Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கலக்கலான அம்சங்களுடன் கலமிறங்கும் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்.. | Royal Enfield Electric Bike Price

Nandhinipriya Ganeshan Updated:
கலக்கலான அம்சங்களுடன் கலமிறங்கும் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்.. | Royal Enfield Electric Bike PriceRepresentative Image.

பைக் என்றாலே அது ராயல் என்ஃபீல்டு பைக்காக இருக்க வேண்டும் என்பது தான் இளம்தலைமுறையின் விருப்பமாக உள்ளது. இதற்கு காரணம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து தொடர்ந்து, பல்வேறு புதிய மாடல்களை உற்பத்தி செய்து வருகிறது. அதிலும், ட்ரெண்டுக்கு ஏற்ப தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து வருவதே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இம்மாபெரும் வளர்ச்சிக்கு காரணம். அந்த வரிசையில், பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் அனைத்து மாடல்களையும் கலமிறக்கி வரும், ராயல் என்ஃபீல்டு அடுத்ததாக எலக்ட்ரிக் பைக்குகளையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

கலக்கலான அம்சங்களுடன் கலமிறங்கும் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்.. | Royal Enfield Electric Bike PriceRepresentative Image

முதல் எலக்ட்ரிக் பைக்:

தற்போது, இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதனால், முன்னணி நிறுவனங்கள் பலவும் எலக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. அந்த வரிசையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இறங்கியுள்ளது. அதன்படி, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த புதிய மாடலை உருவாக்கும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. 

முதல் மாடலின் பெயர் என்ன?

இந்திய சந்தை மட்டுமல்லாது, சர்வதேச சந்தைகளையும் குறிவைத்துதான் ராயல் என்பீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் பைக்குக்களை உருவாக்கவுள்ளது. மேலும், ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வரும் இந்த முதல் எலக்ட்ரிக் பைக் 'L1A' எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கலக்கலான அம்சங்களுடன் கலமிறங்கும் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்.. | Royal Enfield Electric Bike PriceRepresentative Image

மைலேஜ்:

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் பைக் அடுத்த வருடம் விற்பனைக்கு வந்து விடும் என்பதால், அதற்கு முன்பாக இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாகவே காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. பொதுவாக, தொலைதூர பயணங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் பைக் என்றால் அது ராயல் என்ஃபீல்டு பைக்குகளாக தான் இருக்கின்றன. எனவே, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 250 கிமீ பயணிக்க கூடிய வகையிலான பேட்டரி வழங்கப்படலாம்.

விலை:

ராயல் என்ஃபீல்டு பைக்குகள் என்றாலே விலை கூடுதலாக இருக்கும். எனவே, எலக்ட்ரிக் பைக்கின் சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் அதிகப்படுத்தினால் பெட்ரோல் பைக்குகளை போலவே தொலைதூர பயணங்களையும் எளிதாக மேற்கொள்ள கூடிய வகையில் இந்த எலக்ட்ரிக் பைக்கின் விலை இருக்கலாம். அந்தவகையில், இந்த எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 3 லட்சம் ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்