Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 04.07.2023

Nandhinipriya Ganeshan Updated:
எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 04.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 19 ஆம் நாளுக்கான [04 ஜூலை 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.30 - 05.00 வரை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

புதிய நபரால் கணவன் - மனைவி இடையே தேவையில்லாத பிரச்சனை வரும். முக்கியமான பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த விஷயத்தில் அவரசம் வேண்டாம். முன்கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். முதலீடு சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பணியிடத்தில் ஊழியர்களை அனுசரித்து நடந்துக்கொள்ளவும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். சிலருக்கு தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பணஉதவி கிடைக்கும். பணவரவு தாராளமாகவே உள்ளது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை வேண்டும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பொருளாதார நிலையை பொறுத்தவரையில் அதிக கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும். பணியிடத்தில் கவனக்குறைவால் ஏற்படும் பெரிய பிரச்சனையை தவிர்க்க எச்சரிக்கையாக இருங்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

தடைப்பட்டு நின்ற காரியங்கள் நடந்து முடியும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். கவனமாக இருப்பது நல்லது. உடல்நலனில் கவனம் தேவை. மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம். காதலர்கள் சந்திப்பதை தவிர்ப்பது நல்லது. சினம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 4

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எந்த விஷயத்திலும் கவனத்தோடும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். யாருடம் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தேவையற்ற செலவுகள் வரும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். சிலருக்கு  வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது. தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். ஆசைப்பட்ட விஷயம் நிறைவேறுவதில் தடை ஏற்படும். எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உதவிகள் கிடைக்காமல் ஏமாற்றம் அளிக்கும். பணிபுரியும் இடத்தில் வீண்பேச்சை தவிர்க்கவும். மனை சார்ந்த பணிகளில் தடை, தாமதம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும். மனதில் நினைத்த பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். குழந்தைகளால் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் நெருக்கடியான சூழல் ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் மேலிடம் குறித்த பேச்சை தவிர்த்துக் கொள்வது நல்லது. எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

மகரம் | Nalaya Rasi Palan Magaram

முயற்சிக்கு ஏற்ப பலன் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்து முடியும். பேச்சினால் பிரச்னை வரவாய்ப்பு உள்ளதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மனைவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. செல்பேசி மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உங்களால் உதவி பெற்றவர்கள் இப்போது உங்களுக்கு உதவுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் | Nalaya Rasi Palan Meenam

சந்தோஷத்திற்கு குறை இருக்காது. துணையின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். ஒரு புதிய நபரால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்டு நின்ற சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்