Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளைய ராசிபலன் - புதன் | Tomorrow Rasi Palan in Tamil | 05.07.2023

Priyanka Hochumin Updated:
நாளைய ராசிபலன் - புதன் | Tomorrow Rasi Palan in Tamil | 05.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாளுக்கான [05 ஜூலை 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை: 04.45 – 05.45 மணி வரை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மருத்துவம் தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தை புதிய இடத்திற்கு மாற்றி அமைப்பது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். கல்வியில் இருந்து மந்தத்தன்மை குறையும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உங்களின் தன்மையைப் புரிந்துக் கொண்டு உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புது தொழில்நுட்பம் தொடர்பான தேடல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். பெரியோர்களின் ஆசியால் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் சிறு சிறு அலைச்சல்கள் தோன்றி மறையும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பொன், பொருட்கள் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் அதிகரிக்கும். தேவையற்ற இடத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயங்களில் விவேகமாக செயல்படவும். உங்கள் மீது இருந்து நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். மற்றவர்களிடத்தில் கனிவுடன் பேசுவதால் நன்மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எந்த விஷயமாக இருந்தாலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கிடைக்காமல் போன சில வாய்ப்புகள் வந்து சேரும். வீட்டில் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். போட்டித் தேர்வு எழுதியவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. வாகன பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக திருப்பங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுபகாரியம் தொடர்பான விஷயங்கள் கைகூடி வரும். சேமிப்பு சம்மந்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே புரிதல் மேம்படும். அறிவுத்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த துறையில் முன்னேற்றம் அமையும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

துலாம் | Nalaya Rasi Palan Thulam

கல்வி சம்மந்தமான பயணங்கள் கைகூடும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீது மதிப்பு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் மீதான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றம் ஏற்படும். உறவினர்களை புரிந்துக்கொள்ளும் சந்தர்ப்பம் அமையும். திறமை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

சில சந்தர்ப்பங்களில் துணிச்சலுடன் முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றுவீர்கள். சகோதரர் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

புதிய வீடு தொடர்பான கடன் உதவிகள் சாதகமாக அமையும். பெரியவர்களின் ஆலோசனையால் தெளிவு கிடைக்கும். பயனற்ற வாக்குறுதிகளை குறைப்பது நல்லது. கணிதம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத நபர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். வராமல் தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். தாயாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் மேம்படும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் | Nalaya Rasi Palan Magaram

திட்டமிடாதஹ் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தேவையில்லாத சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எந்த செயலாக இருந்தாலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். கணவன் - மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்வது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். புதிய வாய்ப்புகள் கிடைத்தால் தெளிவாக சிந்தித்து செயல்படவும். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வீட்டில் இருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சில அனுபவங்களின் மூலம் புதிய கண்ணோட்டம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் மேம்படும். பக்தி!

 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உழைப்பிற்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உயர் பதவிகளின் அறிமுகம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் மேம்படும். கனிவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்