Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா? | Rahu Ketu Dosha Marriage Match in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா? | Rahu Ketu Dosha Marriage Match in TamilRepresentative Image.

ராகு-கேது தோஷம் என்பது ஒருவர் ஜாதகத்தில் அவர்களின் செயல்பாடுகள், எண்ணங்கள், விருப்பங்கள், வியாபாரம் உள்ளிட்டவற்றில் நிலையானதாக இல்லாமல், அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கக்கூடிய ஒன்றாகும். பொதுவாக, ராகு-கேது குடும்பத்தை அமைத்துக்கொடுக்க கூடிய பாகங்களில் அதாவது, ஒருவருடையை ஜாதகக் கட்டத்தில் 1, 2, 7, 8 ஆகிய இடங்களில் அமர்வதால் ஏற்படுவதே ராகு-கேது தோஷம். இந்த இடங்களில் ராகு-கேது அமர்வதால் அந்த ஜாதக்காரர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தொடர்ந்து மாற்றங்கள் இருந்துக் கொண்டே இருக்கும். அதாவது, ராகு-கேது தோஷம் உடையவர் நிலையான எண்ணங்களும், செயல்பாடுகளும் இல்லாமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொள்ளும் சுபாவம் படைத்தவர்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் மனதில் கற்பனைக்கு எட்டாத கனவுகளையும், புதுவிதமான ஆசைகளையும் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய பேச்சு இனிமை உடையாதாக இருந்தாலும், சில நேரங்களில் மற்றவர்களுக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் வரவழைக்கூடியதாகவும் இருக்கும். இவர்களுக்கு நண்பர்கள் நிறைய பேர் இருப்பார்கள். எதிலும் புதுமையை தேடும் பழக்கம் கொண்ட இவர்கள் அனைவரிடத்திலும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகும் சுபாவம் கொண்டிருப்பார்கள். நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் இவர்கள் செய்யும் காரியங்கள் சில சமயங்களில் பலவிதமான இன்னல்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

மேலும், மற்றவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் இவர்களுக்கு சுத்தமாகவே இருக்காது. தனக்கு என்ன தோன்றுகிறதோ, எது பிடிக்கிறதோ அதையே செய்வார்கள். அதேபோல், இந்த தோஷம் இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், தனக்கு பிடித்தாற் போலவும் வாழ வேண்டும் நினைப்பவர்கள். அதாவது, கஷ்டத்திலும் சொகுசாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். 

ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா? | Rahu Ketu Dosha Marriage Match in TamilRepresentative Image

ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதகரை திருமணம் செய்யலாமா?

ஆனால், சுத்த ஜாதகம் (தோஷம் இல்லாதவர்) கொண்டவர் இவர்களுக்கு அப்படியே எதிர்மறையான குணம் படைத்தவர்கள். அதாவது, அவர்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் எப்போதும் ஒரு நிலைப்புத்தன்மை இருக்க வேண்டும் நினைப்பார்கள். மேலும், இவர்கள் எந்த விஷயத்திலும் எந்த சூழ்நிலையிலும் புதுமைகளை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில், சுத்த ஜாதகத்தார் ராகு-கேது தோஷம் உள்ளவர்களை திருமணம் செய்துக் கொள்ளும்போது இவர்களின் எண்ணங்கள் சரியான விதத்தில் ஈடுசெய்ய முடியாமல் போகிறது. அங்கு தான் வெறுப்பு, கருத்து வேறுபாடு, பிரிவினை என்பது ஆரம்பமாகிறது.

அதேபோல், தோஷம் உள்ளவர்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காக பேசும் சில பேச்சுக்கள், தோஷம் இல்லாதவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துவிடுகிறது. தோஷம் இல்லாதவர்கல் சில நேரங்களில் விட்டுக்கொடுத்து அனுசரித்து கொண்டாலும், மனதளவில் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பொதுவாக, தோஷம் உள்ளவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் உடையவர்கள். இதனால் தனக்கு வேண்டியதையும், தனக்கு பிடித்ததையும் மட்டுமே செய்ய விரும்புவார்கள். இது இறுதியில் பிரிவில் சென்று முடிந்துவிடுகிறது.

இதனால் தான், நம் முன்னோர்கள் ராகு-கேது தோஷம் உள்ளவர்களுக்கு அதே தோஷம் உள்ளவர்களை திருமணம் செய்து வைக்க கூறினார்கள். ஏனென்றால், தோஷம் உள்ளவர்களின் குணமும் எண்ணமும் ஒரே மாதிரியாக இருக்கும். அதேபோல், ஒருவருடைய பேச்சு இன்னொருவரின் பேச்சு இணையாக இருப்பதால், கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் எளிதில் நீங்கிவிடும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்