Sat ,Mar 02, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் அப்டேட்டட் வெர்சனில் இத்தனை சிறப்பம்சமா? | 2023 Hero Xpulse 200 4V Price

Nandhinipriya Ganeshan Updated:
2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் அப்டேட்டட் வெர்சனில் இத்தனை சிறப்பம்சமா? | 2023 Hero Xpulse 200 4V PriceRepresentative Image.

மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏராளமான பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பிலும் தற்போது நல்ல முன்னேற்றத்தை சந்தித்து வரும் ஹீரோ நிறுவனம் தற்போது அதன் புகழ்பெற்ற அட்வென்சர் பைக்கான எக்ஸ்பல்ஸ் 200 4வி மாடலில் [2023 Hero XPulse 200 4V] அப்டேட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்புகள், நிறங்கள், மற்றும் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். 

2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் அப்டேட்டட் வெர்சனில் இத்தனை சிறப்பம்சமா? | 2023 Hero Xpulse 200 4V PriceRepresentative Image

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி அப்டேட் வெர்ஷன்:

இந்தியாவின் சிறத்த ஆஃப்ரோடு அனுபவத்தை வழங்கும் பட்ஜெட் விலை பைக்குகளில் இந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி மாடலும் ஒன்று. முன்பாக ரேலி கிட் எடிசன் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட மாடல் தற்போது எக்ஸ்பல்ஸ் 200 4வி புரோ எடிசன் என்ற பெயருடன் வந்துள்ளது. பைக்கில் அப்டேட்கள் என்று பார்த்தால், முன்பக்கத்தில் புதிய மற்றும் ரீடிசைனிலான எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, ஹெட்லைட்டில் 'H'-வடிவ டிசைன் மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இது 230 சதவீத கூடுதல் ஒளியை தரக்கூடியது என்பதால், ஹெட்லைட் முன்பை விட பிரகாசமானதாக இருக்கும்.

அத்தோடு, பைக்கின் முன்பக்கத்தில் விண்ட்ஸ்க்ரீனின் உயரமும் 60மிமீ வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. பைக்கிற்கு புதிய ஸ்விட்ச் கியர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஹேண்டில்பாரில் ரைடரின் கை விரல்களை பாதுகாக்கும் கார்ட்கள் பெரியதாக்கப்பட்டுள்ளன. ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி முன்பை காட்டிலும் 35மிமீ தாழ்வாகவும், 8மிமீ பின்னோக்கியும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், யுஎஸ்பி சார்ஜர் தொழில்நுட்பம் ஒருவழியாக பைக்கில் காக்பிட்டிற்கு அருகாமையில் மாற்றப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 90/90-21 M/C 54S டயர் மற்றும் பின்புறத்தில் 120/80-18 M/C 62S டயரும் கொடுக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் 37mm டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 10 ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. முழுமையான டிஜிட்டல் எல்சிடி கிளஸ்ட்டர் கொண்டுள்ள இந்த பைக்கில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி கொண்டு டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியும் உள்ளது.

2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் அப்டேட்டட் வெர்சனில் இத்தனை சிறப்பம்சமா? | 2023 Hero Xpulse 200 4V PriceRepresentative Image

என்ஜின்:

இவை எல்லாவற்றையும் விட பைக்கில் முக்கியமான அப்டேட் என்ஜினில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில் 199.6 சிசி ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்லது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 8,500rpm இல் 18.8 bhp பவரையும் மற்றும் 6,500rpm இல் 17.35 Nm டார்க்கையும் வழங்குகின்றது. மேலும், ஹீரோ நிறுவனம் இந்த புதிய பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ரோடு, ஆஃப்ரோடு மற்றும் ரேலி என மூன்று ரைடிங் மோடுகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மைலேஜை பொறுத்தவரை, லிட்டருக்கு 42 முதல் 55 கிலோ மீட்டர் வரை செல்லும். 

விலை & நிறம்:

இத்தனை புதுப்பிப்புகளுடன் வரும் இந்த Hero XPulse 200 4V பைக்கின் எக்ஸ்ஷோரும் விலை ரூ. 1.43 லட்சம் மற்றும் XPULSE 200 4V PRO ரூ. 1.50 லட்சம்ஆகும். மேலும், வண்ணத் தேர்வுகளை பொறுத்த வரை, எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கானது மேட் நெக்சஸ் ப்ளூ, டெக்னோ ப்ளூ, பிளாக் ஸ்போர்ட்ஸ் ரெட் நிறங்களிலும், புரோ வேரியண்ட் பைக்கானது புரோ வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கின்றது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்