மஹிந்திரா நிறுவனம் தனது வாகன விற்பனையில் 23% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், Scorpio N, Bolero, மற்றும் XUV700 போன்ற வாகன தயாரிப்பாளர்களின் விற்பனை, எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளது.
பிரபல வாகன உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் மஹிந்திரா நிறுவனம், பல்வேறு அட்டகாசமான அம்சங்களுடன் கூடிய வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. அதன் படி, வாகன உற்பத்திக்கு ஏற்றவாறு வாகனங்களின் விற்பனையும் அதிக அளவில் உள்ளது.
மும்பையைத் தளமாகக் கொண்ட, இந்த மஹிந்திரா நிறுவனத்தின் SUV தயாரிப்பாளர், கடந்த மாதத்தில் 32,883 SUV-களை விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலத்தில் இதன் உள்நாட்டு விற்பனையானது 26,632 ஆக இருந்தது. அதன் படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு 23% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 32,883 SUV –களை விற்பனை செய்தது. அதன் படி, உள்நாட்டு SUV விற்பனையில் 23% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதே சமயம், MoM அடிப்படையில், இதன் விற்பனையானது 5.2% குறைந்து காணப்படுகிறது.
மேலும், மே 2023 ஆண்டில் உள்நாட்டு விற்பனையானது 26,632 ஆகும். ஏப்ரல் 2023-ல் இந்நிறுவனம் 34,694 யூனிட்டுகளை விற்பனை மே 2023-ல் மஹிந்திரா நிறுவனம் 2,616 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்தது. இது, கடந்த மே 2022-ல் ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்டுகளை (2,028 யூனிட்டுகள்) விட அதிகமாகும்.
செமி கண்டக்டர்கள் கிடைக்காத காரணத்தால், ஏர்பேக் ECUகளின் விற்பனைச் சங்கிலியில் இடையூறுகள் ஏற்பட்டது. இருப்பினும், விற்பனை எண்ணிக்கையை அடைய முடிந்தது. அதே சமயம், SUV மற்றும் பிக்-அப்கள் இரண்டின் விற்பனை அளவும், எஞ்சின் தொடர்பான உதிரிபாகங்களில் ஏற்படக்கூடிய இடையூறுகளைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், மஹிந்திரா நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…