Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இருக்குற வேலைய எப்படியாவது தக்க வச்சுக்கிட்டா நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
இருக்குற வேலைய எப்படியாவது தக்க வச்சுக்கிட்டா நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

புரட்டாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

புரட்டாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் வக்கிர நிலையில் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புரட்டாசி 14 ஆம் தேதி கடக ராசியில் இருக்கும் சுக்கிரன் சிம்ம ராசிக்கும், சிம்ம ராசியில் இருக்கும் புதன் கன்னி ராசிக்கும் மற்றும் புரட்டாசி 16  கன்னி ராசியில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்கும் சஞ்சாரம் செய்கின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் புரட்டாசி மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

இருக்குற வேலைய எப்படியாவது தக்க வச்சுக்கிட்டா நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 மேஷம்:

உத்தியோகத்தை பொறுத்த வரையில் இந்த புரட்டாசி மாதத்தில் நன்றாக இருக்கும். பதவி உயர்வு அல்லது வேலை மாற்றம் குறித்து என்ன நினைக்கிறீர்களோ அது நிறைவேறும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். எலும்பு, நரம்பு, வயிறு சார்ந்த உடல் உபாதைகள் வரலாம். எனவே, ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு நீங்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போன்ற எண்ணம் தோன்றும்.

இருக்குற வேலைய எப்படியாவது தக்க வச்சுக்கிட்டா நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 ரிஷபம்:

வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். முயற்சிக்கான பலன் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். போட்டித் தேர்வு எழுதி இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயத்தில் தீர்ப்பு சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் இன்னல் வந்து நீங்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி தென்படும். கணவன் - மனைவிக்குள் புரிதல் ஏற்படும். யோசிக்காமல் மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்க வேண்டாம். பிள்ளைகளுக்கு தேவையான செலவு செய்யும் சூழல் அமையும். உயர்கல்வி குறித்து நீங்கள் விரும்பியது நிறைவேறும்.

இருக்குற வேலைய எப்படியாவது தக்க வச்சுக்கிட்டா நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

புரட்டாசி மாத ராசிபலன் 2023 மிதுனம்:

எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் செய்வீர்கள். உத்தியோகத்தை மன நிறைவுடன் செய்யுங்கள். தேவையில்லாத விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கடன் பிரச்சனை குறையும். பொருளாதாரம் எப்பையும் போல் இருக்கும். வரவுக்கான செலவு செய்தால் சமாளிக்க முடியும். நோயில் இருந்து மீண்டு வரும் வாய்ப்புள்ளது. கொடுக்கல், வாங்கலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வழக்கு சார்ந்த விஷயம் இழுபறியாக இருக்கும். தம்பதிகள் நல்ல புரிதலுடன் இருப்பார்கள். தந்தையின் அரவணைப்பு கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்