Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இன்று ஜம்முனு வேறலெவலில் வாழும் அதிர்ஷ்டக்கார ராசிக்காரர் நீங்களா....! ஆனால் அமைதியாக இருந்தால் இந்த ராசிக்காரரின் வாழ்க்கை அவ்வளவு தான்..!  ஜூன் 19, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 18, 2022 & 13:15 [IST]
Nalaya Rasipalan: இன்று ஜம்முனு வேறலெவலில் வாழும் அதிர்ஷ்டக்கார ராசிக்காரர் நீங்களா....! ஆனால் அமைதியாக இருந்தால் இந்த ராசிக்காரரின் வாழ்க்கை அவ்வளவு தான்..!  ஜூன் 19, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                          Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30- 08:30 வரை

மாலை: 03:30- 04:30 வரை

Nalaya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

தன் முக அழகைக் கவனிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட உங்களுக்கு  தொழிலில் திடமான வளர்ச்சி இருக்கும், வியாபாரத்தில் எடுக்கும் முயற்சி நல்ல பலன் அளிக்கும். இன்று ஆரோக்கியம்  நன்றாக இருக்கும், ஓய்வு நேரத்தில்  விளையாட்டின் மீது ஆர்வம் வந்து வேலையாடுவீர்கள். இன்று செல்வ நிலையில் வளமான வரவு உண்டு, எதிர்காலத்திற்காக  முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக  இருக்கும், இன்றைய தினம் மகிழ்ச்சியாக நகரும். அமைதியை  கடைப்பிடிக்க வேண்டும், நட்பு வட்டாரம் மூலம் நன்மை வரும்.  ஏற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

உங்களுக்கு இதுவரை மனதில் ரணமாக இருந்த கவலைகள் குறைந்தும் முகத்தில் புன்னகை பிறக்கும். முக்கிய பணி செய்ய நினைக்கும் உங்களுக்கு சில தடைகள் இருக்கும், அதைக் கடக்கும் மனத்தைரியம் உருவாகும். உடல்நிலை நன்றாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும், வருமானம் அதிகமாகும். இன்று  எதிர்பார்த்த உதவி கிடைக்கும், உங்கள் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகமாக இருந்தாலும், பின்னாளில் பாராட்டப் பெறுவீர்கள். தைரியமாக செயல்படுவதால் இன்று வெற்றி உங்கள் கைவசம் இருக்கும். துணிவு! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Gemini 2022 Horoscope)

பேச்சு சாதுரியமும் நிதானமும் கொண்ட உங்களின் யதார்த்தமான அணுகுமுறை  இன்று சற்று சாதகமாக  இருக்கும், ஆனால் தொழிலில் தாமதமாக வேலைகள் நடக்கும். தெளிவான திட்டமிடல் வேண்டும். இன்று உங்களின் அளவுக்கு மிஞ்சிய உணர்ச்சிவசம் மனக்குழப்பத்தை உருவாக்கும்.  வழக்கத்தை விட அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகமாகக் காணப்படும். இறை பிராத்தனை நன்மை வகுக்கும். குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும். நிதி வளர்ச்சி அமோகமாக இருக்கும். சிறப்பான உடல்நலம் ஆனந்தமான  நாளாக மாற்றும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கடகம் (Cancer 2022 Horoscope)

மனதில் பிரகாசமான எண்ணங்களைக் கொண்ட உங்களுக்கு இன்று மந்தமான நாளாக இருக்கும், தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை வரும். இன்று செலவுகள் சுமாராக இருக்கும், செல்வ நிலை உயரும். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கடக  இராசுக்காரருக்கு ஆரோக்கியம் உயரும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது.  திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், ஆரோக்கியமான உறவுக்கு வெளிப்படையான பேச்சு உரையாடல் வழி செய்யும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் செய்யும் முயற்சிகள் இன்று வெற்றி அளிக்காது, விடாமுயற்சி தேவைப்படும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Leo 2022 Horoscope)

அழகான தோற்றமும் மன தைரியமும் கொண்ட சிம்ம இராசிக்காரரே இன்று பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இரத்த சொந்தத்தில் இன்று  பாசத்துடன் நடந்து கொள்ளுவார்கள். உங்களுக்கு செல்வ நிலை சீராக இருப்பதால் உங்கள் பணத்தை லாபம் தரும் இடத்தில் சேமிப்பது பலன் தரும். புதிய நட்பு உருவாகும். வெளியில் செல்லும்போது முன்கோபத்தைத் தவிர்க்கவும்,  ஏனென்றால் அது அமைதி கெடும் சூழல் உண்டாகும். உடல்நலம் நன்றாக இருந்தாலும் திடீரென உடல்நலக் குறையை உருவாக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Virgo 2022 Horoscope)

 வசிகர பேச்சால் அனைவரையும் கவரும் குணத்தைப் பிறப்பிலிருந்து கொண்ட உங்களுக்கு இன்று பல பிரச்சனைகள் யாவும் தீர்ந்து, ஏற்ற இறக்கமான நாளாக இருக்கும். தொழிலில் முழுமூச்சுடன் சுறுசுறுப்பாக வேலை செய்து, புகழின் உச்சத்திலிருந்தாலும், ஆனால் கைவிடுவீர்கள். நீங்கள்  ஹோமம் போன்ற புனித சடங்குகளில் கலந்து கொள்வீர்கள். இன்று விருந்தினர் வருகையால் நன்மை உண்டு. நிலையான நிதி நிலை இருக்கும். சிறப்பான ஆரோக்கியம் இருக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


Representative Image. மேலும் படிக்க: துலாம்-மீனம் வரை அடுத்த 6 ராசியின் 19.06.2022 ராசிபலனை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்