Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜூலை முதல் சிட்ரோன் சி3 எஸ்யூவின் விலை உயருகிறது.. எவ்வளவு தெரியுமா? | Citroen C3 Price Hike

Nandhinipriya Ganeshan Updated:
ஜூலை முதல் சிட்ரோன் சி3 எஸ்யூவின் விலை உயருகிறது.. எவ்வளவு தெரியுமா? | Citroen C3 Price HikeRepresentative Image.

Citroen India நிறுவனம் தனது சிட்ரோன் சி3 எஸ்யூவிற்கான விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது உள்ள விலையில் கூடுதலாக ரூ.17,500 அதிகரிப்படும். இந்த விலை உயர்வானது வரும் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரவுள்ளது. சி3 மாடலானது லைவ், ஃபீல் மற்றும் ஷைன் என மூன்று வகைகளில் கிடைக்கிறது. எனவே, விலை உயர்வு அந்தந்த வேரியண்ட்களை பொறுத்து மாறுபடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம் வாங்க பார்க்கலாம்.

சிட்ரோன் சி3 வேரியண்ட்ஸ்:

சிட்ரோன் நிறுவனம் கடந்த ஆண்டு சி3 ஹேட்ச்பேக்கை லைவ், ஃபீல், மற்றும் ஷைன் என்ற இரண்டு வகையில் அறிமுகம் செய்திருந்தது. இது ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு புதிய டாப்-ஸ்பெக் ஷைன் வேரியண்டை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய வேரியண்ட்டில்  15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், வாஷருடன் பின்புற வைப்பர், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் மின்சாரம்-சரிசெய்யக்கூடிய ORVMகள் போன்ற புதிய அத்தியாவசிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 

சிட்ரோன் இன்ஜின்கள்:

சிட்ரோன் சி3 காரில் இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன் உள்ளது. அதன்படி, 1.2லிட்டர் டர்போ இன்ஜின் அதிகபட்சமாக 109பிஎஸ்பி குதிரைத்திறனையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 1.2லிட்டர் பெட்ரோல் PURETECH 82 இன்ஜின் 80பிஎச்பி குதிரைத்திறனையும், 115 என்எம் டார்க்கையும் வெளியிடுகிறது. இது 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அடுத்த சில வாரங்களில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இது வரவிருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்