Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sani Peyarchi Kataka Rasi: தன்னம்பிக்கைக்கு சொந்தக்காரரான கடகத்தின் 2022 சனி பெயர்ச்சி பலன்கள்! 

Manoj Krishnamoorthi May 10, 2022 & 12:00 [IST]
Sani Peyarchi Kataka Rasi: தன்னம்பிக்கைக்கு சொந்தக்காரரான கடகத்தின் 2022 சனி பெயர்ச்சி பலன்கள்! Representative Image.

மனித வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் யாவும் கணிப்பதே ஜோதிட சாஸ்திரமாகும், நவகிரகங்க்ளீன் நிலையைக் கொண்டு 12 ராசிகள் 27 நட்சத்திரம் என வகுத்து ஜோதிட கணிதம் கணக்கிடப்படுகிறது. 12 ராசியில் மிகவும் பணிவான குணத்தைக் கொண்ட கடக ராசிக்கு 2022 சனி பெயர்ச்சி பலன்கள் எப்படி உள்ளது என்பதை அறிய எங்கள் இணையத்தளப் பக்கம் சரியான தீர்வாகும்.

கடக ராசி சனி பெயர்ச்சி 2022  பலன்கள் (Sani Peyarchi Kataka Rasi)

பொது பலன்

கண்ணியமான நடத்தையும் கனிவான பேச்சுக்கும் அதிபதியான கடக ராசிக்கு 2022 சனி பெயர்ச்சி சற்று போராட்டம் நிறைந்ததாகும். இதுவரை 7ம் வீட்டிலிருந்த சனி பகவான் 29.04.2022 முதல் 8ம் வீட்டில் சஞ்சரிப்பது கலவையான பலன் அளிக்கும். வாழ்வின் அனுபவங்களை இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு தரும், புதிய கல்வி திறன் அல்லது சில தொழிநுட்பங்கள் பற்றி அறிய இது சரியான நேரமாகும். 2022 இல் உங்கள் வாழ்வு மேலும் கீழுமாக இருக்கும். வெளிப்படையான வளர்ச்சி இல்லாவிட்டாலும் மறைமுகமான திறன் வளர்ச்சி இருக்கும்.  

குடும்ப வாழ்க்கை

குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட கடக ராசிக்காரரே, உங்கள் குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் உருவாகும், அதை சரி செய்ய நீங்கள் சிரமப்படுவீர்கள், உதவி கிடைக்காது. காதல் வாழ்க்கையில் கவனம் கொள்ள வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது, வெளிப்படையான பேச்சு எந்தவித பிரச்சனையும் உருவாக்காது. திருமண வாழ்க்கைக்கு காத்திருப்போர் உங்கள் மனம் கவரும் துணையைக் காணும் வாய்ப்புள்ளது. குழந்தைப் பேறு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.   

தொழில்

தொழில் ஸ்தானம் எதிர்பார்க்கும் வெற்றி கொள்ளாது, உங்கள் இலக்குகளை அடையத் தாமதமாகும்.  அலுவலகத்தில் உடன் பணி செய்வோரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய அதிகமான போராட்டம் இருக்கும். உங்கள் தொழில் மந்த நிலௌ அக்டோபர் மாதத்துக்கு பிறகு இயல்பு நிலை கொள்ளும். சுய தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் அதிகமான முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில் ஓரளவு நன்றாக இருக்கும். நிதி நிலை சாதகமாக உள்ளது, எதிர்பாராத பண வரவு இருக்கும்.  

கல்வி

2022 சனி பெயர்ச்சி கடக ராசி மாணவர்களுக்கு சற்று சரிவை உருவாக்கும், உங்கள் விடாமுயற்சி அதிக தேவைப்படும். உயர்கல்விக்கு அயல்நாடு செல்ல முயற்சி செய்வோர் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். புதிய கலைகள் பல கற்க வாய்ப்பு உருவாகும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறும் வாய்ப்புள்ளது.    

உடல்நலம்

ஆரோக்கியப் பிரச்சனையால் அவதிப்பட்ட உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும், நீண்ட நாள் உடல் பிரச்சனைகள் தீரும். இதுவரை இருந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும், மருத்துவ செலவு குறையும். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும்.  

பரிகாரம்

  • வாரந்தோறும் சனிக்கிழமை அன்று அனுமன் வழிபாடு செய்ய வேண்டும். 
  • மாதத்தின் முதல் சனிக்கிழமையில் விரதம் இருந்து, சிலருக்கு தயிர்சாதம் மற்றும் இனிப்பைத்  தானமாக அளித்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலையில் விநாயகருக்கு நீர் ஊற்ற வேண்டும். 

மேலும் படிக்க: சனி பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்குமா! என்பதைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்!

இதுபோன்ற செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்