Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹோண்டா டியோ 125 மாடல் வருகிறதா? எகிற வைக்கும் அப்டேட்..! | Honda Dio 125 Launch Date in India

Baskaran. S Updated:
ஹோண்டா டியோ 125 மாடல் வருகிறதா? எகிற வைக்கும் அப்டேட்..! | Honda Dio 125 Launch Date in IndiaRepresentative Image.

இந்தியாவில் இருசக்கர வாகன தயாரிப்பில் ஹோண்டா நிறுவனம் முன்னணியில் உள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டது. அது புதிய ஹோண்டா டியோ 125 மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹோண்டா ஆக்டிவா மாடல் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, டியோ மாடலை அறிமுகம் செய்தது. இதுவும் வரவேற்பை பெற்றதால், இதன் அடுத்த வெர்ஷன்களை அறிமுக செய்ய அந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது வெளியான டீசரில் முன்பக்க லைட் மட்டும் இருப்பது போல் இருந்தது. அதுமட்டுமல்லாமல் அப்டேட்க்காக காத்திருங்கள் என்ற வாசகமும் அந்த டீசரில் இடம்பெற்றிருந்தது.

இந்த டீசரில் எக்ஸாஸ்ட் சவுண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இதைப்பார்க்கும் போது சற்று ஸ்போட்டியான ஸ்கூட்டராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இது இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாகலாம். தற்போது சந்தையில் ஹோண்டா டியோ 110 விற்பனையாகி வரும் நிலையில் 125மாடல் அறிமுகம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்ததாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த இரு மாடல்களையும் வேறுபடுத்தி காட்ட கலர் மற்றும் இன்ஜின் சிசியிலும் மாற்றம் இருக்கும்.   

இதன் இஞ்ஜினை பொருத்தவரை ஆக்டிவா 125 மற்றும் கிரேசியா 125 ஆகிய ஸ்கூட்டர்களில் உள்ள அதே 123.9 சிசி ஏர்கூல்டு இன்ஜின் தான் பொருத்தப்படுகிறது. இது 8.18பிஎச்பி பவரையும் 10.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோ ஸ்டார்ட், ஸ்டாப் பங்க்ஷனை கொண்டுள்ளது. 

இந்த ஸ்கூட்டர் ஹோண்டாவின் ஹச் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் படி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எல்இடி லைட்டிங், ஸ்டாண்ட் கட் ஆப், பாஸ் ஸ்விட்ச் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். ஆக மொத்தத்தில் ஆக்டிவாவின் மார்க்கெட்டை இந்த டியோ 125 காலி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தற்போது ஹோண்டா நிறுவனம் புதிய 350 சிசி பைக்கை தயார் செய்து வருகிறது. இது ஹோண்டா ஹெனஸ், சிபி 350 மற்றும் சிபி 350 ஆர்எஸ் ஆகிய பைக்கில் தயாராகும் அதே பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்படுகிறது. இது இதுவரை எந்த வகையான 350 பைக் என்ற தகவல் வெளியாகவில்லை. ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மற்றும் யெஸ்டி ரோடுஸ்டர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த பைக்கில் ஹைனஸ் மற்றும் சிபி 350 ஆர்எஸ் ஆகிய பைக்கில் உள்ள அதே இன்ஜின் தான் பொருத்தப்படுகிறது என்பதால் இந்த பைக் இஞ்சின் 350 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜினாகத்தான் இருக்கும். இது 21 பிஹெச்பி பவரையும் 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். ஹோண்டா இந்த இன்ஜினை புதிய பைக் இதுக்காக டிவீக் செய்தாலும் செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்