Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

வாய் பிளக்க வைக்கும் விலையில் ஹார்லி டேவிட்சன் புது மாடல் பைக்.. | Harley Davidson X 500 Price

Nandhinipriya Ganeshan Updated:
வாய் பிளக்க வைக்கும் விலையில் ஹார்லி டேவிட்சன் புது மாடல் பைக்.. | Harley Davidson X 500 PriceRepresentative Image.

ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500:

டுவீலர்களை விரும்பாத இளைஞர்களே இருக்க முடியாது. ஏனென்றால், அந்த அளவிற்கு பல விதமான மாடல்களில் தரமான பைக்குகள் வெளியாகி இளசுகளின் மனதை கவர்ந்த வண்ணம் இருக்கின்றன. அதிலும், நம்ம ஊரு இளைஞர்களுக்கு ப்ரீமியம் ரக பைக்குகளின் மீதான மோகம் சற்று அதிகம் என்றே சொல்லலாம். பல நிறுவனங்களின் பைக்குகள் இருந்தாலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் பைக்குகளுக்கு டிமாண்ட் என்பது அதிகமாகவே இருக்கும். அப்படி இளைஞர்கள் மத்தியில் ஃபேஸான பைக் நிறுவனம் தான் ஹார்லி டேவிட்சன். இந்த பைக்கை வாங்க வேண்டும் என்று பலருக்கும் கனவு இருக்கும். 

தற்போது அதற்கான வாய்ப்பு உருவாக இருக்கிறது. அதாவது, ஹார்லி டேவிட்சன் நிறுவனம், ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 பைக்கை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த மாடலுக்கு அந்நாட்டு மதிப்பில் 44 ஆயிரம் யுவான்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ. 5.3 லட்சம் ஆகும்.

இந்தியாவை பொறுத்தவரை இந்த விலை சற்று அதிகமே. இவ்வளவு விலை போட்டு ஒரு பைக்கை வாங்குவதற்கு 5 லட்சத்திற்கு காரையே வாங்கிடலாம் என்று நம்மில் பலரும் யோசிப்பது புரிகிறது. ஒருவேளை இந்திய பொருளாதாரா நிலைமைக்கு ஏற்ப மறு மதிப்பீடு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தால், ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு பிறகு ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 பிரபலமான பைக்காக மாற வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். 

ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 சிறப்பம்சம்:

பெனெல்லி நிறுவனத்தின் லியோன்சினோ 500 பைக்கின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹார்லி எக்ஸ் 500 மாடல் 500சிசி, லிக்விட்-கூல்டு பேரலல் ட்வின்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 47 bhp மற்றும் 46 Nm டார்க் வெளிப்படுத்தும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புதிய ஸ்டைலில் இந்த பைக்கை வடிவமைத்திருக்கின்றது. குறிப்பாக, இளைஞர்களைக் கவரும் விதமாக பலவிதமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 500 மிமி யுஸ்டி ஃபோர்க் (முன் பக்கம்), மோனோ ஷாக் (பின் பக்கத்திலும்) சஸ்பெஷன்கள் பைக்குகளில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது பக்காவான ரைடிங் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

மேலும், 13 லி பெட்ரோல் டேங்க் மற்றும் 208 கிலோ கர்ப் எடை உடைய இந்த பைக் கருப்பு, ஆரஞ்சு மற்றும் சில்வர் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. 20.6kmpl மைலேஜைக் கொடுக்கக்கூடிய இந்த பைக் 820mm சீட் உயரம் மற்றும் 153mm கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. 

விரைவில் ஹார்லி HD 4XX மாடல்:

இப்படி இருக்கையில், இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஹீரோ மோட்டாகார்ப் கையாண்டு வருகிறது. இந்த கூட்டணி விரைவில் ஹார்லி HD 4XX எனப்படும் 400 சிசி+ எஞ்சின் பொருத்தப்பட்ட பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹீரோ நிறுவனத்தின் இந்த பைக்கிற்கான உற்பத்தி வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் பலமடங்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்