Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குறைந்த விலையில் ஏதர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சூப்பர் அம்சங்கள்! | Ather 450S Electric Scooter Full Specifications

Nandhinipriya Ganeshan Updated:
குறைந்த விலையில் ஏதர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சூப்பர் அம்சங்கள்! | Ather 450S Electric Scooter Full SpecificationsRepresentative Image.

ஏதர் எனர்ஜி நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏதர் 450எஸ் ஸ்கூட்டரை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறைந்த விலையை கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். ஏதர் 450எஸ் பற்றிய கூடுதல் விவரங்களை பார்க்கலாம்.

பெங்களூருவை தளமாக கொண்ட எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான 'ஏதர் எனர்ஜி', 2018 ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் தொடுதிரை கன்சோலை அறிமுகப்படுத்திய முதல் பெரிய நிறுவனம் ஆகும். இதுவரை நிறுவனம் பல விதமான ப்ரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

விலை & முன்பதிவு:

இந்த நிலையில், தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏதர் 450எஸ் ஸ்கூட்டரை வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியா முழுவதும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்கூட்டரின் ஸ்பெஷாலிட்டியே அதன் விலை தான். நிறுவனத்தின் தற்போதைய பிரபலமான மாடலான 450எக்ஸ் ஸ்கூட்டரை போலவே வெளியாக உள்ள இந்த புதிய ஏதர் 450எஸ் ஸ்கூடரின் விலை ரூ.1.29 லட்சம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு மற்றும் விற்பனை அடுத்த மாதம் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

பேட்டரி:

நாட்டில் ஏற்கனவே விற்பனையில் உள்ள 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட, இந்த புதிய இ-ஸ்கூட்டர் ஒப்பிடக்கூடிய திறன் மற்றும் சிறந்த சவாரி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஏதர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது ஒரு முழுமையான சார்ஜில் 115 km (IDC) உச்ச வரம்பை வழங்கும் சிறிய 3kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது 8.58 பிஹெச்பி பவரையும், 26 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இதன் டாப் ஸ்பீடு என்று பார்த்தால், மணிக்கு 90 கிமீ வேகத்தை எட்டும் என்று நிறுவனம் கூறுகிறது.

கூடுதல் அம்சம்:

விலை குறைவாக இருக்கிறது என்றால் தொழில்நுட்பத்தில் சில மாறுபாடுகள் இருக்கும் அல்லவா! ஆம், 450எக்ஸ் மாடலில் காணப்படும் தொடுதிரை அலகுக்கு பதிலாக, இந்த புதிய 450எஸ் மாடலில் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலை கொண்டிருக்கும். இது ஸ்மார்ட்போனை போன்ற தொடு திறன் இல்லாமல் இருந்தாலும், ஸ்கூட்டர் அதே 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, 4G LTE இணைப்பு, வழிசெலுத்தல் (navigation), புளூடூத் இணைப்பு மற்றும் பல அசத்தலான அம்சங்களுடன் வரவுள்ளது.

வடிவமைப்பு:

இது தவிர, 450S இல் வடிவமைப்பு மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இது தற்போதைய மாடலின் அதே கூர்மையான, கச்சிதமான வடிவமைப்பைக் கொண்டிருக்கும். முன் ஃபோர்க்குகள், பின்புற மோனோஷாக் மற்றும் பெல்ட் டிரைவ் கொண்ட முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக் ஆகியவை மாறாமல் இருக்கலாம். அறிமுகப்படுத்தப்பட்டதும், ஏத்தர் 450S ஆனது Ola S1, TVS iQube S, Bajaj Chetak. Ampere Primus மற்றும் அதே பிரிவில் உள்ள பிற இ-ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்