Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த மாசத்துல இந்த விஷயத்த மட்டும் செய்ய வேண்டாம்.. ஆபத்து.. | Vaikasi Matha Rasi Palan 2023 Dhanusu in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த மாசத்துல இந்த விஷயத்த மட்டும் செய்ய வேண்டாம்.. ஆபத்து.. | Vaikasi Matha Rasi Palan 2023 Dhanusu in TamilRepresentative Image.

வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

வைகாசி மாத ராசிபலன் 2023 தனுசு:

குருபகவானை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசியினரே! இந்த வைகாசி மாதத்தில் தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல மாற்றம் வரும். மந்தமாக இருந்த வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். நினைத்த காரியம் நடைபெறும். வேலை மாற்றம் செய்ய விரும்புவோருக்கு அற்புதமான காலக்கட்டம். இருப்பினும், உத்தியோகத்தில் இருப்போருக்கு எதிர்மறையான எதிர்ப்புகள் வலுக்கும். எனவே உஷாராக இருக்க வேண்டும். எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். காதலர்கள் தம்பதிகளாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

திருமண வயதில் இருப்பவர்களுக்கு நினைத்த படி வாழ்க்கை துணை கிடைப்பார்கள். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலும், ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து பாகப் பிரிவினையில் இடஞ்சல்கள் வரும். எனவே, சகோதர, சகோதரிகள் விட்டுக்கொடுத்து செல்வது சிறந்தது. கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய மாதம். எதிர்பாலினத்தவரால் சின்ன சின்ன இடையூறுகளை சந்திக்க வாய்ப்புண்டு. அதேபோல், இந்த மாதம் முழுவதும் இரவு நேர பயணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்