Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உங்களுடைய பேச்சுக்கு தனி மரியாதை கிடைக்கும்...ஆனா இதுல மட்டும் கவனம் | Aani Matha Rasi Palan 2023 Danush in Tamil

Priyanka Hochumin Updated:
உங்களுடைய பேச்சுக்கு தனி மரியாதை கிடைக்கும்...ஆனா இதுல மட்டும் கவனம் | Aani Matha Rasi Palan 2023 Danush in TamilRepresentative Image.

ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும்  செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் தனுஷ் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

உங்களுடைய பேச்சுக்கு தனி மரியாதை கிடைக்கும்...ஆனா இதுல மட்டும் கவனம் | Aani Matha Rasi Palan 2023 Danush in TamilRepresentative Image

ஆனி மாத ராசிபலன் 2023 தனுஷ்:

நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, இயற்கை அல்லது செயற்கை முறையில் குழந்தை பிறகும் வாய்ப்புள்ளது. இதுவரை ஏற்படும் தடங்களை விலக்க, குலதெய்வ வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தரிக்கான காலமாக அமையும். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகளை தேடுபவராக இருந்தால் உங்களுக்கு ஓர் நற்செய்தி. நீங்கள் எதிர்பார்த்த படி வேலை கிடைக்கும். கணவன்-மனைவி இடையே மோதல் ஏற்பட்டதால் பிரிந்திருந்தால், நீங்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

திருமணம் நடைபெறாமல் தாமதம் ஏற்படும் நபர்களுக்கு, தந்தை வழியில் நல்ல வரன் கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக அமையும். பல சம்பவங்களால் உங்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு கிடைக்காமல் இருக்கலாம். அந்த நிலை மாறி உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமை வெளிப்பட்டு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்துடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் இன்னல்கள் இருந்தால் அதில் இருந்து மீண்டு வருவீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்