Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கெத்தாக வரும் டிரையம்ப் ஸ்பீட், ஸ்கிராம்ப்ளர் 400 பைக் | Triumph Speed 400

Abhinesh A.R Updated:
கெத்தாக வரும் டிரையம்ப் ஸ்பீட், ஸ்கிராம்ப்ளர் 400 பைக் | Triumph Speed 400Representative Image.

பைக் பிரியர்களை கிறங்கடிக்கும் தோற்றத்தை டிரையம்ப் பைக்குகள் கொண்டுள்ளன. இதனை வாங்க நினைத்தாலும், விலையை கருத்தில் கொண்டு பலர் தவிர்த்து விடுகின்றனர். இது தொடர் கதையாகி போகுமோ என நினைத்துக் கொண்டிருந்த வேளையில், பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய இரண்டு பைக்குகளை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த சூழலில், டிரையம்ப் ஸ்பீடு 400, டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் ஆகிய இரு மாடல் பைக்குகளும் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் இந்த பைக் ஜூலை 5 அன்று அறிமுகமாகிறது. இதற்கான முன்பதிவை ஏற்கனவே பஜாஜ் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

கெத்தாக வரும் டிரையம்ப் ஸ்பீட், ஸ்கிராம்ப்ளர் 400 பைக் | Triumph Speed 400Representative Image

டிரையம்ப் ஸ்பீட் 400, ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் பைக் கட்டமைப்பு

Speed 400 பைக்கில் 17” இன்ச் அலாய் வீல், 43மிமீ USD ஃபோர்க், பின்பக்க மோனோ ஷாக் வசதி, 1,377மிமீ வீல்பேஸ், 2,056மிமீ நீளம், 790மிமீ சீட் உயரம், 170 கிலோ எடை கொண்டதாக உள்ளது.

Scrambler 400X பைக்கில் 19” இன்ச் அலாய் வீல், 53mm அதிக உயரம் கொண்ட USD ஃபோர்க், 2,117மிமீ வீல்பேஸ், 1190மிமீ நீளம், 835மிமீ சீட் உயரம், 179 கிலோ எடை உள்ளது. ஸ்கிராம்ப்ளர் 900/1200 போன்ற தோற்ற அமைப்பை இந்த பைக் பெற்றுள்ளது.

கெத்தாக வரும் டிரையம்ப் ஸ்பீட், ஸ்கிராம்ப்ளர் 400 பைக் | Triumph Speed 400Representative Image

டிரையம்ப் ஸ்பீட் 400, ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் அம்சங்கள்

இதில் புதியதாக ஒரு 398cc சிங்கள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் 39.4BHP, டார்க் 37 NM ஆக உள்ளது. எஞ்சினை சூடாகாமல் திரவ குளிரூட்டி பாதுகாக்கிறது. 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி, மாற்றக்கூடிய டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதிகளும் உள்ளன.

இந்த இரண்டு பைக்களிலும் எல்சிடி டிஸ்ப்ளே உடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உள்ளது. இதில் கியர் பொசிஷன் இண்டிகேட்டர், எவ்வளவு தூரம் செல்லும், டேகோமீட்டர் விவரங்களை பார்க்கலாம். இதை கன்ட்ரோல் செய்ய ஹாண்டில் பார் மவுண்ட் கன்ட்ரோல் பொத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், டூயல் டிஸ்க் பிரேக் வசதி, டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக 400X Scrambler பைக்கில் பின்பக்கமும் ABS வசதி உள்ளது. ஆப் ரோடிங் விரும்பிகளுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.

கூடுதலாக டைப்-சி சார்ஜிங் வசதி, ஸ்டேரிங் லாக், Anti Theft போன்ற பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்ட் மாடல் பைக்கிலேயே வருகின்றன. பைக் சாவி உள்ளே தனிப்பட்ட டிரான்பாண்டர் சிப் பொருத்தப்பட்டுள்ளதால், வேறு சாவியை இந்த வாகனம் ஏற்றுக்கொள்ளாது என்பது கூடுதல் சிறப்பு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்