Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளைய ராசிபலன் - திங்கள் | Tomorrow Rasi Palan in Tamil | 03.07.2023

Nandhinipriya Ganeshan Updated:
நாளைய ராசிபலன் - திங்கள் | Tomorrow Rasi Palan in Tamil | 03.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 18 ஆம் நாளுக்கான [03 ஜூலை 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 06.15 - 07.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவிக்கேட்டு வருவார்கள். வியாபாரிகள் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செல்வது நல்லது. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். நிர்வாக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். பெயர் தெரியாதவர்களிடம் பேச்சை தவிர்க்கவும். நண்பர்கள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். திடீர் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி சூழல் நிலவும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பணவரவு திருப்திகரமாக இருக்கும். வார்த்தைக்கு குடும்பத்தினரிடம் மதிப்பு அதிகரிக்கும். கடினமான பணிகளையும் எளிதில் முடிப்பீர்கள். நண்பர்களிடம் இருந்த மனவருத்தம் விலகும். கணவன், மனைவி இடையே புரிதல், நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை. ஒரு சிலருக்கு மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்று வர வாய்ப்புள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வாழ்க்கை துணையின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிர்பாராத நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். ஒரு சிலருக்கு பழக்கவழக்கத்தில் மாற்றம் உண்டாகும். பணியிடத்தில் மேலதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். சில விஷயங்களில் சகோதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நினைத்த காரியம் நடந்து முடியும். ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். தாயுடன் இருந்த சண்டை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை வேண்டும். எதிலும் கர்வமில்லாமல் செயல்படுவது மேன்மை தரும். கடனாக வாங்கிய பணம் கைக்கு வரும். சமையல் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மன வருத்தம் மறையும். புது முயற்சிகள் ஈடேறும். எதிர்பாலினத்தவர் மூலம் அனுகூலம் உண்டு. இயந்திரம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். தொலைபேசி மூலம் நல்ல செய்தி வந்து சேரும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உள்ளது. பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதளவில் பயத்தை ஏற்படுத்திய விஷயத்திற்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களால் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரிகள் புது வாடிக்கையாளர்களிடம் கவனமாக இருக்கவும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

மனதில் இருந்த கவலைகள் விலகும். எதிலும் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். பெண்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத தனவரவு மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் அறிமுகம் கிடைக்கும். காதலர்கள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தந்தைவழி உறுப்பினர்களால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். கூட்டாளிகளின் வழியில் அனுசரித்து சென்றால் லாபம் உண்டாகும். பணியிடத்தில் பிறர் வேலையில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்கவும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் நினைத்ததை சாதிப்பீர்கள். வாகன பயணத்தின் போது அவசரம் காட்ட வேண்டாம். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

தாய்வழி உறவினர்களிடம் நிதானத்தோடு நடந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் குறையும். வியாபாரகளுக்கு வசூலில் இருந்த இழுபறிகள் நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். நண்பர்களிடம் காரசாரமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் ஏற்ற, இரக்கத்துடன் இருக்கும். அரசு சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தினரால் செலவுகள் தேடி வரும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும். ச்நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்