இந்திய சந்தையில் விற்பனையாகும் கார்களில் அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட காரக இருந்துவருவது டாடா மோட்டார் தயாரிப்பில் வெளியாகும் கார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த டாடா கார்களுக்கு போட்டியாக மாருதி சுஸுகி நிறுவனம் களமிறங்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
இந்தியாவில் கார் விற்பனையில் கடந்த சில ஆண்டுகளாகவே எக்ஸ்யூவி மற்றும் எம்பிவி ஆகிய கார்களின் விற்பனையானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில் எம்பிவி சந்தையை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய எம்பிவி ரக கார்கள் முதன்மையான இடத்தை வகித்து வருகின்றன.
இதில் நடப்பு ஆண்டு முதல் இந்த 2 எம்பிவி கார்களும் விற்பனையில் மிக சிறந்த இடத்தை பெற்றுள்ளன. அதில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் எர்டிகா காரனது 14,899 யூனிட்டுகளும் எக்ஸ்எல் 6 காரத்து 4,366 யூனிட்டுகளையும் விற்பனை செய்து அசதியுள்ளது. இந்த இரண்டு மாருதி கார்களின் விற்பனையை ஒன்று சேர்த்தால் மொத்தமாக 19,255 கார்கள் விற்பனையாகியுள்ளன.
கடந்த ஆண்டைவிட அதிகம்:
கடந்த 2021ம் ஆண்டு மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 8,644 எர்டிகா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 14,889 ஆக உயர்ந்துள்ளது. இது 72.25 சதவீத வளர்ச்சியாகும். அதே போல் கடந்த ஆண்டு மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 3,373 எக்ஸ்எல்6 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 4,366 ஆக உயர்ந்துள்ளது. இது 29.44 சதவீத வளர்ச்சியாகும். இந்த கார்களின் விற்பனை அதிகரித்திருப்பது அந்த நிறுவனத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 அப்டேட்டட் வெர்சன்:
இந்த மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 ஆகிய இரு கார்களின் அப்டேட்டட் வெர்சனை அந்த நிறுவனம் சமீபத்தில் தன இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கார்களும் குறிப்பிட்ட சில முக்கியமாக வசதிகளை பெற்றுள்ளன.
மாருதி சுஸுகி எர்டிகா சிறப்பம்சம்:
மாருதி சுஸுகி நிறுவனம் 2022 எர்டிகா காரில், புதிய K15C இன்ஜினை வழங்கியுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 PS பவரையும், 136.8 NM டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மேலும் இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது புத்தம் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த இன்ஜினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்படுகிறது.
மேலும் கூடுதலாக மருதி சுஸுகி எர்டிகா காரில் சிஎன்ஜி தேர்வும் (88 பிஎஸ் பவர் / 121.5 என்எம் டார்க்) வழங்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரானது, ஃபேக்டரி-ஃபிட்டட் சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் இந்த இரு மாடல்களிலும் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட மாடல்களில் ஏராளமான புதிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான காரக அமைந்துள்ளது.
மேலும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு கொண்டுள்ளது.
இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 என மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு இந்த செக்மெண்ட்டில் மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக சமீப காலமாக டாடா நெக்ஸான் இந்த செக்மெண்ட்டில் மற்ற அனைத்து கார்களுக்கும் மிகப்பெரிய போட்டியாக உருவெடுத்துள்ளது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது போல இதன் பாதுகாப்பு அம்சங்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
சமீபகாலமாக மாருதி சுஸுகி நிறுவனம் அது தயாரிக்கும் கார்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. இதன் மூலம் டாடா நிக்சன் போன்ற பாதுகாப்பான கார்களுடன் போட்டியிட முடியும் என நம்புகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…