Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rasi Palan Today Tamil 2022: இன்று  இன்ப வெள்ளத்தில் திளைக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா...? மே 25, 2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi May 24, 2022 & 15:00 [IST]
Rasi Palan Today Tamil 2022: இன்று  இன்ப வெள்ளத்தில் திளைக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா...? மே 25, 2022 ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 08:30-  09:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்கள் ராசிக்கு இன்று கடினமான தருணங்கள் பல உருவாகும், மனதின் தெளிவான ஆற்றல் இன்று உங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தும். நீங்கள் கூடுதல் உழைப்பு அளிப்பதால் இன்று பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மேலும் பணியிடத்தில் சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். நிதி நிலையில் அதிகமான கவனம் தேவைப்படும். திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும் உங்கள் பேச்சினால் இன்று வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். உங்கள் கவனக் குறைவு இன்று பொருட் இழப்பை உருவாக்கும். ஆரோக்கியத்தில் கழுத்து தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். அமைதி!   

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

உங்கள் கிரக நிலை மாற்றம் இன்று உங்களுக்கு இன்று சாதகமாக இருக்கும், பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க சக பணியாளரின் உதவி தேவைப்படும். இன்று பண வரவு ஓரளவு நன்றாக இருக்கும், இன்றைய தினம் நண்பர்களுடன் நேரத்தை ஒதுக்க முடியும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது, சக மாணவரின் உதவி சிறப்பாகப் படிக்க உதவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். வீட்டில் நிம்மதியாக இருப்பீர்கள். ஆதாயம்!  

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்கள் இணக்கமான மன நிலை இன்று தெளிவாகும், மேலும் உங்கள் தொழில் ஸ்தானம் வெற்றி பாதையில் நகரும். மேலும், குடும்ப வாழ்வு இயல்பாக இருக்கும், உங்கள் குடும்பத்தினரின் ஆலோசனை குடும்பத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். இன்று ஆரோக்கியத்தில் அதீத கவனம் வேண்டும், திடீரென உடல் குறை ஏற்படும். கல்வி நிலை சிறப்பாக உள்ளது. ஆலோசனை!  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

கடகம் (Cancer 2022 Horoscope)

பதட்டமான சூழ்நிலை இன்று படிப்படியாக அகலும், உங்களுக்கு இன்று கடினமான நிலை அலுவலகத்தில் உருவாகும், அதிகமாக உழைக்க வேண்டிய தருணம் இன்று இருக்கும். வீட்டில் பொறுமையுடன் இருக்க வேண்டும், குடும்பத்தினரின் உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும். செல்வ நிலை செலவுதான் ஓஙி இருக்கும், இன்று தேவை அறிந்து செலவு செய்வது நிதி நிலைமை சமாளிக்க உதவும். திட்டம்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் (Leo 2022 Horoscope)

வெற்றியை நோக்கி செல்லும் உங்களுக்கு இன்று சில தடங்கள் இருக்கும், மன உறுதியுடன் முயற்சியைத் தொடர்வது இலக்கையை நெருங்கத் தூண்டும். இன்று அமைதியான வாழ்க்கை குடும்பத்தில் எதிர்பாராமல் கிடைக்கும். திருமணப் பந்தத்தில் இன்று மகிழ்ச்சியான உறவு உருவாகும். செல்வத்தை செலவிடும் முன் அதிகமான யோசனைத் தேவைப்படும். மருத்துவ செலவுகள் உருவாகலாம். பயணம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல்நலத்தில் சிறிய கோளாறு உருவாகும், அலட்சியப் படுத்தாமல் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். கவனம்!  

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Virgo 2022 Horoscope)

சாதகமான சூழலில் முயற்சி செய்தால் நிச்சியம் வெற்றி கொள்ளலாம் என்பதை உணர்த்திய உங்களுக்கு இன்றைய தினம் தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். இன்று உங்கள் முயற்சிகள் நல்ல பலன் அளிக்கும். அலுவலகத்தில் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்ல பலன் அளித்து உங்களை பெருமைப்படுத்தும். பணப்புழக்கம் கையில் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல நிலை இருக்கும். முன்னேற்றம்!     

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

துலாம் (Libra 2022 Horoscope)

உங்களுக்கு இன்று உத்தியோகத்தில் இன்பமான மன நிலை இருக்கும், வேலைகளை விரைவாக முடிக்க முயற்சி செய்வீர்கள். சக பணியாளரின் நட்பான அணுகுமுறை பனியில் பல புதிய முயற்சிகள் எடுக்க உதவும். வீட்டில் உங்கள் வெளிப்படையான பேச்சு மதிக்கப்படும். கையில் பணம் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியமான மனநிலை இன்று உடல்நலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும். சிறப்பு!  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்று இருக்கும் சீரான செல்வ நிலை மனதை ஆனந்தமாக்கும், எதிர்பாராத பண வரவு உண்டு. இன்று குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருக்கும், உங்கள் அலுவலக பணிகளை  விரைவில் முடிப்பதால் இன்று அதிகமான ஓய்வு நேரம் இருப்பது போலத் தோன்றும். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனைகள் இருக்கும், உடல் சோர்வாக இருக்கும். வீட்டில் உங்கள் கோபம் மற்றவரின் மகிழ்ச்சியைக் பாதிக்கும், பொறுமையாக  இருப்பது குடும்பத்தினரின் மன மகிழ்ச்சியைக் கெடுக்காது. கல்வி ஸ்தானம் அமோகமாக உள்ளது. உறவினர் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும். தன லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Sagittarius 2022 Horoscope)

முன்னேற்றப் பாதையிலிருந்து தடம் மாறிய உங்களுக்கு குடும்பத்தினரின் ஆலோசனை உற்சாகப்படுத்தும், தொழிலி வேலைச் சுமை அதிகமாக இருக்கும். வேலையை முடிப்பதில் சலிப்பு தோன்றும். காதல் வாழ்க்கையில் உங்கள் கடுமையான வார்த்தையால் காயப்படுத்துவீர்கள். செல்வ நிலையில் இன்று அதிகமான செலவுகள் இருக்கும். ஆன்மிக ஸ்தலத்துக்கு செல்லும் சூழல் உருவாகும். உடலில் சிறிய தொல்லைகள் இருக்கும். ஊக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள், பொன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்று கிடைக்கும் வாய்ப்பு  வாழ்க்கையை அடுத்த தரத்தில் உயர்த்தும், தொழிலில் நல்ல லாபம் கிடைத்து உங்கள் செல்வ நிலை மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும். உங்கள் அணுகுமுறை வியாபாரத்தில் நம்பிக்கையான வாடிக்கையாளரை உருவாக்கும். எதிர்கால சேமிப்பு அதிகமாகும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், மன மகிழ்ச்சியுடன் இருக்கும். ஏற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உடல்நலத்தில் அதிக கவனம் காட்ட வேண்டிய நாளாக இன்று உள்ளது, அலுவலகத்தில் செய்யும் முயற்சிகள் வெற்றி அளிக்கும், இன்று உங்கள் மேலதிகாரியின் பாராட்டு மனதுக்கு இன்பமாக இருக்கும். வீணான வாக்குவாதம் இன்று நேரத்தை வீணடிக்கும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு இன்று அதிகமாக தேவைப்படும். காதல் வாழ்க்கையில் உங்கள் கோபம் உறவு முறிவை ஏற்படுத்தும். திறமை! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மீனம்(Pisces 2022 Horoscope)

தொழில் போட்டிகள் அதிக இருக்கும் நாளாக இன்று இருக்கும், தொழில் முன்னேற்றத்தைப்  பற்றிய சிந்தனை இன்று அதிகமாக இருக்கும், உங்கள் ராசிக்கு பொறுமையாக இருப்பது அவசியமாகும், முக்கியமாகக் குடும்பத்தினருடன் பேசும்போது பொறுமை இருங்கள். நிதி நிலையில் அதிகமான செலவுகள் இன்று இருக்கும். மன நிலை பதட்டமாக இருக்கும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் நன்றாக உள்ளது. எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்