Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

புத்தம் புதிய Lexus GX SUV...சும்மா வேற லெவல் அம்சங்களுடன் | Lexus GX SUV 2024

Priyanka Hochumin Updated:
புத்தம் புதிய Lexus GX SUV...சும்மா வேற லெவல் அம்சங்களுடன் | Lexus GX SUV 2024Representative Image.

இத்தனை நாட்களாக Lexus GX SUV-ன் முக்கிய அம்சங்களை டீசர் மூலம் வெளியிட்டு நம் அனைவரையும் பிரம்மிக்க வைத்திருந்தனர். ஆனால் இன்று அதகியாரபூர்வமாக Lexus GX SUV கார் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லெக்ஸஸ் ஜிஎக்ஸ் எஸ்யூவி, புதிய அண்டர்பின்னிங்ஸ், பாடி ஷெல், இன்டீரியர், பவர்டிரெய்ன்கள் மற்றும் ஆஃப்-ரோட் கியர் ஆகியவற்றைக் கொண்ட பிராண்ட் நியூ வாகனமாகும். இந்த காரின் தோற்றம், வடிவமைப்பு, சிறப்பம்சம், விலை ஆகியவற்றைப் பற்றி பார்க்கலாம்.

புதிய லெக்ஸஸ் ஜிஎக்ஸ் பாரம்பரிய பாடி-ஆன்-ஃபிரேம் செட்-அப்புடன் தொடர்கிறது. அத்துடன் எல்எக்ஸ் மற்றும் லேண்ட் க்ரூஸரை ஆதரிக்கும் சமீபத்திய டிஎன்ஜிஏ-எஃப் மாடுலர் லேடர் ஃப்ரேம் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய Lexus GX SUV...சும்மா வேற லெவல் அம்சங்களுடன் | Lexus GX SUV 2024Representative Image

வேரியண்ட் & சிறப்பம்சங்கள்

இந்த பிராண்ட் நியூ Lexus GX SUV ஆனது, அதன் வழக்கமான குரோம்-லேடன் டிரிம்களைத் தவிர - ஓவர்டிரெயில் மற்றும் ஓவர்டிரெயில்+ என்னும் இரண்டு ஆஃப்-ரோடு ஃபோகஸ்டு வேரியண்ட்களை கொண்டு வருகிறது. இவை ஃபெண்டர்ஸ் மற்றும் கிரில்லில், கருப்பு உச்சரிப்புகள் மற்றும் அலுமினிய ஸ்கிட் பிளேட்டுடன் வருகின்றன. இதில் 18-இன்ச் சக்கரங்கள் நிலையானவை மற்றும் டயர் பேக்கேஜ் 33-இன்ச் உள்ளடக்கியது.

இந்த வேரியண்டுகள் டவுன்ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், 3டி மல்டி டெரெய்ன் மானிட்டர், க்ரால் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக்-கைனடிக் டைனமிக் சஸ்பென்ஷன் ஆகியவற்றுடன் வருகின்றன. இவை சிறந்த ஆஃப்-ரோடு செயல்திறனுக்காக கூடுதல் சக்கர ஆர்ட்டிகுலேஷன் வழங்குகிறது. இந்த மாடலின் டாப்-ஸ்பெக் லெக்ஸஸ் ஜிஎக்ஸ் 550 ஓவர்ட்ரெயில்+ மசாஜ் செயல்பாடு மற்றும் பவர்-எக்ஸ்டெண்டிங் குஷனுடன் சிறந்த சீட்களைப் பெறுகிறது.

புத்தம் புதிய Lexus GX SUV...சும்மா வேற லெவல் அம்சங்களுடன் | Lexus GX SUV 2024Representative Image

இன்டிரியர்

லெக்ஸஸ் ஜிஎக்ஸ் எஸ்யூவி, ஒரு புதிய 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் டேஷ்போர்டின் மையத்தில் களமிறங்கும் ஒரு பெரிய 14-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்டைப் பெறுகிறது. லெக்ஸஸ் HVAC மற்றும் ஆடியோவைக் கட்டுப்படுத்த டயல்களையும், 4WD கியரை இயக்குவதற்கான பட்டன்களையும் வழங்கியுள்ளது. இரண்டு இருக்கை கட்டமைப்புகள் வழங்கப்படுகின்றன - அதில் இரண்டாவது வரிசையில் கேப்டன் நாற்காலிகளைப் பெறும் ஆறு பயணிகள் அமைப்பு மற்றும் இரண்டாவது வரிசையில் ஒரு பெஞ்ச் இருக்கை கொண்ட ஏழு பயணிகள் இருக்கை அமைப்பும் அளிக்கப்படுகிறது. மேலும் சில வேரியண்டில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேவை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

புத்தம் புதிய Lexus GX SUV...சும்மா வேற லெவல் அம்சங்களுடன் | Lexus GX SUV 2024Representative Image

பவர்ட்ரெயின்

புது Lexus GX 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட இரட்டை-டர்போசார்ஜ் செய்யப்பட்ட 349hp, 3.5-லிட்டர் V6 இன்ஜினைப் பெறுகிறது. இது நான்கு சக்கர இயக்கி மற்றும் லாக் செய்யக்கூடிய Torsen வரையறுக்கப்பட்ட ஸ்லிப் சென்டர் டிஃபரன்ஷியலை ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும் ட்ரான்ஸ்பர் கேஸ் 4WD High மற்றும் 4WD Low இடையே மாறும் அமைப்பு உள்ளது. அதே போல, ஓவர்டிரெயில் வரம்பில் லாக்கிங் ரியர் டிஃபெரன்ஷியலும் கிடைக்கிறது. இந்த கார் முதலில் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்போவதாக கூறப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் முதல் முறையாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த கார் டீசல் வேரியண்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்