பிறப்பிலிருந்தே புத்தி கூர்மையும் திறமையும் பெற்றிருக்கும் அதிர்ஷ்டகாரர் மிருகஸீரிஷ நட்சத்திரக்காரர் ஆவர், இவர்களின் புத்தி கூர்மையும் துணிச்சலும் பலமென்றால் இவர்களின் கோபம் சில சமயம் இவர்களை சறுக்கிவிடும் என்பதும் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மையாகும். ஆனால் என்னதான் சரிவு மேல் சரிவு வந்தாலும் மீண்டும் வலுப்பெற்று போராடும் குணம் கொண்ட மிருகஸீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வு செழிக்க கீழ்க்காணும் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
மிருகசீரிடம் நட்சத்திரம் கோவில் (Mirugasirisham Nakshatra Temple )
கலை ஆர்வம் கொண்ட மிருகஸீரிஷம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில் அடிக்கடி செல்வது நன்மை அளிக்கும். அடிக்கடி செல்ல முடியாத நிலையில் ஒருமுறையாவது செல்ல வேண்டும்.
தல சிறப்பு (Mirugasirisam Natchathiram Kovil)
இந்த கோவிலுக்கு இதிகாசக் கதையும் உண்டு, முற்காலத்தில் சமிவனம் எனப்பட இவ்விடத்தில் பிருகு முனிவர் தவம் இருந்து கோண்டு இருக்கிறார், அந்த சமயம் சிங்கத்தை வேட்டையாட வந்த ஒரு சோழ அரசன் ஆரவாரத்துடன் சத்தமெழுப்ப அதனால் தவம் கலைந்த முனிவர் கோபத்தில் அவனுக்கு ஒரு சாபம் அளிக்கிறார் "நீ சிங்க முகத்துடன் அலைவாய்" என சாபமிடுகிறார். கோபம் தணிந்த முனிவர் சாப விமோசனமும் அளிக்கிறார், அதன்படி பெருமாளை நினைத்து மனமார வழிபாடு செய்து காவிரி ஆற்றில் நீராடிய பின் பெருமாள் அவனுக்கு காட்சியளித்து அவன் பழைய முகம் கிடைக்க செய்கிறார். மிருக முகம் நீக்கிய இந்த பெருமாள் திருத்தலம் மிருகஸீரிச நட்சத்திரக்காரர் தங்கள் ஒருமுறையாவது வழிபாடு செய்ய வேண்டிய தலமாகும்.
ஆரோக்கியத்தில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இத்திருக்கோவில் வந்து வழிபாடு செய்வது நல்ல பலன் அளிக்கும். நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் எதிர்பார்க்கும் தம்பதியினர் மிருகசீரிட நட்சத்திரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். பொதுவாக இந்த கோவில் வருவதால் பச்சி தோஷம், நாக தோஷம், திருமணத் தடை, தீராத நோய் போன்றவை தீர இந்த திருக்கோவில் வந்து வழிபாடு செய்தல் வேண்டும்.
எப்படி செல்வது? (Mirugasirisham Natchathiram Kovil Route)
அருள்மிகு ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில் செல்வது மிக எளியதாகும், தஞ்சாவூர் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் முகூந்தனூர் என்னும் ஊர் சுமார் 50 கி.மி தூரத்தில் உள்ளது. பேருந்தின் மூலம் முகூந்தனூர் வந்து 1 கீ. மீ தூரம் பயணித்தால் இந்த திருக்கோயிலை அடையலாம்.
ஒருவேளை கும்பகோணத்தில் செல்வதாக இருந்தால் இந்த திருக்கோவில் 20 கீ.மீ தொலைவில் உள்ளது.
தொடர்புக்கு: 91 4366 269 965, 94433 51528
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Tag: Temple For Mirugasirisam Nathchitram | Mirugasirisham Nakshatra Temple In Tamil | Mirugasirisham Nakshatra Temple | மிருகசீரிஷம் நட்சத்திரம் கோவில் | Mirugasirisam Natchathiram Poga Vendiya Kovil | Temple For Mirugasirisam Nakshatra In Tamil | Temple For Mirugasirisam Natchathiram In Tamil | Mirugasirisam Natchathiram Kovil | Mirugasirisam Natchathiram Temple | Mirugasirisam Natchathiram Sella Vendiya Kovil | Mirugasirisham Natchathiram Kovil route
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…