Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57
Exclusive

புது அப்டேட்டுடன் வரும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்.. | Hop Oxo Electric Bike Price in India

Nandhinipriya Ganeshan Updated:
புது அப்டேட்டுடன் வரும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்.. | Hop Oxo Electric Bike Price in IndiaRepresentative Image.

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி ஸ்டார்ட்அப் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹாப் எலெக்ட்ரிக் [Hop Electric] நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் அதன் புத்தம் புதிய தயாரிப்பான ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பக்கை [HOP Oxo Electric Bike] கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் அம்சங்களில் ஒரு புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது. 

ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக் சிறப்பம்சம்:

ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இந்த சூப்பர் ரேஞ்ஜ் திறனுக்காக 3.75 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது 6.2 kW (8.2bhp) திறனையும், 200 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். ஹாப் ஆக்ஸோவின் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ முதல் 95 கிமீ வரையில் ஆகும். மேலும், இந்த பைக்கை வீட்டு சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் வரை தேவைப்படும். மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக 5 அங்குல ஸ்மார்ட் எல்சிடி திரை இருக்கின்றது.

மேலும், இருசக்கர வாகனத்தில் சிறந்த சஸ்பென்ஷனுக்காக முன் பக்கத்தில் அப்ரைட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஹைட்ராலிக் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தில் 250 கிலோ வரையில் தாங்கும் திறன் கொண்டது. எனவே அதிக எடை கொண்டவர்களாலும் பயணிக்க முடியும். சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக், காம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இழந்த மின்சாரத்தை மீட்டெடுப்பதற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக் ட்வைலைட் கிரே (Twilight Grey), கேன்டி ரெட் (Candy Red), மேக்னடிக் ப்ளூ (Magnetic Blue), எலெக்ட்ரிக் யெல்லோ (Electric Yellow) மற்றும் ட்ரூ பிளாக் (True Black) என்ற ஐந்து விதமான நிற தேர்வுகளில் கிடைக்கிறது.

நியூ அப்டேட்:

OXO பைக் ஒரு நேர்த்தியான வடிவமைப்பில் நிலைத்தன்மை, செயல்திறன் மற்றும் மலிவு விலை ஆகியவற்றின் மூலம் அதிகம் விற்பனையாகும் வாகனமாக உள்ளது. தற்போது பயனர்களின் தரவு புள்ளிகளின் அடிப்படையில், முதல் முறையாக VCU ஃபார்ம்வேர் ஓவர்-தி-ஏர் 4.90 அப்டேட்டை [VCU Firmwar Over-the-Air Version] செய்துள்ளது. இந்த FOTA Ver 4.90 அப்டேட்டுடன், பைக் பிராண்டால் உறுதிப்படுத்தப்பட்ட ECO mode முடுக்கம் மூலம் குறைந்த வேக பயன்முறையில் கூட 2 மடங்கு சிறப்பாக செயல்படும். இது சிறந்த இணைப்பு மற்றும் பேட்டரி வரம்பை கணிக்க பெரிதும் உதவும்.

4ஜி இணைப்பு இப்போது புதுப்பிக்கப்பட்ட நெட்வொர்க் லாட்ச்சிங்குடன் தடையின்றி கிடைக்கிறது. அதே நேரத்தில் நிகழ்நேர பேட்டரி ஆரோக்கியம் [Real time battery] மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் சிறந்த அல்காரிதம்களுடன் காட்சிக்கு துல்லியமான பேட்டரி வரம்பை வழங்கும்.

விலை:

இந்த பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ.1.56 லட்சம் ஆகவும் மற்றும் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ.1.80 லட்சம் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்