Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லிட்டருக்கு 27 கி.மீ மைலேஜ் தரும் கார்..! இத விட வேற என்ன வேணும்… | Honda Elevate

Gowthami Subramani Updated:
லிட்டருக்கு 27 கி.மீ மைலேஜ் தரும் கார்..! இத விட வேற என்ன வேணும்… | Honda ElevateRepresentative Image.

ஹோண்டா நிறுவனம் தற்போது மிட் சைஸ் அளவிலான எஸ்யூவி ரக கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த Honda Mid-Size SUV  செக்மென்டில் புதிய கார்களை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

அதன் படி, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட கார்கள் மிகப் பிரபலமாக இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தற்போது 2023 ஆம் ஆண்டின் ஹோண்டாவின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் விரைவில் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த புதிய வகை காருக்கு ஹோண்டா நிறுவனம் எலவேட் என்ற பெயர் சூட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honda Elevate சிறப்பம்சங்கள்

ஹோண்டாவின் இந்த புதிய வகை கார் ஆனது பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருவதாகும்.

இந்த கார் ஆனது, LED Headlights, Roof Rails போன்றவற்றைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. SUV கார் 4,200 முதல் 4,300 மிமீ நீளத்தைக் கொண்டிருக்கும்.

10.2 inch அளவில் Touchscreen உடன் கூடிய இன்போடெயின்மென்ட் பேனலைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், Auto climate control, cruise control, key-less entry, rear AC vents போன்றவற்றைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த காரில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரியர் வியூ கேமரா, ABS, EBD, மற்றும் Multiple Airbags-ஐக் கொண்டுள்ளது.

New Honda SUV அறிமுகம்

ஹோண்டாவின் இந்த அசத்தல் கார் ஆனது, இந்தியாவில் ஜூன் 6, 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம், இந்த கார் ஆகஸ்ட் 2023-ல் மட்டுமே விற்பனைக்கு வரும் எனவும் கூற்பபடுகிறது.

Honda Elevate Price in India

ஹோண்டா எலவேட் கார் ஆனது ரூ.12 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்