பைக் என்றாலே அது ராயல் என்ஃபீல்டு பைக்காக இருக்க வேண்டும் என்பது தான் தற்போது இளம்தலைமுறையினரின் விருப்பமாக இருக்கிறது. இதற்கு காரணம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்துக் கொண்டு தொடர்ந்து, பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதிலும், ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துக்கொள்வதும் இந்நிறுவனம் உலகின் முதன்மையான பைக் தயாரிப்பு நிறுவனமாக வளர்ச்சியடைவதற்கான காரணம் என்றே சொல்லலாம். ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் எத்தனையோ மாடல் இருக்கிறது. அதில் டாப் 10 ராயல் என்ஃபீல்டு பைக் மாடல்களின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, இன்ஜின், மைலேஜ், சிறப்பு என அனைத்தையும் முழுமையாக இப்பதிவின் மூலம் பார்க்கலாம்.
1932 ஆம் ஆண்டு முதல் மிகவும் பிரபலமான மாடலாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) பைக்கில் தற்போது கிக் ஸ்டார்ட் மட்டும் வழங்கப்பட்டு, தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பழைய லோகோவுடன் கருப்பு நிறத்தில் இப்பவும் கம்பீரம் குறையாமல் விற்பனையாகிறது.
➺ இன்ஜின் (CC): 346 CC
➺ மைலேஜ் (Mileage): 38 kmpl
➺ பவர் (Power): 19.1 [email protected]
➺ டார்க் (Torque): 28 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 186 to 191 kg
➺ ஆன்ரோடு விலை (On Road Price): ₹ 1,81,698
புல்லட் 350 பைக்கினை அடிப்படையாக கொண்டு கூடுதலாக எலக்ட்ரிக் ஸ்டார்டர் பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ஈஎஸ் (Royal Enfield Bullet 350 ES) மாடல் ஜெட் பிளாக், ரீகல் ரெட் மற்றும் ராயல் ப்ளூ என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
➺ இன்ஜின் (CC): 346 CC
➺ மைலேஜ் (Mileage): 37 kmpl
➺ பவர் (Power): 19.1 [email protected]
➺ டார்க் (Torque): 28 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 189 kg
➺ ஆன்ரோடு விலை (On Road Price): ₹ 1,91,134
அதிகளவில் விற்பனையாகும் கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு விதமாக கிடைக்கிறது. இந்த பைக்கில் 349சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு மொத்தம் 12 நிறங்களில் கிடைக்கிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற கிளாசிக் பைக்கில் ஸ்போக் வீல் கொண்ட ரெட்டிச் அடிப்படையில் க்ரீன், கிரே மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. அதேபோல், டூயல் சேனல் ஏபிஎஸ் பைக்கில் அலாய் வீல் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.
➺ இன்ஜின் (CC): 349 CC
➺ மைலேஜ் (Mileage): 35 to 37 kmpl
➺ பவர் (Power): 20.2 [email protected]
➺ டார்க் (Torque): 27 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 192 to 195 kg
➺ ஆன்ரோடு விலை (On Road Price): ₹ 2,17,001 to ₹ 2,50,945
சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) பைக் இளம்தலைமுறையினரை கவரும் விதமாக அட்டகாசமான ஸ்டைலில் வடிவமைப்பினை பெற்றுள்ளது. ரெட்ரோ மற்றும் மெட்ரோ டேப்பர், மெட்ரோ ரீபெல் என இரு விதமான வேரியண்டில் மொத்தமாக 8 வித நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
➺ இன்ஜின் (CC): 349 CC
➺ மைலேஜ் (Mileage): 36.5 kmpl
➺ பவர் (Power): 20.2 [email protected]
➺ டார்க் (Torque): 27 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 177 to 181 kg
➺ ஆன்ரோடு விலை (On Road Price): ₹ 1,73,801 to ₹ 1,97,681
அட்வென்ச்சர் ஸ்டைலை கொண்ட ஆஃப்ரோடு சாகசத்துக்கு ஏற்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக் 6 விதமான நிறங்களில் கிடைக்கிறது. 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்ற இந்த மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
➺ இன்ஜின் (CC): 411 CC
➺ மைலேஜ் (Mileage): 30 to 33 kmpl
➺ பவர் (Power): 24.3 [email protected]
➺ டார்க் (Torque): 32 [email protected] - 4500rpm
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 194 to 199 kg
➺ ஆன்ரோடு விலை (On Road Price): ₹ 2,54,349 to ₹ 2,68,186
ஹிமாலயன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 (Royal Enfield Scram 411) பைக்கில் ஒற்றை இருக்கை கொண்ட 19 அங்குல முன்புற வீல் கொடுக்கப்பட்டுள்ளது. 7 விதமான நிறங்களில் கிடைக்கும் இந்த மாடலும் அதிகம் ஈர்க்கப்படும் மாடலாக இருந்து வருகிறது.
➺ இன்ஜின் (CC): 411 CC
➺ மைலேஜ் (Mileage): 32 kmpl
➺ பவர் (Power): 24.3 [email protected]
➺ டார்க் (Torque): 32 [email protected] - 4500rpm
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 185 kg
➺ ஆன்ரோடு விலை (On Road Price): ₹ 2,40,357 to ₹ 2,46,388
க்ரூஸர் ரக ஸ்டைலை பெற்ற ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக் இந்தியாவில் மிகவும் பிரபலமான மாடல். மேலும் இந்த பைக் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர் நோவா என மூன்று வகையான வேரியண்டில் 11 வித வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது.
➺ இன்ஜின் (CC): 349 CC
➺ மைலேஜ் (Mileage): 41.88 kmpl
➺ பவர் (Power): 20.4 [email protected]
➺ டார்க் (Torque): 27 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 191 kg
➺ ஆன்ரோடு விலை (On Road Price): ₹ 2,29,157 to ₹ 2,51,822
மீட்டியோர் 350 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) பைக் ஆஸ்ட்ரல், இன்டர்ஸ்டெல்லர், மற்றும் டூரர் என மூன்று விதமான வேரியண்டில் செலஸ்டியல் ரெட், செலஸ்டியல் ப்ளூ, ஆஸ்ட்ரல் ப்ளூ, இன்டர்ஸ்டெல்லர் கிரே, இன்டர்ஸ்டெல்லர் கிரீன், ஆஸ்ட்ரல் கிரீன் மற்றும் ஆஸ்ட்ரல் பிளாக் என 7 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது.
➺ இன்ஜின் (CC): 648 CC
➺ மைலேஜ் (Mileage): 25 kmpl
➺ பவர் (Power): 46.53 [email protected]
➺ டார்க் (Torque): 52.3 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 241 kg
➺ ஆன்ரோடு விலை (On Road Price): ₹ 3,99,257 to ₹ 4,32,022
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஸ்டைலை அடிப்படையாக கொண்ட இந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) பைக்கானது UK இல் விற்பனையாகும் சிறந்த பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக் 7 விதமான நிறங்களில் கிடைக்கிறது.
➺ இன்ஜின் (CC): 648 CC
➺ மைலேஜ் (Mileage): 21 kmpl
➺ பவர் (Power): 46.53 [email protected]
➺ டார்க் (Torque): 52 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 202 kg
➺ ஆன்ரோடு விலை (On Road Price): ₹ 3,49,243 to ₹ 3,79,752
ஒரிஜினல் கான்டினென்டல் ஜிடி என்பது 1960 களில் ஆங்கில ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்திய ஒரு மாடலாகும். அப்பவே மிகவும் போட்டி நிறைந்த பைக்குகளில் இதுவும் ஒன்று. தற்போது இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 (Royal Enfield Continental GT 650) ஸ்டேண்டர்டு, கஸ்ட்டம், குரோம் என மூன்று விதமான வேரியண்டுகளில் 6 வித வண்ண தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
➺ இன்ஜின் (CC): 648 CC
➺ மைலேஜ் (Mileage): 24 kmpl
➺ பவர் (Power): 46.53 [email protected]
➺ டார்க் (Torque): 52.3 [email protected]
➺ கர்ப் வெயிட் (Kerb Weight): 202 kg
➺ ஆன்ரோடு விலை (On Road Price): ₹ 3,66,675 to ₹ 3,95,822
இதையும் படிங்க:
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 vs ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 எது பெஸ்ட்?
வாயை பிளக்க வைக்கும் விலையில் ஹார்லி டேவிட்சன் புது மாடல் பைக்..
எக்கச்சமான வசதிகளுடன் களமிறங்கும் டாடா அல்ட்ராஸின் சிஎன்ஜி மாடல்..
கலக்கலான அம்சங்களுடன் கலமிறங்கும் ராயல் என்ஃபீல்டின் முதல் பைக்..
பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் புதிய டி2 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு?
இந்த காருல இப்படி ஒரு சிறப்பம்சமா? ஸ்டைலான லுக்கில் டாடா நிறுவனத்தின் புது ரிலீஸ்..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…