந்த புரட்டாசி மாதம் கடக ராசியினருக்கு மகிழ்ச்சியான மாதமாக அமையும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் நினைத்தது நிறைவேறும். புது வேலைக்கான முயற்சியில் இருந்தால் நல்ல வாய்ப்பு அமையும். இழுபறியாக இருந்த வழக்கு பிரச்சனை சாதகமாக முடியும். தைராய்டு, சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். தம்பதிகளுக்கு இடையே திருப்தி இல்லாத சூழல் ஏற்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளித்து மாட்டிக்கொள்ளாதீர்கள். தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல தொடக்கம் ஏற்படும்.

கூட்டுத் தொழிலில் இருந்தால் கவனமாக இருங்கள்! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 சிம்மம்:

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வேலை சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சரியான வாய்ப்பு அமையும். முயற்சிக்கான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலை இடமாற்றத்திற்கான சூழல் உண்டாகும். பல வருடமாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு முடிவுக்கு வரும். கடன் உதவி கிடைக்கும். போட்டித் தேர்வில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மறைமுக எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வராத பணவரவு வந்து சேரும். உயர்கல்வி சார்ந்த விஷயங்கள் கைகூடும்.

கூட்டுத் தொழிலில் இருந்தால் கவனமாக இருங்கள்! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 கன்னி:

தாமதமான விஷயங்கள் வேகமாக நடக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு அமையும். தடைக்கல் வந்தாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள். உத்தியோகம் ரீதியாக நல்ல வளர்ச்சி இருக்கும். எந்த செயலை செய்தாலும் யோசித்து செயல்படுங்கள். புதிய சூழலில் வாழும் சந்தர்ப்பம் உண்டாகும். போட்டியாக இருப்பவர்களை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுக்கு பணம் கொடுத்து, வாங்குவதை தவிர்க்கவும். சளி, நுரையீரல் பிரச்சனைகள் வந்து போகும். தொழில் ஏற்றம், இறக்கத்துடன் காணப்படும். துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும். தேவையில்லாத விஷயத்தில் பேசுவதை தவிர்க்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்