Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்டைலான லுக்கில் களமிறங்கும் புதிய கேடிஎம் 390 டியூக் பைக்.. | New KTM Duke 390 Launch Date in India

Nandhinipriya Ganeshan Updated:
ஸ்டைலான லுக்கில் களமிறங்கும் புதிய கேடிஎம் 390 டியூக் பைக்.. | New KTM Duke 390 Launch Date in IndiaRepresentative Image.

அடுத்த தலைமுறை கேடிஎம் 390 டியூக் பைக்கின் [Next Gen KTM 390 Duke] படங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. அதாவது, கேடிஎம் 390 டியூக் பைக்கின் வடிவமைப்பு முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய மாடலை விட முற்றிலும் ஸ்டைலான தோற்றத்துடன் களமிறங்கும் இந்த பைக்கானது 1290 சூப்பர் டியூக் [1290 Super Duke] பைக் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பைக்கின் ஹெட்லைட் யூனிட் சூப்பர் டியூக் பைக்கில் இருப்பது போன்றே பொருத்தப்பட்டுள்ளது. 

அதேபோல், LED DRLகள் இன்னும் அதே பூமராங் போன்ற வடிவமைப்பையே கொண்டிருக்கிறது, ஆனால் முன்பை விட சற்று அகலமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பெட்ரோல் டேங்க் வடிவிலும் சற்று அளவு மாற்றப்பட்டு உள்ளது. அதாவது முன்பை விட சற்று கூர்மையாகவும் நீளமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 'டியூக்' என்று ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தில்  பெரியதாக கொடுக்கப்பட்டுள்ளது. 

இன்ஜின்:

இன்ஜினை பொறுத்த வரை, இந்த பைக்கின் தற்போதைய மாடலில் இருக்கும் அதே 373 சிசி லிக்விட்  -கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் [373cc liquid-cooled, single-cylinder engine] தான் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 42.9 பிஹச்பி@9,000rpm பவரையும், 37 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் மாடலும் அதே பவர் ஃபிகர்களை பயன்படுத்தலாம். ஆனால், டியூனிங்கில் மட்டும் சிறிய வித்தியாசத்தை பார்க்கலாம். கியர் விகிதமும் [gear ratio] கூட ஒட்டுமொத்தமாக ஒரு மென்மையான இயக்கத்திற்காக மாற்றப்படலாம். புதிய டியூக்கின் மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் அதன் வன்பொருள் அமைப்பாகும். WP USD முன் ஃபோர்க்குகள் தக்கவைக்கப்படலாம் என்றாலும் கூட, இந்தப் படத்தில் காணப்படுவது போல், பின்புற அதிர்ச்சி இப்போது ஈடுசெய்யப்பட்டுள்ளது.

மேலும், புதிய பயோனிக் அலாய்களில் பொருத்தப்பட்ட பெரிய மற்றும் இலகுவான முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்கைப் பெறுகிறது. இந்த பிரேக்கிங் அமைப்பு தற்போதைய ஜென் RC 390 பைக்கில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் டயர்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

அம்சங்கள்:

அம்சங்களை பொறுத்த வரை, இந்த புதிய பைக்கில் முழு LED வெளிச்சம், மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் தேவையான ரீட்அவுட்களுடன் கூடிய TFT டேஷ், IMU, ஏபிஎஸ் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் ஆகியவை இடம்பெறுகிறது. இத்தனை மாற்றங்களுடன் வரக்கூடிய புதிய கேடிஎம் 390 டியூக் பைக்கின் விலையிலும் மாற்றம் வரலாம். 

வண்ண விருப்பம்:

தற்போதைய மாடல் டார்க் கால்வனோ மற்றும் லிக்விட் மெட்டலின் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் பெரும்பாலும் கருப்பு மற்றும் KTM இன் சிக்னேச்சர் ஆரஞ்சு நிறத்தின் கலவையாகும். ஆனால் புதிய டியூக் பைக்கின் நிறம் நீலம் மற்றும் வெள்ளை ஆகியவற்றின் கலவையாக இருக்கும். இது உண்மையில் பைக்கின் ஒட்டுமொத்த லுக்கையும் உயர்த்தி கொடுக்கும்.

விலை:

அதன்படி, தற்போது உள்ள மாடல் ரூ. 2.97 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், New KTM 390 Duke பைக்கின் விலை ரூ. 3.2 லட்சமாக அதிகரிக்கப்படலாம். இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டதும் நிச்சயமாக BMW G 310 R, Honda CB300R, QJ மோட்டார் SRK 400 மற்றும் பஜாஜ் டோமினார் 400 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தனை புதிய மாற்றங்களுடன் வரும் இந்த பைக் இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்