Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,895.62
247.00sensex(0.34%)
நிஃப்டி22,410.75
74.35sensex(0.33%)
USD
81.57
Exclusive

மின்னல் வேகத்தில் பறக்குமாம்... இந்தியாவிலேயே முதன் முறையாக இப்படியொரு காரை வாங்கிய பிரபல நடிகர்!

KANIMOZHI Updated:
மின்னல் வேகத்தில் பறக்குமாம்... இந்தியாவிலேயே முதன் முறையாக இப்படியொரு காரை வாங்கிய பிரபல நடிகர்! Representative Image.

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் டோவினோ தாமஸ், இந்தியாவிலேயே முதன் முறையாக அதிக வேகமாக பறக்கக்கூடிய லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். 

மின்னல் வேகத்தில் பறக்குமாம்... இந்தியாவிலேயே முதன் முறையாக இப்படியொரு காரை வாங்கிய பிரபல நடிகர்! Representative Image

மின்னல் முரளி வாங்கிய சூப்பர் கார்: 

வெள்ளித்திரையில் மின்னல் முரளி போன்ற வித்தியாசமான வேடங்களில் ஜொலித்தவர் மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ். இந்தியாவிலேயே முதன் முறையாக 2023 லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டை தனது கேரேஜிக்கு கொண்டு வந்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் பிரபல எஸ்யூவி பிராண்ட் ஆன ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் நிறுவனம் வர உள்ள 2023ம் ஆண்டிற்கான தனது மாடல்களை அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி டெலிவரி இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதனை முதல் ஆளாக டெலிவரி எடுத்த மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தனது சோசியல் மீடியா பக்கங்களில் வீடியோ மற்றும் போடோக்களை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

நியூ ஜெனரேஷன் ஸ்போர்ட் காரான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1.71 கோடி ஆகும். இந்த வாகனத்தின் ஆன்ரோடு விலை 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 

மின்னல் வேகத்தில் பறக்குமாம்... இந்தியாவிலேயே முதன் முறையாக இப்படியொரு காரை வாங்கிய பிரபல நடிகர்! Representative Image

நியூ ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் டிசைன்: 

ஸ்டெல்த் போன்ற முன்பக்க கிரில், டிஜிட்டல் எல்இடி லைட்டிங் யூனிட்கள், பகல் நேர ரன்னிங் லைட், சிக்னேச்சர்  பெயிண்டிங் உடன் அவுட்டோர் டிசைன் அசத்தலாக அமைந்துள்ளது.  சாடின் பர்னிஷ்டு காப்பர், சாடின் கிரே அலாய் வீல் ஃபினிஷ்களுடன் பானட் லூவர்ஸ் மற்றும் சைட் இங்காட்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் முன்பக்க கிரில் மற்றும் ரேஞ்ச் ரோவர் என்ற மேட் கிராஃபைட் அட்லஸில் முடிக்கப்பட்டுள்ளன. 
 

மின்னல் வேகத்தில் பறக்குமாம்... இந்தியாவிலேயே முதன் முறையாக இப்படியொரு காரை வாங்கிய பிரபல நடிகர்! Representative Image

சிறப்பம்சங்கள் என்னென்ன?

21 அங்குலம் முதல் 23 அங்குலம் வரையிலான வீல் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இதில் டோவினோ 23 இன்ஞ் வீல்களை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

பன்முக கன்ட்ரோல்கல் கொண்ட ஸ்டியரிங் வீல், மசாஜ் செய்யக்கூடிய வசதியுடன் கூடிய இருக்கைகள், வெண்டிலேட் இருக்கைகள், சக்திவாய்ந்த மெரிடியன் ஆடியோ  ஆப்ஷன்ஸ், 1430 W ஆம்ப்ளிஃபையர் உடனான நியூ  ஒலிபெருக்கி மற்றும் நான்கு ஹெட்ரெஸ்ட் ஸ்பீக்கர்கள், 29 ஸ்பீக்கர்ஸ், புதிய ரேஞ்ச் ரோவரில் ப்ராக்சிமிட்டி சென்சிங், சாஃப்ட் டோர் க்ளோஸ் மற்றும் அப்ரோச் அன்லாக் உடன் டிப்ளோயபிள் டோர் ஹேண்டில்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

காரில் கெட்ட நாற்றம் வீசுவதை தடுக்க கேபின் ஏர் ப்யூரிஃபிகேஷன் ப்ரோ உள்ளது. இது PM2.5 வடிகட்டுதல் மற்றும் nanoeTM X தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காருக்குள் துர்நாற்றம், பாக்டீரியாக்கள் மற்றும் ஒவ்வாமைகளை கணிசமாகக் குறைக்கிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்