Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

விலை கூடுதலாக இருந்தாலும், அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரும் இதுவே.. அப்படியென்ன இதுல சிறப்பு? | Ola Electric S1 Pro Price 2023 in India

Nandhinipriya Ganeshan Updated:
விலை கூடுதலாக இருந்தாலும், அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரும் இதுவே.. அப்படியென்ன இதுல சிறப்பு? | Ola Electric S1 Pro Price 2023 in IndiaRepresentative Image.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால், நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தின் மூலம் மாறுபட்ட கருத்துக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 'ஓலா எஸ்1' என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் தனது எலக்ட்ரிக் பயணத்தை தொடங்கிய ஓலா நிறுவனம், ஓலா எஸ்1 ப்ரோ, ஓலா எஸ்1 ஏர் போன்ற பல தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயன்பாடுகளை தன்வசம் கொண்டு வந்துள்ளது. அந்தவகையில், ஓலா நிறுவனத்தின் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரீமியம் மாடலான ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பற்றி முழுமையாக இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

விலை கூடுதலாக இருந்தாலும், அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரும் இதுவே.. அப்படியென்ன இதுல சிறப்பு? | Ola Electric S1 Pro Price 2023 in IndiaRepresentative Image

ஓலா எஸ்1 ப்ரோ 2023 விவரக்குறிப்புகள்:

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டாராக ஓலா எஸ்1 ப்ரோ இருந்து வருகிறது. நிறுவனத்தின் அதிக விலைக் கொண்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகன மாடலும் இதுவே ஆகும். நேர்த்தியான வடிவமைப்பு, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்களை கொண்டுள்ள ஓலா எஸ்1 ப்ரோ ஓர் வாட்டர் ப்ரூஃப் வாகனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

மேலும் இந்த ஸ்கூட்டரானது போர்சிலைன் ஒயிட் (Porcelain White), ஆந்த்ராசைட் கிரே, கோரல் கிளாம், ஜெருவா, ஜெட் பிளாக், காக்கி, லிக்விட் சில்வர், மார்ஷ்மெல்லோ, மேட் பிளாக், மிட்நைட் ப்ளூ, மில்லினியல் பிங்க், நியோ மிண்ட் (Neo Mint) போன்ற 12 வகையான வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்1 ப்ரோவில் உள்ள மிட் டிரைவ் ஐபிஎம் மின்சார மோட்டார் 8.5kW அதிகபட்ச ஆற்றலையும், 58Nm உச்ச முறுக்குவிசையையும் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. 

முழுமையாக சார்ஜ் செய்தால் ஸ்கூட்டர் 115kmph வேகத்தில் 181km வரை பயணம் செய்ய முடியும். மேலும், 3.97kWh பேட்டரி பேக் 18 நிமிடங்களில் 75 கிமீ தூரம் செல்லும் அளவிற்கு வேகமாக சார்ஜ் செய்ய முடியும். அதுவே, முழுமையாக சார்ஜ் செய்வதற்கு ஆறரை மணி நேரம் ஆகும். மேலும், இந்த வாகனத்தால் வெறும் 2.9 செகண்டுகளிலேயே 0 - 40 கிமீ வேகத்தை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விலை கூடுதலாக இருந்தாலும், அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரும் இதுவே.. அப்படியென்ன இதுல சிறப்பு? | Ola Electric S1 Pro Price 2023 in IndiaRepresentative Image

ஓலா எஸ்1 ப்ரோ 2023 அம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரையில், முன்புறத்தில் ட்வின்-பாட் ஹெட்லைட், ஏப்ரனில் பொருத்தப்பட்ட ஸ்லீக் எல்இடி இண்டிகேட்டர்கள், பாடி-கலர் முன் ஃபெண்டர், வளைந்த பக்க பேனல்கள், நேர்த்தியான எல்இடி டெயில்லைட், பின்புறத்தில் வெளிப்புற சார்ஜிங் போர்ட் மற்றும் ஒரு ஸ்பிலிட்-ஸ்டைல் ​​பிலியன் கிராப்ரைல் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் 36 லிட்டர் சேமிப்பு இடம் உள்ளது. இதில், இரண்டு ஹெல்மெட்களை வைத்துக்கொள்ளலாம். 

எஸ்1 ப்ரோ, ப்ராக்ஸிமிட்டி லாக்/அன்லாக், ரிமோட் பூட் லாக், கால் அலர்ட், மெசேஜ் அலர்ட், இன்ஃபோடெயின்மென்ட், சைட்-ஸ்டாண்ட் அலர்ட், ஆன்டி-தெஃப்ட் அலர்ட், ஜியோ-ஃபென்சிங் (geo-fencing), வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், ஆன்போர்டு நேவிகேஷன், லிம்ப் ஹோம் மோட் (limp home mode), ரிவர்ஸ் மோட், கெட்-ஹோம் மோட் (get-home mode), டேக்-மீ-ஹோம் லைட்டுகள், எச்எம்ஐ மூட்ஸ் கொண்ட சவுண்ட், எலக்ட்ரானிக் ஸ்டீயரிங் லாக், எச்எம்ஐ பிரைட்னஸ் அட்ஜஸ்டர், வெல்கம் ஸ்கிரீன், ஓடிஏ அப்டேட்ஸ், மேனுவல் எஸ்ஓஎஸ் மற்றும் ஃபைன்ட் மை ஸ்கூட்டர் ஆப்ஷன் (find my scooter) போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான அதிநவீன தொழிநுட்ப செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. இத்துடன் ஹில்-ஹோல்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்ட்; நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என்ற மூன்று ரைடிங் மோட் வசதியும் உள்ளது. 

முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன், OLA S1 Pro இரண்டு சக்கரங்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் அமைப்புடன் வருகிறது. விலை பொறுத்துவரை, இந்தியாவில் எஸ்1 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ.1.4 லட்சம் (On-Road Price) ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் தேடுகிறீர்களானால், Ola Electric S1 Pro நிச்சயமாக முதலிடத்தில் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்