Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ambassador 2.0: திரும்ப வந்துட்டேனு சொல்லு....மீண்டும் விற்பனைக்கு வரும் அம்பாசிடர்.!

madhankumar May 26, 2022 & 13:11 [IST]
Ambassador 2.0: திரும்ப வந்துட்டேனு சொல்லு....மீண்டும் விற்பனைக்கு வரும் அம்பாசிடர்.!Representative Image.

அம்பாசிடர் (ambassador) கார் வெர்சன் 2.0 வடிவத்தில் மீண்டும் இந்தியாவின் விற்பனையாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இன்னும் 2 ஆண்டுகளில் இந்திய சந்தையை வந்தடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வாங்க இந்த கார் குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் மிக பிரபலமான கார் மற்றும் பிரியமான கார் என இந்த அம்பாசிடர் கார் இருந்துவந்தது. கடந்த பல வருடங்களாக இந்த கார்தான் இந்திய சாலையை ராஜா போல் ஆட்சி செய்துவந்தது. மிகவும் உறுதியான காரக இது இருந்துவந்தாதால், மாநில முதலமைச்சர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள்வரை இந்த காரை பயன்படுத்திவந்தனர். இத்தகைய ஓர் சிறப்பு மிக்க காரே மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வீல்ஸ் ஆஃப் இந்தியா (Wheels of India) என அழைக்கப்பட்ட அக்கார் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மீண்டும் கால் தடம் பதிக்க இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளது.

அம்பாசிடர் 2.0:

புதிய அவதாரம் மற்றும் புதிய அம்சங்களுடன் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இக்காரை உருவாக்கும் பணியில் ஹிந்த் மோட்டார் பைனான்சியல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Hind Motor Financial Corporation of India)வும், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பியூஜியோட் (Peugeot) ஆகிய இரு நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன.

இந்த இரு நிறுவனகிலத்தான் இந்த புதிய அம்பாசிடர் காரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் நமது சென்னையில் வைத்துதான் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்த காரின் தயாரிப்பு பணிகளை செய்துவருகிறது. இந்நிறுவனம் ஹிந்த் மோட்டார் பைனான்சியல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கீழ் செயல்படும். சிகே பிர்லா குழுமம் இணை நிறுவனமாக செயல்படும். புதிய அம்பாசடர் கார் புதிய மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் டிசைனை பெறும். இதற்கான பணிகள் மேம்பட்டை நிலையை எட்டியிருப்பதாக ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர் உத்தம் போஸ் தெரிவித்திருக்கின்றார்.

ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை ஆலையில் மிட்சுபிஷி நிறுவனத்தின் கார்கள் தயாரிக்கப்பட்டுவந்தன. உத்தர்பாரா ஆலையிலேயே அம்பாசடர் கார்கள் தயாரிக்கப்பட்டன. இந்த ஆலையில் கடைசியாக 2014 செப்டம்பரிலேயே அம்பாசடர் கார் தயாரிக்கப்பட்டது. இதன்பின்னர் புதிய விதிகள் மற்றும் கடுமையான போட்டிகள் காரணமாக இந்த நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. இந்தியாவின் பழமையான கார் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கடுமையான வீழிச்சியை சந்தித்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளரான சிகே பிர்லா குழுமம் அதன் கார் பிராண்டை ரூ. 80 கோடிக்கு பிரெஞ்சு கார் பிராண்டான பியூஜியோட்டிற்கு விற்பனை செய்த நிகழ்வு இன்னும் பல மடங்கு சோகத்தையும், அதிர்ச்சியையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. பிராண்ட் கை மாற்றமானது 2017ம் ஆண்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாசிடர் கார் குறித்த சுவாரசியம்:

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம் மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு. இந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற காரக சீரிஸ் III விளங்கியது, இதன் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட காரையே அம்பாசிடர் என பெயர்மாற்றம் செய்து இந்தியாவில் இந்த நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.இந்த காரில் 1,489 சிசி திறன் கொண்ட பி-சீரிஸ் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த காரின் 2.0 வெர்சனே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்