Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,952.94
-53.00sensex(-0.07%)
நிஃப்டி22,513.60
11.60sensex(0.05%)
USD
81.57
Exclusive

உதாசினப்படுத்தியவர்கள் எல்லாம் தேடி வந்து உதவிக் கேட்பார்கள்.. | Thulam Sani Vakra Peyarchi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உதாசினப்படுத்தியவர்கள் எல்லாம் தேடி வந்து உதவிக் கேட்பார்கள்.. | Thulam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார். 

அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 133 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் துலாம் ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

உதாசினப்படுத்தியவர்கள் எல்லாம் தேடி வந்து உதவிக் கேட்பார்கள்.. | Thulam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

சனி வக்ர பெயர்ச்சி 2023 துலாம்:

உங்க ராசிக்கு 5ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி வக்ரம் பெறுவதால், கடந்த காலங்களில் செய்த புண்ணியங்கள், கர்மாக்களுக்கு உண்டான பலன்களை அனுபவிப்பீர்கள். தாய் அல்லது தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவால் மருத்துவம் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு விரையில் உடல்நலம் மேம்படும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற காதலன் அல்லது காதலி மீண்டும் ஒன்று சேர்வார்கள். 

தள்ளிப்போன சுபக் காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நடந்தேறும். வீடு, மனை வாங்க வேண்டும் என்று எண்ணம் சில விஷயங்களால் தள்ளி போகியிருக்கலாம். சனி வக்ரம் பெறுவதால் தள்ளிப்போன அந்த காரியம் நல்ல முறையில் நடந்து முடியும். பணியிடத்தில் உங்களை உதாசினப்படுத்தியவர்கள் எல்லாம் உங்களை தேடி வந்து உதவிக் கேட்பார்கள். திறமைகள் வெளிபடும். சமூதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். 

நிறைய பேர் குலதெய்வ கோவியிலுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்கள் அனைத்தையும் நல்லபடி நிறைவேற்றுவீர்கள். குழந்தை வரன் வேண்டி எத்தனையோ பரிகாரம், சிகிச்சை மேற்கொண்டு தோல்வியை சந்தித்த நபர்கள் இந்த காலக்கட்டத்தில் மீண்டும் முயற்சி செய்யுங்கள். நிச்சயம் ஆண் குழந்தையாகவே பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். 

இவையனைத்து பலன்களும் உங்க ஜாதகத்தில் சனியின் தாக்கம் நல்ல முறையில் இருக்கும்போது மட்டுமே. ஒருவேளை சனியின் தாக்கம் நல்லமுறையில் இல்லையென்றால் முதலில் உடலில் தான் அதன் தாக்கத்தை காண்பிக்கும். அதாவது, அம்மை போடும், அடிக்கடி காய்ச்சல் வரும், நோயெதிர்ப்பு சக்தி குறையும். குழந்தைகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். தேவையில்லாத சங்கடங்களை சந்திக்க நேரிடும். தவறான நட்புக்களுடன் கூட்டு சேர வைக்கும். எனவே, எதிலும் கவனத்திலும் இருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்