Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan Tamil: இன்று திடீரென மருத்துவ செலவை சந்திக்க போகும் ராசிக்காரர் நீங்களா…! ஜூன் 19, 2022  ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 18, 2022 & 13:30 [IST]
Tomorrow Rasi Palan Tamil: இன்று திடீரென மருத்துவ செலவை சந்திக்க போகும் ராசிக்காரர் நீங்களா…! ஜூன் 19, 2022  ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                          Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30- 08:30 வரை

மாலை: 03:30- 04:30 வரை

Tomorrow Rasi Palan Tamil


Representative Image. மேலும் படிக்க: மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் (19.06.2022) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

சந்தோஷமான வாழ்வை எதிர்பார்த்த உங்களுக்கு இன்று வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும், உத்தியோகத்தில் இருப்பவருக்கு இன்று சற்று ஓய்வு கிடைக்கும். இன்று பணம் கையில்  கொஞ்சம் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். குடும்பத்தில் நிலைமை அவ்வளவாக சரியில்லை என்றாலும் மனம் நிம்மதியாகத் தான் இருக்கும். கணவன் மனைவி உறவில் பெரியதாக பேச்சுவார்த்தையில்லாமல் அமைதியான சூழல் மட்டுமே இருக்கும். கல்வியில் பாராட்டு கிடைக்கும்.   அதிகமான நேரத்தை எதிர்காலத்தைப் பற்றி  யோசித்து குழப்பமடைவீர்கள். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், மருத்துவ செலவு இருக்கும். குழப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்:4

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

அறிவியல் சிந்தனை அதிகம் கொண்ட விருச்சிக இராசிக்காரரே, ஆரோக்கியத்தில் குறை ஏதுமில்லை ஆனால் உங்கள் தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்காது, எனவே இன்று செலவைக் குறைத்து கொள்வது பணப் பற்றாக் குறை தராது. பொறுமையாக இருப்பது இன்று ரொம்ப அவசியம். குடும்ப வாழ்க்கை அருமையாக இருக்கும்.  கணவன் மனைவி உறவில் இருந்த சிறிய பிரச்சனை சரியாகும். சினம்!  

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்:9

தனுசு (Sagittarius 2022 Horoscope)

குடும்பத்தின் மீது தீரா அன்புடன் அளவில்லா பாசத்திற்கு கொண்ட தனுசு இராசிக்காரரே இன்று உங்களிடம் போதுமான அளவு பணம் கையில் இருந்தாலும், செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டில் இன்று அன்பு அதிகரிக்கும். உங்கள் காதல் வாழ்க்கை சந்தோஷம் அதிகமாக இருக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும், நிம்மதியான மன நிலை இருக்கும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் வரும். தன லாபம்!

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை

அதிர்ஷ்ட எண்:4

மகரம் (Capricorn 2022 Horoscope) 

உங்களின் பொறுமையான குணத்துக்கு இன்று நல்ல அங்கீகாரம் கிடைக்கும், மனம் இன்றைய தினம் அமைதி நாடும். உங்கள் காதல் விவகாரத்தில் பிரச்சனை வரும் அதனால் திடீர் திருமணம் கைகூடும் சூழ்நிலை வரும். உங்களின் அன்பான வார்த்தை வீட்டில் இன்பமான சூழலைத் தரும். தொழில் போட்டிகளை திறம்பட சமாளிப்பீர்கள். செல்வ நிலையில் இன்று பாதிப்பில்லை, எதிர்பார்த்த நேரத்தில் பண உதவிக் கிடைக்கும். தொழிலில் லாபம் வரும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கும்பம் (Aquarius 2022 Horoscope)

எப்போதும் சந்தோஷமாக இருக்க நினைக்கும் உங்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமாக இருக்கும், கைவைக்கும் காரியத்தில் ஜெயம் தான். தொழிலில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மாற்றம் இருக்கும். இன்று நிதி நிலை ஏற்றம் இறக்கமாக இருக்கும், செலவு ரொம்ப அதிகமாக இருக்கும். இன்று காதல் வாழ்க்கை செழிக்கும். நீங்கள் யதார்த்தமாகச் செய்யும் செயலின் விளைவு நன்மையாக இருக்கும் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உடல்நலத்தில் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 5

மீனம்(Pisces 2022 Horoscope)

எப்போதும் கலகலப்பாக இருக்கும்  உங்களுக்கு இன்று பழைய நினைவுகள் கொஞ்சம் சந்தோஷத்தை அளிக்கும். தொழிலில் புதுமையான சிந்தனைகள் தோன்றும், ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும், அதைத் தவிர்க்க உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுங்கள். நண்பர்களுடன் வெகு தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். குடும்பத்தினரின் உதவி மனதுக்கு நிம்மதியாக இருக்கும். திருமண வாழ்க்கை மிகவும் அழகாகத் தோன்றும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்