Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,745.35
1,245.05sensex(1.72%)
நிஃப்டி22,338.75
355.95sensex(1.62%)
USD
81.57
Exclusive

Today Rasi Palan in Tamil: இன்னைக்கு முழுவதும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா..! மே 26, 2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan May 25, 2022 & 17:58 [IST]
Today Rasi Palan in Tamil: இன்னைக்கு முழுவதும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா..! மே 26, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions Tamil Online Horoscope Free

மேஷம் | Aries 2022 Horoscope

உங்க பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம். அதனால், எதிலும் அவரசம் காட்டாமல், நம்பிக்கையோடு கையாளுவது நல்லது. இல்லையென்றால் வீண் விவாதங்கள் வந்து நிற்கும். இன்று வேலை செய்யும் இடத்தில் வேலை அதிகமாக இருக்கும். உங்க துணையிடம் கேலியாக பேச வேண்டாம். அது உறவை பாதித்திவிடும். பண வரவு சற்று குறைவாக தான் இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அமைதி!

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

ரிஷபம் | Taurus 2022 Horoscope

வேலை செய்யும் இடத்தில் நிறைய போட்டி இருக்கும். ஆனால், அதையெல்லாம் சாமாளிச்சி பாராட்டு பெறுவீர்கள். கடன உழைப்பு தேவை. வாழ்க்கையில் நன்மை தீமையை அறிந்துக் கொள்ளும் நாள் இன்று. நீங்க உங்க கணவன் அல்லது மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். இதனால் உறவில் அன்பு அதிகரிக்கும். பணவரவு உண்டு. ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்பார்ப்பு!

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

மிதுனம் | Gemini 2022 Horoscope

புதிய வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இவ்வளவு நாட்களாக எதற்கு ஆசைப்பட்டீர்களோ, அதை அடைய வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பொறுமை தேவை. தடை அகலும்!

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

கடகம் | Cancer 2022 Horoscope

உங்க வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். இன்று வேலை செய்யும் இடத்தில் பணிசுமை இருக்கும். எனவே, கவனமுடம் கையாள வேண்டும். உங்க துணையுடன் தகவல் தொடர்பில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி ஏற்ற இறக்கமாக இருக்கும், இதனால் பணப்புழக்கம் இருக்கலாம். ஆனால் அதற்காக கவலைப்பட வேண்டாம்.  உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கவனம்!

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

சிம்மம் | Leo 2022 Horoscope

புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பொறுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும். எதிர்ப்பாரா செலவுகள் வரும். சிக்கனம் கடைப்பிடிப்பது அவசியம். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள், எனவே தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது நல்லது. ஒரு சில கசப்பான நினைவுகள் மனதில் வந்து போகும். கண் சம்பந்தமான பிரச்சனை இருந்தால் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. நிதானம்!

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்

கன்னி | Virgo 2022 Horoscope

நீண்ட நாள் ஆசை நிறைவேறும். அதனால் அதிக மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணி இடத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுப்பீங்க. குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இவ்வளவு நாட்களாக மனதில் உறுத்திக் கொண்டிருந்த விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். அதிக பண வரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்க பக்கம் இருக்கும். அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

துலாம் | Libra 2022 Horoscope

இவ்வளவு நாட்களாக இருந்த வந்த கடன் பிரச்சனைகள் குறையும். வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். இன்று சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை ஏற்படுத்தும். எதிர்பாரா உதவிகள் தேடி வரும். அமைதியான சூழ்நிலை நிலவும். கணவன்-மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு உண்டு. மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

விருச்சிகம் | Scorpio 2022 Horoscope

உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை இருக்கும். உங்க துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். இதனால், விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சகஜமாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தேவையற்ற செலவுகள் வரும். பணவரவு விஷயத்தில் சற்று மந்தமாக தான் இருக்கும். தூக்கமின்மையும், தோல் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். செலவு! 

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

தனுசு | Sagittarius 2022 Horoscope

இன்று உங்க புத்திசாலி தனத்தாலும், திறமையாலும் வளர்ச்சியை நோக்கி சென்று பெரும் வெற்றி காண்பீர்கள். இன்று முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை சம்பந்தமான பயணம் இருக்கும். எனவே, உங்க வேலையை மூன்கூட்டியே முடித்துக் கொள்ளுங்கள். உங்க துணையுடன் வெளியில் செல்வீர்கள். இனிமையான வார்த்தைகளால் உறவில் மகிழ்ச்சி, அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத பணவு வரவு மகிழ்ச்சியை அளிக்கும். மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும் இதனால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனந்தம்!

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

மகரம் | Capricorn 2022 Horoscope

இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். மனஉறுதி மற்றும் கடின உழைப்பால் வெற்றியை காண்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு சிறந்த பரிசு கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்கள் உதவிகரமாகவும், ஆதரவாகவும் இருப்பார்கள். உங்க திறமையை நிரூபித்து காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், சுப காரியங்களுக்காக தான் இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பாராட்டு!

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

கும்பம் | Aquarius 2022 Horoscope

முக்கிய முடிவுகள் எடுக்கும்போது கவனமும், அமைதியும் தேவை. எதை செய்வதற்கு முன்புன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. மேலும், அதிக பணிச்சுமை இருக்கும். கிண்டலாக பேசுவதை தவிர்ப்பது மனஉலைச்சலை குறைக்கும். செலவுகள் வர வாய்ப்புண்டு. எனவே, சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அலைச்சல்!

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

மீனம் | Pisces 2022 Horoscope

குடும்பத்தில் தேவையில்லாத விவாதங்கள் வரும். இதனால் மனதில் கவலை குடியேறும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள முயற்சியுங்கள். கோவம் வேண்டாம். இன்று கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க சற்று சிரமமாக இருக்கும். உங்க துணையுடன் அதிகமாக கோவத்தை வெளிப்படுத்துவீர்கள். இருந்தாலும், அவர் உங்களிடம் அன்பு காட்டுவார். உறவினர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். பணப்பற்றாக்குறை இருக்கும். இருந்தாலும், தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். ஆதரவு!

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்